ஊரடங்கு முடிந்த உடன் இந்த பொருட்களை மட்டும் வாங்குங்க. காஜல் அகரால் வேண்டுகோள்.

0
4958
Kajal
- Advertisement -

தற்போது இந்தியாவில் கொரோனாவினால் 5194 பேர் பாதிக்கப்பட்டும், 149 பேர் பலியாகியும் உள்ளனர். மக்கள் யாரும் வெளியில் வரக்கூடாது என்று பல்வேறு முன்னெச்சரிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது. அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் மக்கள் வெளியில் செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது. இந்த வைரஸ் பரவலை தடுக்க இந்திய பிரதமர் மோடி அவர்கள் 21 நாட்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பித்து உள்ளார். இதனால் போக்குவரத்து, மது கடைகள், பொது இடங்கள் என அனைத்தும் மூடப்பட்டு உள்ளது.

-விளம்பரம்-

இதனால் இந்தியா பொருளாதார ரீதியாக நிறைய பிரச்சனைகளை சந்தித்து வருகிறது. கொரோனவினால் நாடு முழுவதும் உணவு கொரோனவினால் சிறு தொழில் செய்யும் வணிகர்கள் முதல் பெரிய தொழில் செய்யும் பிசினெஸ் மேன் வரை பாதிக்கப்பட்டு உள்ளனர். ஆனால், இதில் அதிகமாக பாதிக்கப்படுவது சிறு தொழில் செய்யும் வணிகர்கள் தான்.

- Advertisement -

இந்நிலையில் நடிகை காஜல் அகர்வால் அவர்கள் கொரோனாவினால் பாதிக்கப்பட்டு உள்ள உள்நாட்டு வணிகர்களுக்கு உதவும் படி வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து அவர் கூறியிருப்பது, இந்தியாவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டு உள்ளது உள்ள சிறு வணிகர்கள் மட்டும் தான். சிறு வணிகர்கள் பாதிக்கப்படாமலும், நஷ்டம் அடையாமலும் இருக்க நாம் அனைவரும் நம்மால் முடிந்த உதவிகளை செய்வோம்.

இந்த தருணத்தில் நான் அனைவரும் கேட்டு கொள்வது ஒன்று தான். அது அனைவரும் உள்ளூர் பொருட்களையே வாங்க வேண்டும். சின்ன சின்ன வியாபாரிகள் விற்கும் காய்கறி,பழங்களை வாங்கி அவர்களை ஊக்குவிப்போம். சிறு தொழில் வணிகர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளை செய்யுங்கள். மீண்டும் சிறு தொழில் செய்யும் வணிகர்கள் எல்லாம் தங்கள் சொந்த காலில் நிற்பதற்கு உதவியாக இருக்கும்.

-விளம்பரம்-

வெளிநாட்டு பொருட்களை வாங்குவதை விட்டு இந்தியாவில் உற்பத்தி செய்யும் பொருட்களை வாங்குவோம். பெரும்பாலும் வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்வதை தவிர்த்துவிட்டு நமது நாட்டுக்குள்ளேயே சுற்றுலா செல்வோம். நமது ஊரில் உள்ள ஹோட்டல்களிலேயே சாப்பிடுவோம். இந்திய உடைகளையே வாங்குவோம். இதன் மூலம் நமது ஊரில் உள்ள சின்ன சின்ன வியாபாரிகள் எல்லாம் முன்னேற முடியும்.

மேலும், ஊரடங்கு உத்தரவால் வீட்டில் இருப்பது போரடிக்கிறது என்று எல்லோரும் பேசுகிறார்கள். சொல்லப்போனால் வீட்டில் இருப்பது பாதுகாப்பு. ஏன் என்றால் நாளுக்கு நாள் கொரோனா தாக்கம் அதிகரித்து கொண்டே தான் செல்கிறது. இன்னும் வரை கொரோனாவுக்கு மருந்தே இல்லை என்று சொல்லும்போது நாம் வீட்டில் பாதுகாப்பாக இருப்பதில் தவறு இல்லை என்று கூறினார்.

கோலிவுட் மற்றும் டோலிவுட் சினிமாவில் பல ஆண்டுகளாக முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டு இருப்பவர் நடிகை காஜல் அகர்வால். இவர் 2004 ஆம் ஆண்டு ‘ஹோ கயா நா’ என்ற ஹிந்தி படத்தின் மூலம் தான் சினிமா உலகிற்கு அறிமுகமானர். அதற்கு பிறகு தொடர்ந்து தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல்வேறு மொழி படங்களில் பிஸியாக நடித்து கொண்டு வருகிறார். இவர் விஜய், அஜித், சூர்யா, தனுஷ் என்று பல்வேறு முன்னணி நடிகர்களுடனும் இணைந்து படங்களில் நடித்து உள்ளார்.

Advertisement