’16 ஆண்டுக்கு முன் இதே நாள்’ – மீண்டும் சந்தித்த பரத் மற்றும் சந்தியா. புகைப்படத்தை பகிர்ந்த பரத்.

0
1590
kadhal
- Advertisement -

சினிமாவை பொறுத்த வரை ஒரு சில திரைப்படங்கள் காலத்தை தாண்டி ரசிகர்கள் மத்தியில் நீங்காத இடத்தை பிடித்துவிடுகிறது. அந்த வகையில் சங்கர் தயாரிப்பில் பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் பரத் மற்றும் சந்தியா நடிப்பில் வெளியான ‘காதல்’ திரைப்படம் ரசிகர்கள் மனதில் நீங்காத ஒரு திரைப்படம் தான். 2004 ஆம் ஆண்டு டிசம்பர் 17 ஆம் தேதி இந்த திரைப்படம் வெளியாகி இருந்தது. இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோ, ஹீரோவாக அறிமுகமானவர்கள் பரத் மற்றும் சந்தியா.

-விளம்பரம்-
Image

இந்த படத்தில் ஹீரோவாக அறிமுகமான நடிகர் பரத், இந்த படத்திற்கு முன்பாகவே சங்கர் இயக்கிய பாய்ஸ் படத்தில் ஒரு முக்கிய கதாபத்திரத்தில் நடித்து இருந்தாலும் இவர் ஹீரோவாக அறிமுகமானது என்னவோ இந்த படத்தின் மூலம் தான் . அதே போல இந்த படத்தின் மூலம் தான் நடிகை சந்தியா தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இந்த படத்தில் அறிமுகமானதால் தான் இவருக்கு காதல் சந்தியா என்று பெயரும் வந்தது.

- Advertisement -

இந்த படத்திற்கு பின்னர் இருவரும் இணைந்து ‘கூடல் நகர்’ என்ற படத்தில் கூட நடித்து இருந்தார்கள். ஆனால், காதல் திரைப்படம் அளவிற்கு அந்த படம் வெற்றிபெறவில்லை. காதல் திரைப்படத்திற்கு பின்னர் பரத் மற்றும் சந்தியா இருவரும் பல படங்களில் நடித்தார்கள். இதில் சந்தியா இறுதியாக கத்துக்குட்டி என்ற படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். ஆனால், அந்த படத்திற்கு பின்னர் இவரை வேறு எந்த படத்திலும் காண முடியவில்லை.

இப்படி ஒரு நிலையில் காதல் திரைப்படம் வெளியாகி இன்றோடு 17 ஆண்டுகள் ஆனதை அடுத்து பரத் மற்றும் சந்தியா இருவரும் ஒன்றாக சந்தித்த புகைப்படங்களை தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார் நடிகர் பரத். அதில் ‘இதே நாள், 16 ஆண்டுகளுக்கு முன்னர் டிசம்பர் 17, 2004. என் வாழ்க்கையை மாற்றிய நாள், காதல் என்னுடைய பயணத்தில் ஒரு மைல்கல் ‘ என்று குறிப்பிட்டுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement