ஹீரோவின் பெயரை கேட்டவுடன் நடிக்க இருந்த படத்திலிருந்து விலகிய காஜல் அகர்வால்..!

0
1908
- Advertisement -

நடிகை காஜல் அகர்வால், தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான விஜய்,அஜித்,சூர்யா என்ற பல நடிகர்களுடன் பிஸியாக நடித்து வந்தவர். மேலும், தமிழ், தெலுகு சினிமாவை தாண்டி ஹிந்தி சினிமா வரை கால் பதித்தவர். சமீபத்தில் இயக்குனர் ஒருவரிடம் கதை கேட்டு விட்டு ஹீரோ யார் என்று அறிந்தவுடன் எஸ்கேப் ஆகியுள்ளார்.

-விளம்பரம்-

kajal agarwal

- Advertisement -

சமீபத்தில் பிரபல இயக்குனரிடம் கதை கேட்டுள்ள காஜல், படத்தில் நடிக்க சம்மதமும் கூட தெரிவித்துள்ளார். ஆனால்,அந்த படத்தின் கதாநாயகன் உதயநிதி ஸ்டாலின் என்றதும் படத்தில் நடிக்க மாட்டேன் என்று கூறியுள்ளார். ஏற்கனவே உதயநிதி ஸ்டாலின் மூலம் ஏற்பட்ட பிரச்சனை தான் இதற்கு பின்னணியாக இருக்குமோ என்று கூறப்படுகிறது.

ஏற்கனவே , கடந்த 2015 ஆம் ஆண்டு உதயநிதி ஸ்டாலின் நடித்த “நண்பேன்டா” படத்தில் நடிகை நயன்தாராவிற்கு முன்னதாக காஜல் அகர்வால் தான் ஒப்பந்தம் செய்ப்பட்டிருந்தாராம். உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயிண்ட் தயாரிப்பு நிறுவனம் மூலம் இதற்காக நடிகை காஜல் அகர்வாலுக்கு 40 லட்ச ருபாய் முன்பணமும் வழங்கப்பட்டது.

-விளம்பரம்-

Udhayanidhi stalin

ஆனால், நடிகை காஜல் அகர்வால் அந்த படத்தில் நடிக்காமல் போனதால், உதயநிதி ஸ்டாலின் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்து காஜல் அகர்வாலுக்கு அளித்த 40 லட்ச ருபாய் முன்பணத்தை திரும்பபெற்றுக்கொண்டார். இதனால் தான் உதயநிதி ஸ்டாலின் படத்தில் நடிக்க அம்மணி நோ சொல்லியுள்ளார் என்று கூறப்படுகிறது.

Advertisement