தமிழில் பிக் பாஸ் 7 நிகழ்ச்சி தொடங்கி 96 நாட்களை கடந்து இறுதி கட்டத்தை நெருங்கி இருக்கிறது. இந்த சீசனில் கூல் சுரேஷ், பூர்ணிமா ரவி, ரவீனா தாஹா, சுரேஷ், ஆண்டனி, நிக்சன், சரவணா விக்ரம், மாயா எஸ் கிருஷ்ணா, விஷ்ணு, ஜோவிகா, அக்ஷ்யா உதயகுமார், மணிசந்திரா, வினுஷா தேவி, யுகேந்திரன் வாசுதேவன், விசித்ரா, பவா செல்லதுரை, விஜய் வர்மா என்று பலர் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்று இருந்தார்கள்.
இதுவரை இதில் பவா, வினுஷா மற்றும் யுகேந்திரன், அன்னபாரதி, பிரதீப், ஐஷு, கானா பாலா, அக்ஷயா, பிராவோ, ஜோவிகா, அன்னயா, கூல் சுரேஷ், சரவணா விக்ரம், நிக்சன், ரவீனா ஆகியோர் வெளியேறி இருக்கின்றனர். மேலும், கடந்த வாரம் டிக்கெட் டு பினாலே டாஸ்க் கொடுக்கப்பட்டு இருந்தது. மிகவும் மொக்கையான டாஸ்க்குகளுடன் நடந்த இந்த Ticket To Finale டாஸ்க்கின் இறுதியில் விஷ்ணு வெற்றி பெற்றார்.
பணப் பெட்டி டாஸ்க்;
இந்த வாரம் பணப் பெட்டி டாஸ்க் துவங்கி இருந்தது. இதில் பணப்பெட்டியை எடுத்துக்கொண்டு வெளியில் யார் செல்வார்கள்? என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் இருந்தனர். அதுமட்டுமில்லாமல் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த டாஸ்க்கு தான் ரசிகர்கள் மத்தியில் அதிகமாக வரவேற்பு இருக் கும். இன்னொரு பக்கம் இன்னும் சில தினங்களிலேயே இந்த நிகழ்ச்சி முடிவடைகிறது. இதில் யார் டைட்டில் வின்னர்? ஆகப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பிலும் இருக்கிறார்கள்.
நாமினேசன் பட்டியல்:
இந்த நிலையில் பூர்ணிமா ரவி 16 லட்ச ரூபாய் பணத்துடன் வெளியேறினார். இந்த வாரம் விஷ்ணுவை தவிர மற்ற அனைத்து போட்டியாளர்களும் நாமினேஷனில் இருக்கின்றனர். டிக்கெட் டு ஃபினாலேவில் விஷ்ணு வெற்றி பெற்றதால் அவர் நாமினேசன் பட்டியல் இருந்து வெளியேறிவிட்டார். இவரை அடுத்து அர்ச்சனா, விசித்ரா, தினேஷ், விஜய், மாயா, மணி ஆகியோர் நாமினேஷனில் இருக்கின்றார்கள்.
டபுள் எவிக்ஷனா ? :
இதில் யார் வெளியேறுவார்கள்? என்று ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டு இருக்கிறது. அந்த வகையில் இதுவரை வெளியாகியிருக்கும் வாக்குகளின் பட்டியலில் பூர்ணிமா ரவி தான் குறைவான வாக்குகள் பெற்றிருந்தார். ஆனால், அவர் பணப்பெட்டியை எடுத்துக் கொண்டு வெளியேறி விட்டார். இவரை அடுத்து குறைவான வாக்குகளை பெற்றிருக்கிறார் விஜய் வர்மா.
வெளியேறும் நபர் :
அதற்குப் பின் மாயா குறைவான வாக்குகளை பெற்று இருக்கிறார். அதுமட்டுமில்லாமல் இந்த வாரம் இரண்டு எலிமினேஷன் என்று கூறப்படுகிறது. ஆக, இதில் இந்த வாரம் விஜய் வர்மா, மாயா தான் கண்டிப்பாக வெளியேறுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் விஜய் வர்மா இந்த வாரம் வெளியேறி இருக்கிறார். மேலும், இந்த வாரம் சிங்கிள் ஏவிக்ஷன் இல்லையாம். அதனால் இந்த வாரமும் மாயா தப்பித்துவிட்டார்.