பொது நிகழ்ச்சி மேடையில் கணவரை கன்னத்தில் அறைந்த பாலிவுட் நடிகை. வைரலாகும் வீடியோ..

0
57354
- Advertisement -

இந்தி நடிகை கஜோல் அவர்கள் பாலிவுட் சினிமாவில் பல ஆண்டுகளாக கொடிகட்டி பறந்து வரும் ஒரு நடிகை. இவர் இந்தி நடிகை ஆக மட்டும் இல்லாமல் மற்ற மொழி படங்களிலும் நடித்து உள்ளார். அது மட்டும் இல்லாமல் இவர் இந்தி மொழி ரசிகர்களை மட்டும் இல்லாமல் பிற மொழி ரசிகர்களையும் மிகவும் கவர்ந்தவர். நடிகை கஜோல் அவர்கள் தமிழில் “மின்சாரக்கனவு ” என்ற படத்தில் நடித்து இருந்தார். பின் நீண்ட இடைவேளைக்கு பிறகு தனுஷ் நடித்த “விஐபி 2” என்ற படத்தில் ரீஎன்ட்ரி கொடுத்து அசத்தினார். இப்போது கூட இந்தி படங்களில் நடித்து வருகிறார் நடிகை கஜோல். தற்போது ஷாரு கான் நடித்து வரும் “ஜீரோ” படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார்.

-விளம்பரம்-

மேலும், 1999 ஆம் ஆண்டு பாலிவுட் சினிமாவில் மிக பிரபலமான நடிகர் அஜய் தேவ்கான் என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்னர் இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் பிறந்தது. இந்திய திரையுலகின் நட்சத்திர ஜோடி நடிகை கஜோல், அஜய் தேவ்கனுக்கு 2003 ஆண்டு இவருக்கு முதல் பெண் குழந்தை பிறந்து, அதன் பின்னர் 7 ஆண்டுகள் கழித்து 2010 ஆம் ஆண்டு ஒரு ஆன் குழந்தைக்கும் தாயானார். அவருடைய மூத்த மகளின் பெயர் “நைஸா” மற்றும் மகனின் பெயர் “நக்” ஆகும். பாலிவுட் சூப்பர் ஸ்டார் கஜோல்– அஜய் தேவ்கான் ஜோடி 25 ஆண்டுகளுக்கும் மேலாக திரையுலகில் ஜொலித்துக் கொண்டு இருக்கிறார்கள். இந்த ஜோடிகளுக்கு வயது கூடக் கூட கவர்ச்சியும் கூடுகிறது.

- Advertisement -

பொதுவாகவே சினிமா பிரபலங்கள் படங்களில் நடிப்பதை தாண்டி பொது நிகழ்ச்சிகளிலும் அதிகம் கலந்து கொள்வார்கள். இது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான். அப்படிப் பார்த்தால் பாலிவுட் சினிமாவில் தான் அதிகம் நிகழ்ச்சிகள் நடக்கும். இந்நிலையில் இந்தியாவில் பல மொழிகளில் நடக்கும் மிகப் பிரபலமான நிகழ்ச்சி என்று சொன்னால் அது பிக் பாஸ் நிகழ்ச்சி தான். வருடம் வருடம் இந்த பிக் பாஸ் நிகழ்ச்சி கோலாகலமாக திருவிழா போன்று ஒவ்வொரு மொழியிலும் நடத்தி வருகிறார்கள். அந்த வகையில் பாலிவுட்டில் பல சீசன்களாக இந்த பிக் பாஸ் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. அதுவும் பல வருடங்களுக்கு மேலாக நடிகர் சல்மான்கான் தான் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.

இந்நிலையில் இந்த ஹிந்தியில் நடக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினர்களாக நடிகர் அஜய் தேவ்கான் மற்றும் நடிகை கஜோல் அவர்கள் வந்து இருந்தார்கள். மேலும், பிக் பாஸ் நிகழ்ச்சியில் இவர்கள் இருவரும் சில விளையாட்டையும் விளையாடினார்கள். அப்போது திடீரென கஜோல் அவர்கள் தன்னுடைய கணவர் அஜய் தேவ்கனை கன்னத்தில் அறைகிறார். அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவுகிறது. இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் ஷாக் ஆகி விட்டனர். திருமணம் ஆனவுடன் கணவன், மனைவியிடம் அடிவாங்குவது சகஜமான ஒன்று. அதில் நம்ம பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கான் மட்டும் என்ன விதிவிலக்கா? என்று ரசிகர்கள் சோசியல் மீடியாவில் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகின்றன.

-விளம்பரம்-
Advertisement