உலகமெங்கும் தற்போது ‘கொரோனா’ எனும் வைரஸ் தீயாய் பரவி வருகிறது. ஆகையால், ‘144’ போடப்பட்டுள்ளது. தியேட்டர்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது, திரையுலகில் அனைத்து படங்களின் ஷூட்டிங்கும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால், பல படங்களின் டீம் திட்டமிட்டு வைத்திருந்த தங்களது ஷூட்டிங் ப்ளானை மாற்றி அமைக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டு உள்ளனர்.
‘கொரோனா’ பிரச்சனை முடிந்து எப்போது அனைத்து படங்களின் பணிகளும் துவங்கப்போகிறது என்பது பெரிய கேள்விக் குறியாக இருக்கிறது. கொரோனா நிவாரண பணிகளுக்காக பல திரையுலக பிரபலங்கள் நிதியுதவி கொடுத்து உதவி வருகின்றனர். இந்த லாக் டவுன் டைமில் பல திரையுலக பிரபலங்கள் ஷூட்டிங் எதுவும் இல்லாததால், வீட்டில் தங்களது குடும்பத்தினருடன் அதிக நேரத்தை செலவு செய்து பாதுகாப்பாக இருந்து வருகின்றனர்.
திரையுலக பிரபலங்கள் சமூக வலைத்தளமான ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து பல விதமான புகைப்படங்கள் மற்றும் வீடியோ பதிவுகளை ஷேர் செய்த வண்ணமுள்ளனர். அதில் பாட்டு பாடுவது, சமைத்து கொண்டிருப்பது, ஜிம்மில் வொர்க்கவுட் செய்வது, பாடலுக்கு நடனமாடுவது, டிக் டாக் செய்வது போன்ற புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் அதிகம் வெளியாகி வருகின்றது.
இந்நிலையில், இந்த லாக் டவுன் டைமில் முன்னணி நடிகைகளில் ஒருவரான காஜல் அகர்வால் சமூக வலைத்தளமான ட்விட்டர் பக்கத்தில் ஒரு ஸ்டேட்டஸ் போட்டிருக்கிறார். அந்த பதிவில் “கடந்த மூன்று நாட்களில் மட்டும் எனது கைகள் அதிக அளவிலான ஆல்கஹாலை பார்த்து விட்டது. எனது லிவர் கூட இதுவரை இந்த அளவிற்கு ஆல்கஹாலை பார்த்தது இல்லை” என்று தெரிவித்திருக்கிறார்.
இந்த ட்வீட்டை பார்த்த நடிகை காஜல் அகர்வாலின் ரசிகர்கள், “என்ன சொல்றீங்க? அப்படின்னா உங்களுக்கு குடிக்கும் பழக்கம் இருக்கிறதா?” என்று கமெண்ட்ஸ் போட்டும் இருந்தனர் . இப்போது, தமிழில் ‘உலக நாயகன்’ கமல் ஹாசனின் ‘இந்தியன் 2’, ரமேஷ் அரவிந்தின் ‘பாரிஸ் பாரிஸ்’, துல்கர் சல்மானின் ‘ஹேய் சினாமிகா’, தெலுங்கில் விஷ்ணு மஞ்சுவின் ‘மோசகல்லு’, ‘மெகா ஸ்டார்’ சிரஞ்சீவியின் ‘ஆச்சார்யா’, ஹிந்தியில் ஜான் அப்ரஹாமின் ‘மும்பை சகா’ என ஆறு படங்கள் மட்டுமே கைவசம் வைத்திருக்கிறார் நடிகை காஜல் அகர்வால்.