தூய்மை பணியாளர்களுக்கு உதவிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகர். குவியும் பாராட்டு.

0
1563
Pandian-stores

இந்தியாவில் கொரோனாவின் பரவலை தடுக்க பிரதமர் மோடி அவர்கள் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவை பிறப்பித்து உள்ளார். தமிழ்நாட்டில் தற்போது கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 800 ஆக உயர்ந்து உள்ளது. நாளுக்கு நாள் இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்துக் கொண்டு செல்கிறதே தவிர குறைந்தபாடில்லை. கொரோனாவின் தாக்கம் இந்தியாவில் அதிகரிக்கக் கூடாது என்பதற்காக மத்திய மற்றும் மாநில அரசுகள் இணைந்து பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

அரசாங்கத்திற்கு உறுதுணையாக மருத்துவர்கள், காவலர்கள், தூய்மை பணியாளர்கள் என அனைவரும் இரவும் பகலும் பார்க்காமல் தங்கள் உயிரை பணையம் வைத்து கஷ்டப்பட்டு வருகிறார்கள். நாட்டிற்காக உயிரை கொடுத்து போராடும் இவர்களுக்கு பல பேர் தேவையான உதவிகள் செய்து வருகின்றார்கள். கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சினிமா பிரபலங்கள்,சமூக ஆர்வலர்கள் என பலரும் தங்களால் முடிந்த உதவிகளை மக்களுக்கு செய்து வருகிறார்கள்.

இதையும் பாருங்க : உங்களுக்கு மேனஸ் தெரியாதா? நெப்போலினை அசிங்கப்படுத்தினரா விஜய் ? வைரலாகும் வீடியோ.

- Advertisement -

அந்த வகையில் திருவேற்காடு தூய்மை பணியாளர்களுக்கு இலவசமாக மாஸ்க், கிருமிநாசினி, சானிடைசர், பிளீச்சிங் பவுடர் போன்றவற்றை சின்னத்திரை நடிகர் குமரன் வாங்கிக் கொடுத்துள்ளார். கொரோனாவில் இருந்து மக்களைக் காப்பாற்றும் நகராட்சி ஊழியர்கள், பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள் ஆரோக்கியமாகவும் நலமாகவும் இருக்க வேண்டும் என்பதற்காக நடிகர் குமரன் இந்த உதவியை செய்து உள்ளார்.

இந்த உதவிகளை அவர் வழங்கிய போது நகராட்சி அதிகாரிகள் பணியாளர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து உள்ளார்கள். தற்போது இந்த தகவல்கள் சோசியல் மீடியாவில் வெளியாகியுள்ளது. இதனை பார்த்து பலரும் நடிகர் குமரனுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். கொரோனவினால் ஏழை மக்கள், ஆதரவற்றோர், கூலி வேலை செய்பவர்கள் என பலர் வாழ்வாதரத்திற்காக கஷ்டப்பட்டு வருகிறார்கள்.

-விளம்பரம்-

இவர்களுக்கு சினிமா பிரபலங்களும், சமூக ஆர்வலர்களும் தங்களால் முடிந்த பண உதவிகளை செய்து வருகிறார்கள். நிறைய பேர் பிரதமர் மோடி நிவாரண நிதி மற்றும் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு பணத்தை கொடுத்து வருகிறார்கள். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தொடங்கி நடிகர் சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி, சூர்யா, பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பல பிரபலங்கள் தங்களால் முடிந்த பண உதவிகளை செய்து உள்ளார்கள்.

இதையும் பாருங்க : டிக் டாக் மோகம். விபரீதத்தில் முடிந்த நடனம், கண்ணாடியை உடைத்து விழுந்து நடிகை. வைரலாகும் வீடியோ.

விஜய் டிவியின் தற்போதைய சூப்பர் ஹிட் தொடராக இருப்பது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் தான். இந்த சீரியல் மக்களிடையே நல்ல வரவேற்பும், பாராட்டும் பெற்று வருகிறது. குடும்ப கதையை மையமாக கொண்ட தொடர். இந்த தொடரில் மூன்று ஜோடிகள் நடித்தாலும் அதில் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமான ஜோடி என்னவோ கதிர்-முல்லை ஜோடி தான். பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் கதிர் கதாபாத்திரத்தில் நடிப்பவர் தான் குமரன். இவர் நடிகர் மட்டும் இல்லாமல் சிறந்த டான்சரும் ஆவார். இவர் பல நிகழ்ச்சிகளில் நடனம் ஆடி உள்ளார். இதற்கு முன்னே இவர் சீரியல்களிலும் நடித்து உள்ளார்.

Advertisement