சினிமாவைப்பொறுத்தவரை இருந்தால் ராஜா இல்லையேல் ரோஜா என்ற நிலைமைதான் பல்வேறு நடிகர் நடிகைகளுக்கு நேர்ந்துள்ளது. அதிலும் துணை கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகர்கள் என்றால் அவர்களின் சினிமா வாழ்விற்கு ஒரு உத்தரவாதம் இல்லை என்பது பலரும் அறிந்த ஒரு விஷயம் தான் அந்தவகையில் பரத் மற்றும் சந்தியா நடிப்பில் வெளியான காதல் படத்தில் நடித்த பல்லு பாலு என்ற நடிகர் வறுமையின் பிடியில் சிக்கி அப்பா அம்மாவை இழந்து ஆட்டோவில் அனாதை பிணமாக கண்டெடுக்கப்பட்டுளளார்.

காதல் படத்தில் நீங்க ஏன் ஹீரோ நடிக்கணும்னு ஆசைப்படுறீங்க, அமெரிக்கா மாப்பிள்ளை, அண்ணன், தம்பி, நண்பன் அப்படி ஏன் நீங்க பண்ணக்கூடாது என்று உதவி இயக்குனர் கேட்கும் கேள்விக்கு அந்த இளைஞர், ‘நடிச்சா ஹீரோதான். நான் வெயிட் பண்ணுறேன். அப்புறம் கொஞ்சம் அரசியல், சி.எம்., அப்புறம் டெல்லி, அதுபோதும்’ என்று வசனம் பேசி அசத்தியிருப்பார்.

Advertisement

காதல் படத்தில் விருச்சககாந்த் என்ற கதாபாத்திரத்தில் நடித்த ஸ்ரீராம் கதை மிகவும் அவலானது. காதல் படத்திற்குப் பிறகு ஸ்ரீராமி ற்கு சரியான பட வாய்ப்புகள் அமையவில்லை. காதல் படத்திற்கு பின்னர் வேட்டைக்காரன் படத்தில் ஒரு காட்சியில் ‘அந்த பெண்ணை நான் கட்டக்கொள்கிறேன்’ என்று இவர் பேசியதும் . அந்த கொசுவை அடிங்கடா என்று விஜய் சொல்வார். அந்த படத்தில் தான் பல்லு பாலுவை கடைசியாக நாம் தெளிவாக பார்த்தது போல ஒரு ஞாபகம்.

அதன் பின்னர் தூங்கா நகரம் உள்ளிட்ட 10 படங்கள் நடித்துள்ள பல்லு பாலு, அதன் பின்னர் சினிமா வாய்ப்புகள் இல்லாமல் பல கம்பெனிகளில் பட வாய்ப்பிற்காக ஏறி இறங்கி அலைந்துள்ளார். ஆனால், சரியான பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இதற்கிடையில் இவரது அம்மா அப்பாவும் காலமாகிவிட்டனர். இதனால் ஆதரவற்று கிடந்த இவர் கோவிலில் பிச்சை எடுத்தார். . அன்றாடம் சாப்பிட இரண்டு இட்லீ கூட இல்லாமல் கோவில்லு வரும் அனைவரிடமும் பிச்சை எடுத்து சாப்பிட்டு வந்தார்.

Advertisement

இதனை அறிந்த நடிகர் தீனா மற்றும் திரௌபதி இயக்குனர் மோகன் இவருக்கு இயன்ற உதவிகளை செய்தனர். அதே திரைத்துறையினர் சிலர் அவருக்கு உதவி செய்தனர். ஆனால் ஊரடங்குக்கு பிறகு பாபுவின் நிலைமை மிகவும் மோசமடைந்துள்ளது. இந்நிலையில் சாலையோரம் நின்ற ஆட்டோவில் படுத்து உறங்கிய அவர் காலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இந்த விஷயம் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
Advertisement