சினிமாவில் நடித்த நடிகர் நடிகைகளை விட குறும்படங்கள் நடத்த பல்வேறு நடிகர் நடிகைகள் சமூகவலைதளத்தில் விரைவில் பிரபலம் அடைந்து விடுகிறார்கள். அந்தவகையில் தமிழில் கடந்த 2011 ஆம் ஆண்டு வெளியான லட்சுமி குறும்படத்தில் நடித்து ஒரே நாளில் சமூகவலைதளத்தில் மிகவும் பிரபலம் அடைந்தவர் நடிகை லட்சுமி பிரியா சந்திரமௌலி. குறும்பட இயக்குனர் சர்ஜூன் என்பவர் இயக்கிய லட்சுமி குறும்படம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. மேலும், பல்வேறு தரப்பில் இருந்தும் இந்த குறும்படத்திற்கு பல்வேறு எதிர்ப்புகளும் கிளம்பியது. ஆனால், அணைத்து எதிர்ப்பையும் மீறி இந்த குறும்படம் மிகவும் வைரலானது.
அன்றாட வாழ்க்கையில் பல்வேறு ஆளாகும் பிரச்சனைகளுக்கும் மன அழுத்தத்திற்கும் ஆளாகும் திருமணமான ஒரு பெண் யாரென்றே தெரியாத அறிமுகமில்லாத ஒரு ஆனை சந்தித்து, பின்னர் அவருடன் நெருங்கி பழகுகிறார். பின்னர் அந்த நட்பினால் அவர் எவ்வளவு தூரம் செல்கிறது ? இறுதியில் அந்த பெண் எடுக்கும் முடிவு என்ன என்பதுதான் இந்த குறும்படத்தில் மையக் கருத்தாக இருந்தது. இந்த குறும்படத்தை மிகவும் புரட்சிகரமான படம் என்று கூறினாலும், ஒரு சிலரோ பெண்கள் சமுதாயத்தை இழிவு படுத்துவது போல இந்த குறும்படம் இருக்கிறது என்று குற்றம் சாட்டி இருந்தார். அதேபோல இந்த குறும்படத்தில் பயன்படுத்தப்பட்ட பாரதியாரின் பாடலுக்கு பல்வேறு எதிர்ப்புகளும் கிளம்பியது.
கடும் விமர்சனங்கள் வரும் என தெரிந்தே எடுக்கப்பட்ட இந்த குறும்படத்தில் நடித்த லட்சுமிக்கு பல்வேறு தரப்பில் இருந்து கடுமையான எதிர்ப்புகளும் விமர்சனங்களும் வந்தன. இருப்பினும் இந்த குறும்படம் மூலம் வேறு ஆடவனுடன் உறவு வைப்பதோடு, அதை தொடரப்போவதாக கணவனிடம் மறைமுகமாக சொல்லி அந்த குறும்படம் நிறைவு செய்யப்பட்டது. அவரது கணவருடன் உடலுறவு செய்யும் காட்சிகளை தயக்கமின்றி இவர் செய்திருந்தார். அப்போதும் முகத்தில் பல எக்ஷ்பிரஷன்ஸ்களை அவர் காட்டியிருந்தார். இதுபோன்ற காட்சி குறும்படத்தில் இடம் பெற்றது மிகப்பெரிய கட்டுடைத்தலாக வர்ணிக்கப்படுகிறது.
ஒரே படத்தில் ஹோம்லியாகவும், தைரியமாகவும் காட்சிகளில் நடித்த லட்சுமி, இதற்கு முன்பு களவு என்ற படத்தில் தம்மடிக்கும் காட்சியில் நடித்திருந்தார்.. களைந்துவிடுதல் என்ற பொருளில் ஆன படம் இது. அந்த படத்தில் ஹரிஷ் உத்தமனும் நடித்திருந்தார். லட்சுமி படத்தில் ஹோம்லியான லுக்கில் இருந்த லட்சுமி அந்தப்படத்தில் பாடு மாடர்ன் பெண்ணாக காட்சி அளித்திருந்தார் மேலும் அந்த படத்தில் யார் என்றே தெரியாத ஒரு ஆணுடன் இப்படி லட்சுமி பல்வேறு வகையான காட்சிகளில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்திருந்தார்.
முன்தினம் பார்த்தேனே என்ற படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார். மேலும் சுட்ட கதை என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த லட்சுமி லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்த மாயா திரைப்படத்தில் நயன்தாராவின் ஜோடியாக நடித்திருந்தார் மேலும் மலையாள நடிகர் நிவின் பாலி நடிப்பில் வெளியான ரிசி திரைப்படத்தில் ஒளிப்பதிவாளராக இருந்து நடிகரான நடராஜன் சுப்பிரமணியத்தின் ஜோடியாகவும் நடித்து இருந்தார். பின் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் கலக்கி வந்தார். இப்பொது, சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த நிலையில் புரட்சி நாயகி லக்ஷ்மி, திருமணம் செய்து கொண்டதாக சமீபத்தில் சில தகவல்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.
அவர் திருமணம் செய்துகொண்ட நபர் வேறு யாரும் இல்லை விவிஎஸ் லக்ஷ்மன் 281, டோன்ட் டெல் தே கவர்னர் போன்ற புத்தகங்களை எழுதிய பிரபல எழுத்தாளர் வெங்கட்ராகவன் சீனிவாசன் என்பவர் தான் லட்சுமி திருமணம் செய்து கொண்டுள்ளார். ஆனால், இவர்கள் திருமணம் செய்து கொண்ட எந்த ஒரு புகைப்படமும் சமூக வெளியாகியுள்ளது.