நாயை வைத்து கொரோனா பாடலை உருவாக்கிய கைதி பட இசையமைப்பாளர்.

By Rajkumar · 9/4/2020

தமிழ்நாட்டில் தற்போது கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 800 ஆக உயர்ந்து உள்ளது. நாளுக்கு நாள் இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்துக் கொண்டு செல்வதால் பிரதமர் மோடி அவர்கள் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவை பிறப்பித்து உள்ளார். கொரோனாவின் தாக்கம் இந்தியாவில் அதிகரிக்கக் கூடாது என்பதற்காக மத்திய மற்றும் மாநில அரசுகள் இணைந்து பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

அரசாங்கத்திற்கு உறுதுணையாக மருத்துவர்கள், காவலர்கள், தூய்மை பணியாளர்கள் என அனைவரும் இரவும் பகலும் பார்க்காமல் தங்கள் உயிரை பணையம் வைத்து கஷ்டப்பட்டு வருகிறார்கள். ஊரடங்கு உத்தரவால் மக்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கிறார்கள். சமூக வலைத்தளங்களில் பல பிரபலங்கள் கொரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு வீடியோக்களை பதிவிட்டு வருகின்றனர்.

இதையும் பாருங்க : தூய்மை பணியாளர்களுக்கு உதவிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகர். குவியும் பாராட்டு.

இந்நிலையில் கொரோனா வைரஸ் குறித்து இசையமைப்பாளர் சாம் சி எஸ் அவர்கள் தனது நாயுடன் சேர்ந்து ஒரு பாடலை இசையமைத்து வெளியிட்டுள்ளார். இந்த பாடல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாக பரவி வருகிறது. இசையமைப்பாளர் சாம் சிஎஸ் செய்த செயல் பலரையும் ரசிக்கவும், சிரிக்க வைக்கும் வகையிலும் உள்ளது.

https://www.instagram.com/tv/B-voySZjLn4/?utm_source=ig_embed

இசையமைப்பாளர் சாம் சிஎஸ் அவரது நாய் உடன் சேர்ந்து கொரோனா வைரஸ்க்காக ஒரு பாடலை பாடியுள்ளார்கள். இதனை சாம் சிஎஸ் அவர்கள் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்கள். அதில் அவர் கொரோனா சாங் என்று குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோவின் ஸ்பெஷாலிட்டி என்னவென்றால் சாம் வளர்க்கும் நாய்க்குட்டி தான் இந்த பாடலை பாடிய உள்ளது.

சாம் சிஎஸ் இசை தொடங்கியவுடன் அவரது நாய் பாடலை பாட தொடங்குகிறது. அவர் இசை அமைப்பதை நிறுத்தியவுடன் அதுவும் பாடலை பாடுவதை நிறுத்தி விடுகிறது. இதை பார்க்க ஆச்சரியமாகவும், அசத்தலாகவும் உள்ளது. தற்போது இந்த வீடியோவை ரசிகர்கள் அதிகமாக ஷேர் செய்தும் லைக் செய்தும் வருகிறார்கள்.

இதையும் பாருங்க :  கோடிகளை அள்ளி இறைத்து ஒட்டுமொத்த தென்னிந்திய நடிகர்களையும் மிஞ்சிய லாரன்ஸ்.

தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவர் சாம் சி.எஸ். விக்ரம் வேதா, கைதி போன்ற படங்களில் இவர் அமைத்த பின்னணி இசையை பாராட்டாத ரசிகர்களே இருக்க முடியாது. தற்போது வெங்கட் பிரபு மற்றும் சிம்பு தேவன் இணையும் கசட தபற , மாதவன் நடிக்கும் நம்பி எஃபக்ட் உள்ளிட்ட பல படங்களுக்கு சாம் சிஎஸ் இசையமைத்து வருகிறார்.

behindtalkies AMP · Quick view
View full