-விளம்பரம்-
Home பொழுதுபோக்கு சமீபத்திய

இன்று கலைஞர் நூற்றாண்டு விழா – மீண்டும் இப்படி ஒரு சம்பவம் இருக்குமா? எதிர்பார்ப்பில் ரசிகர்கள்.

0
541

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கப் பொதுக்குழு கூட்டத்தில் கலைஞரின் நூற்றாண்டு விழா இன்று பிரம்மாண்டமாக நடத்தப்படும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. கலைஞர் கருணாநிதி என்ற பெயரை கேட்காத நபர்கள் தமிழ் நாட்டில் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். அவர் அரசியலிலும் சரி சினிமாத்துறையிலும் சரி அவர் ஆற்றிய பங்கு மிகப்பெரியது. மு.கருணாநிதி கடந்த 2018ஆம் ஆண்டு வயது மூப்பு காரணமாக தன்னுடைய 94 வயதில் காலமானர்.

-விளம்பரம்-

இவரின் மறைவு தமிழகத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி இருந்தது. மேலும், அவருடன் பழகியவர்கள் பலர் கருணாநிதியுடன் இருந்த அனுபவத்தை அவ்வபோது சோசியல் மீடியாக்களில் பகிர்ந்து வருகின்றனர். இந்த நிலையில் இன்று கலைஞரின் நூற்றாண்டு விழா நடைபெற இருக்கிறது. இந்த விழா சென்னை கிண்டியில் உள்ள ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் பிரம்மாண்டமாக நடைபெற இருக்கிறது.

கலைஞரின் நூற்றாண்டு விழா:

-விளம்பரம்-

இந்த விழாவில் முதல்வர் மு.க ஸ்டாலின், ரஜினி, கமல், சூர்யா, விஜய், தனுஷ், விக்ரம், சிவகார்த்திகேயன், இசைஞானி இளையராஜா உட்பட திரை பிரபலங்கள் பலர் பங்கேற்க இருக்கின்றார்கள். அதோடு தெலுங்கில் சிரஞ்சீவி, மலையாளத்தில் மம்மூட்டி, மோகன்லால் உட்பட பிற மொழி பிரபலங்களும் இந்த விழாவில் கலந்து கொள்ள இருக்கிறார்கள். மேலும், இந்த விழாவை மறைந்த திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான கருணாநிதியின் நினைவாக திமுக சார்பில் கொண்டாடப்பட்டு வருகிறது.

நிகழ்ச்சி தடைபட காரணம்:

சில மாதங்களுக்கு முன்பே இந்த விழா நடத்தப்படும் என்று ஏற்கனவே அறிவித்திருந்தார்கள். அந்த வகையில் இந்த விழா கடந்த மாதமே நடைபெறுவதாக தான் இருந்தது. ஆனால், மிக்ஸாம் புயல் மற்றும் கனமழையால் தான் இந்த நிகழ்வு தள்ளி வைக்கப்பட்டது. இந்தப் புயல் ஒட்டுமொத்த தமிழகத்தையுமே புரட்டி போட்டு இருக்கிறது. இது வரலாறு காணாத மழை பெய்ததால் மக்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டிருந்தார்கள்.

-விளம்பரம்-

நிகழ்ச்சி குறித்த தகவல்:

கடந்த சில வாரங்களாகவே இந்த மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை மாறி தற்போது தான் பழைய நிலைமைக்கு திரும்பி கொண்டு வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், தமிழ் சினிமா வளர்ச்சியில் கருணாநிதியின் பங்களிப்பை போற்றும் விதமாக இந்த விழாவை திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் கொண்டாடுகிறார்கள். இன்று மாலை 4:00 மணிக்கு இந்த நிகழ்ச்சி தொடங்கயிருக்கிறது.

அஜித் குறித்த தகவல்:

மொத்தம் ஆறு மணி நேரம் இந்த நிகழ்ச்சியை நடத்த திட்டமிட்டு இருக்கிறார்கள். அதுமட்டுமில்லாமல் இதுவரை பெரும்பாலும் எந்த நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளாமல் இருக்கும் நடிகர் அஜித்தும் கலந்து கொள்வாரா? என்று ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது. ஆனால், அஜித் அவர்கள் தன்னுடைய விடா முயற்சி படத்தின் படப்பிடிப்பிற்காக அஜர்பைஜான் நாட்டில் இருக்கிறார். அவர் வருவது சந்தேகம் என்று கூறப்படுகிறது.

-விளம்பரம்-

Follow Us at Google News : அனைத்து சினிமா செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள Follow கிளிக் செய்து, பின்தொடர் என்பதை கிளிக் செய்யவும்.

Google news