கோடிகளை அள்ளி இறைத்து ஒட்டுமொத்த தென்னிந்திய நடிகர்களையும் மிஞ்சிய லாரன்ஸ்.

0
12046
Ragava-Lawrance
- Advertisement -

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸால் பல்வேறு உலக நாடுகள் பாதிப்படைந்துள்ளது. உலகளவில் இந்த நோயால் கடந்த சில மணி நேரத்திற்க்கு முன்பாக வரை 14,87,870 மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், இதுவரை உலகளவில் இந்த நோயினால் 88,630 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இதுவரை இந்த நோயினால் இந்தியாவில் 5,734 பேருக்கும் மேற்பட்டோர் பதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 16பேர் உயிரிழந்துள்ளார்கள். இந்த நோயை கட்டுப்படுத்த உலக நாடுகள் அனைத்தும் போராடி வருகிறது.

-விளம்பரம்-
Raghava Lawrence steps out of 'Kanchana' remake - The Hindu

- Advertisement -

மக்கள் அனைவரும் தனிமைப்படுத்த வேண்டும் என மத்திய, மாநில அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க இந்திய பிரதமர் மோடி அவர்கள் இந்தியா முழுவதும் 21 நாட்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பித்து உள்ளார். கொரோனாவினால் மக்கள் அனைவரும் வாழ்வாதாரத்திற்காக மிகவும் கஷ்டப்படும் சூழல் ஏற்பட்டு உள்ளது. மேலும், தினகூலி நம்பி வாழும் மக்கள்களுக்கு நாடு முழுவதும் உணவு தட்டுப்பாடு பிரச்சனை தற்போது ஏற்பட்டுள்ளது.

இதையும் பாருங்க : புது மாப்பிளையாக இருந்தும் வெளியில் வந்து உதவி செய்த யோகி பாபு. குவியும் பாராட்டுக்கள்

இதற்காக சினிமா பிரபலங்களும், அரசியல் பிரமுகர்களும் தங்களால் முடிந்த நிதி உதவியை கொடுத்து வருகிறார்கள். இந்திய திரையுலகைச் சேர்ந்த பல முன்னணி நடிகர்களும் தங்களால் முடிந்த நிதி உதவிகளை செய்து வருகின்றனர். அதே போல கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த மார்ச் மாதம் 19 ஆம் தேதியே பல்வேறு படத்தின் படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டுளள்து .சினிமா ஷூட்டிங் நிறுத்தப்பட்டுள்ளதால் FEFSIயை தொடர்ந்து நடிகர் சங்கமும் பாதிக்கப்பட்டுள்ள சினிமா நடிகர்களுக்கு உதவி கோரியிருந்தது.

-விளம்பரம்-

கொரோனாவால் வேலையிழந்த சினிமா தொழிலாளர்களுக்கு உதவும் விதமாக ரஜினிகாந்த் உள்ளிட்ட பல நடிகர்கள் நிதி அளித்திருந்தனர். ரஜினி 50 லட்சம் ரூபாயும், கமல் 10 லட்ச ரூபாயும், அஜித் 1.25 கோடி ரூபாயையும், விஜய் சேதுபதி 10 லட்சம் ரூபாயும், சிவகார்த்திகேயன் 10 லட்சம் ரூபாயும், சூர்யா-கார்த்தி குடும்பம் 10 லட்சம் ரூபாயும், நயன்தாரா 20 லட்சத்தையும் கொடுத்திருந்தனர்.

இதையும் பாருங்க : டிக் டாக் மோகம். விபரீதத்தில் முடிந்த நடனம், கண்ணாடியை உடைத்து விழுந்து நடிகை. வைரலாகும் வீடியோ.

சமீபத்தில் அஜித் கொடுத்த 1.25 கோடி தான் இதுவரை தமிழ் சினிமா பிரபலங்கள் கொடுத்த நிவாரண நிதியிலேயே அதிகமாக இருந்து வந்த நிலையில் தற்போது ஒட்டுமொத்த தென்னிந்திய நடிகர் நடிகைகளை ஓவர் டேக் செய்துள்ளார் ராகவா லாரன்ஸ். தற்போது இவர் 3 கோடி ரூபாயை கொரோனா நிவாரண நிதியாக கொடுத்து அசத்தியுள்ளார்.

இதுகுறித்து தனது சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ள லாரன்ஸ், நண்பர்கள் மற்றும் ரசிகர் பெருமக்களே என்னுடைய அடுத்த படம் தலைவரின் சந்திரமுகி 2 படத்தில் நடிக்க வைக்கிறேன் தலைவருடைய வாழ்த்துக்களுடன் இந்த படத்தில் எனக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது என்னுடைய அதிர்ஷ்டம் பி வாசு ஏக்கத்தில் என்னுடைய அதிர்ஷ்டமான தயாரிப்பாளர் சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் தயாரிப்பில் உருவாக உள்ள இந்த படத்திற்கான முன் பணத்தை பெற்றுக் கொண்டேன் அதிலிருந்து மூன்று கோடி ரூபாயை கரோனா வைரஸ் நிவாரண நிதியாக வழங்குவதை தாழ்மையுடன் உறுதி கூறுகிறேன்.

50 லட்ச ரூபாய் பிரதம மந்திரியின் நிவாரண நிதிக்கு 50 லட்ச ரூபாய் தமிழக முதலமைச்சர் நிவாரண நிதிக்கு 50 லட்ச ரூபாய் பெப்சி சங்கத்திற்கும் 50 லட்சம் ரூபாய் நடன கலைஞர்கள் சங்கத்திற்கும் 25 லட்ச ரூபாய் ஊனமுற்றோர் உங்களுக்கும் 75 லட்ச ரூபாய் என்னுடைய பிறந்த ஊரான ராயபுரத்தில் இருக்கும் தினக்கூலி நபர்களுக்கும் அளிக்கிறேன் மேலும் அத்தியாவசிய உணவு பொருட்கள் அனைத்தும் காவல்துறையின் பாதுகாப்போடு கொண்டு சேர்க்கப்படும் சேவையே கடவுள் என்று பதிவிட்டிருக்கிறார்

Advertisement