காக்க முட்டை படத்தில் நடித்த சின்ன காக்க முட்டையா இது..!இப்படி வளர்ந்துட்டார்..!

0
642
Chinna-kakka-muttai

தமிழில் கடந்த 2014 ஆம் ஆண்டு நடிகர் தனுஷ் மற்றும் வெற்றிமாறனுடன் இணைந்து பாக்ஸ் ஸ்டார் ஸ்டூடியோஸ் தயாரித்து வெளியிட்ட, ‘காக்கா முட்டை’ படம் பெரும் வெற்றியைப் பெற்றுதுடன் பல்வேறு வசூல் சாதனைகளையும் செய்தது.

kakka mutai

எம்.மணிகண்டன் இயக்கிய இந்த படம் பல விருதுகளையும் அள்ளிக் குவித்தது. இந்த படத்தில் நடித்திருந்த சிறுவர்கள் விக்னேஷ், ரமேஷ் இருவருக்கும் தேசிய விருது கிடைத்தது.அத்தோடு இந்த படத்தில் நடித்த நடிகை ஐஸ்வர்யா ராஜேஷிற்கும் நல்ல புகழை ஏற்படுத்தி தந்தது.

இந்த படத்தின் வெற்றியை அடுத்து இந்த படத்தில் நடித்த சிறுவர்களான விக்னேஷ், ரமேஷ் குடும்பம் மற்றும் அவர்களின் எதிர்காலத்துக்கு தேவையான உதவிகளை பாக்ஸ் ஸ்டார் ஸ்டூடியோஸ் ஏற்றது. இந்த படத்தில் நடித்த பெரிய காக்க முட்டை விக்னேஷ் தற்போது ஒரு படத்தில் ஹீரோவாகவும் நடித்து வருகிறார்.

ஆனால், இந்த படத்தில் ரசிகர்களால் பெரிதும் விரும்பப்பட்டவர் சின்ன காக்க முட்டை தான். காக்க முட்டை படத்தில் சின்ன காக்க முட்டையாக நடித்த ரமேஷ் தற்போது என்ன செய்து கொண்டிருக்கிறார் என்று தெரிவில்லை இந்நிலையில் நடிகை ஐஸ்வ்ர்யா ராஜேசுடன் ரமேஷ் இருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. அதில் நீளமான முடியுடன் பார்ப்பதற்கு ஆளே அடையாளம் தெரியாமல் இருக்கிறார்.