24 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட சுயம்வரம் பட சாதனையை 24 வருடங்கள் கழித்து முறியடித்த தமிழ் படம்.

0
2886
- Advertisement -

தமிழ் சினிமா வரலாற்றிலேயே புதிய சாதனை செய்திருக்கும் கலைஞர் படம் குறித்த தகவல் தற்போது இணையத்தில் வைரளாகி வருகிறது. தமிழ் சினிமா என்பது மக்களின் பொழுதுபோக்கு அம்சமாக இருந்தாலும், இதை சில இயக்குனர்கள் புதுப்புது வித்தியாசத்தை கையாண்டு சாதனை படைக்கிறார்கள். அந்த வகையில் தமிழ் சினிமாவில் 1999 ஆம் ஆண்டு வெளியாகி சாதனை படைத்த படம் சுயம்வரம். இந்த படம் 24 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்டது.

-விளம்பரம்-

அது மட்டும் இல்லாமல் இந்த படம் கின்னஸ் சாதனை புரிந்திருந்தது. இந்த படத்தில் தமிழ் சினிமாவில் உள்ள பல முன்னணி நடிகர்களும் நடிகைகளும் நடித்திருந்தார்கள். இந்த படத்திற்காக பல இயக்குனர்கள், ஒளிப்பதிவார்கள், டெக்னிஷன்கள் எல்லாம் கடுமையாக உழைத்து இந்த படத்தை எடுத்திருந்தார்கள். இது அனைவரும் அறிந்ததே. இந்த படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருந்தது.

- Advertisement -

தமிழ் சினிமாவின் புதிய சாதனை:

இந்த நிலையில் தற்போது இந்த சாதனையை கலைஞர் நகர் என்ற படம் முறியடித்திருக்கும் தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது, தற்போது கலைஞர் நகர் என்ற படம் உருவாகி இருக்கிறது. இந்த படம் 22.53 மணி நேரத்திற்குள்யே படப்பிடிப்பை எடுத்து முடித்து புதிய சாதனை உருவாக்கியிருக்கிறார்கள். இந்த படத்தை இயக்குனர் சுகன் குமார் இயக்கியிருக்கிறார். இவர் இதற்கு முன்பு பிதா என்ற படத்தை இயக்கி இருந்தார்.

கலைஞர் படம் குறித்த தகவல்:

இந்த படம் 23.23 மணி நேரத்தில் எடுத்து முடித்து இருக்கிறார்கள். ஆனால், தற்போது தமிழ் சினிமா வரலாற்றில் புது படைப்பை கொடுத்து இருக்கிறார் இயக்குனர் சுகன் குமார். இந்த கலைஞர் நகர் படத்தை 23 மணி நேரம் ஆகுவதற்கு ஏழு நிமிடத்திற்கு முன்பாகவே எடுத்து இருக்கிறார். இந்த படத்தில் பிரஜன், பிரியங்கா, லிவிங்ஸ்டன் என பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். தற்போது இந்த கலைஞர் நகர் படக்குழு பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து இருக்கிறது.

-விளம்பரம்-

விழாவில் இயக்குனர் கூறியது:

இந்த சந்திப்பு சென்னை, வடபழையில் நடைபெற்றிருக்கிறது. மேலும், இந்த நிகழ்ச்சியில் படக்குழுவினர் கலந்து கொண்டிருக்கிறார்கள். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இயக்குனர் சுகன் குமார் கூறியிருப்பது, பெரிய பெரிய இயக்குனர்கள் எல்லாம் பிரம்மாண்டமாக படம் எடுத்து இருப்பார்கள். ஆனால், இந்த சிறிய படத்தை பிரம்மாண்டமாக எடுத்திருக்கிறோம். இந்த படத்தை 23 மணி நேரத்திற்கு முன்பாக ஏழு நிமிடத்திற்கு முன்பே முடித்துவிட்டோம். இது மேடை நடன கலைஞர்களை மையப்படுத்திய படம். இந்த படத்தை எடுப்பதற்கு நான் மட்டும் முக்கிய காரணம் கிடையாது.

படம் குறித்து சொன்னது:

இதில் என்னுடைய கடைசி உதவியாளர்கள் உழைப்பு இருக்கிறது. இந்த படம் 23 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட படமாக இருந்தாலும் இதில் மூன்று பாடல்கள், இரண்டு சண்டை, காமெடி காட்சிகள் எல்லாம் இருக்கிறது. இது முழுக்க முழுக்க மேடை நடன கலைஞர்களை மையப்படுத்திய உண்மை சம்பவத்தை கொண்ட படம். இந்த படத்திற்காக ஐந்து கேமராக்களை படக்குழு பயன்படுத்தி இருக்கிறது. முதல் நாள் மதியம் 2.30 மணி அளவில் ஆரம்பித்த படப்பிடிப்பு அடுத்த நாள் மதியம் 1.23 மணிக்கு முடிக்கப்பட்டது. இது மிகப்பெரிய சவாலான விஷயம்தான் என்று கூறியிருக்கிறார். தற்போது இந்த தகவல் சோசியல் மீடியாவில் வெளியானதை தொடர்ந்து ரசிகர்கள் பலருமே படக்குழுவிற்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள்.

Advertisement