தமிழ் சினிமா உலகில் உள்ள முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார் விஜய் சேதுபதி. இவரை அதிகம் மக்கள் செல்வன் என்று தான் அழைக்கிறார்கள். விஜய் சேதுபதி படம் என்றாலே திருவிழா போன்று திரையரங்களில் கூட்டம் இருக்கும். அந்த அளவிற்கு அவருடைய நடிப்பும் படங்களும் உள்ளது. விஜய் சேதுபதியின் நடிப்பும், பேச்சும் இயல்பாகவே இருக்கும். இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே வேற லெவல் தெறிக்க விட்டது. தமிழ் சினிமா உலகில் நுழைந்த குறுகிய நாளிலேயே தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியவர் நடிகர் விஜய் சேதுபதி.
தன்னுடைய எதார்த்தமான நடிப்பும், பேச்சும் மூலம் தன்னுடைய சினிமா உலகில் தனக்கென ஒரு முத்திரையைப் பதித்தார். 2016ஆம் ஆண்டு நளன் குமாரசாமி எழுதி இயக்கிய படம் தான் காதலும் கடந்து போகும். இப்படத்தில் விஜய் சேதுபதி, மடோனா செபாஸ்டியன், சமுத்திரகனி உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைத்திருந்தார். இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இந்த படத்தின் கிளைமாக்ஸ் காட்சி வீடியோ ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது.
இது கொரியன் படத்தில் இருந்து சூட்டப்பட்டது என்ற தகவல் வெளியாகி உள்ளது. காதலும் கடந்து செல்லும் படத்தின் கிளைமாக்ஸ் காட்சி அப்படியே கொரியன் படத்தின் கிளைமாக்ஸ் காட்சியை போல் உள்ளது. இந்த படம் மை டியர் டெசுபராடோ எனும் கொரிய மொழி படத்தின் தழுவல் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தகவல் இணையதளங்களில் காட்டுத்தீயாய் பரவி வருகின்றது. இதை பார்த்து ரசிகர்கள் அனைவரும் ஆச்சிரியத்தில் உள்ளார்கள். தற்போது இவர் கதாநாயகனாக மட்டுமில்லாமல் படங்களில் வில்லன் கதாபாத்திரத்திலும் நடித்து வருகிறார்.
கடந்த ஆண்டு ரஜினிகாந்த் நடிப்பில் வந்த பேட்ட படத்தில் ரஜினிக்கு வில்லனாக விஜய் சேதுபதி நடித்திருந்தார். இதனை தொடர்ந்து தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து வரும் மாஸ்டர் படத்திலும் விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்த நிலையில் இறுதிகட்ட பணியில் உள்ளது. இந்த படம் ஏப்ரல் மாதம் திரையரங்கிற்கு வெளிவரும் என்று கூறப்படுகின்றது. இதனை அடுத்து விஜய் சேதுபதி அவர்கள் ஹிந்தியில் அமீர்கான் உடன் ஒரு படத்தில் நடித்து வருகிறார்.