இந்தம்மா நெனச்சா வருவாங்க, நெனச்சா போவாங்கன்னு பேசினாங்க – கே ஆர் விஜயாவின் தங்கை பேட்டி.

0
3823
KRVijaya
- Advertisement -

சினிமாவில் நடிக்க தொடங்கியது முதல் பலரும் விமர்சித்தது வரை தன்னுடைய சினிமா பயணம் குறித்து கே ஆர் விஜயாவின் சகோதரி வத்சலா அளித்திருக்கும் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பிரபலமான நடிகையாக இருந்தவர் கே.ஆர். வத்சலா. இவர் பெரும்பாலும் படங்களில் குணச்சித்திர வேடங்களில் தான் நடித்திருக்கிறார். இவருடைய அக்கா வேற யாரும் இல்லை, பழம்பெரும் நடிகை கே ஆர் விஜயா தான். மேலும், வத்சலா அவர்கள் சினிமா படங்களில் மட்டும் இல்லாமல் சின்னத்திரை சீரியல்களிலும் நடித்திருக்கிறார்.

-விளம்பரம்-

பின் இவர் 10 ஆண்டுகளுக்கு மேலாக நடிப்பிலிருந்து விலகிவிட்டார். அதற்கு பிறகு இவர் என்ன ஆனார்? என்று தெரியவில்லை. சமீபத்தில் தான் இவர் அமெரிக்காவில் தன்னுடைய குடும்பத்துடன் வசித்து வருகிறார் என்ற தகவல் இணையத்தில் வெளியாகியிருந்தது. இந்த நிலையில் தற்போது இவர் பிரபல சேனலுக்கு பேட்டி ஒன்று அளித்திருக்கிறார். அதில் அவர் கூறியிருந்தது, என்னுடைய அப்பா, அம்மா இருவருமே கலையை ரொம்ப நேசிப்பவர்கள். அதனால் தான் அவர்களுடைய பிள்ளைகளுக்கும் ஏதாவது ஒரு கலைத்துறையில் ஈடுபட்டு இருக்கிறார்கள்.

- Advertisement -

கே.ஆர். வத்சலா அளித்த பேட்டி:

என்னுடைய அக்கா ரொம்பவே அதிர்ஷ்டசாலி. அவர்கள் சின்ன வயதிலேயே சினிமாவிற்கு வந்து விட்டார்கள். அக்காவோட சேர்ந்து நானும் எல்லா ஷூட்டிங் ஸ்பாட்டுக்கும் போயிருக்கிறேன். சொல்லப்போனால், சூட்டிங் ஸ்பாட்டில் தான் நான் வளர்ந்தேன். அக்கா படங்களில் நடிக்க ஆரம்பத்தில் இருந்தே நானும் கலைப்பயணத்தில் கூடவே இருக்கிறேன். எம்ஜிஆர், சிவாஜி ,ஜெயலலிதா ஆகியோரின் படங்களில் அக்கா நடிக்கும் போது நானும் அவர்களுடன் பேசி இருக்கிறேன். இதனால் எனக்கு சினிமாவில் நடிப்பது ரொம்ப பிடிக்கும். என்னுடைய அப்பாவுக்கு நான் மிகப்பெரிய நடன கலைஞர் ஆக வேண்டும் என்பதுதான் ஆசை.

நடனம் குறித்து கே.ஆர். வத்சலா சொன்னது:

இதனால் என்னை பத்மினி ஆண்டியிடம் நடனம் கற்றுக்கொள்ள சேர்த்து விட்டார்கள். அப்போதிலிருந்து இப்ப வரையும் என்னுடைய உயிர் மூச்சையாக நினைத்து நடனத்தில் ஈடுபட்டு இருக்கிறேன். எனக்கு 12 வயதாக இருக்கும் போது காலம் வெல்லும் படத்தில் கதாநாயகியாக நடித்தேன். ஆனால், அந்த படம் சில பிரச்சனைகளால் வரவில்லை. இதனால் நான் மறுபடியும் படிக்கப் போய்விட்டேன். அதற்கு பிறகு எனக்கு திருமணம் ஆகிவிட்டது. இரண்டு குழந்தைகள் பிறந்து விட்டார்கள். பின் 15 வருஷம் எனக்கும் சினிமாவுக்கும் எந்த ஒரு தொடர்பும் இல்லாமல் போய்விட்டது. திருமணத்திற்கு பிறகு தான் சினிமாவில் என்னுடைய இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கினேன்.

-விளம்பரம்-

சினிமா ரீ என்ட்ரி குறித்து சொன்னது:

என்னுடைய 28 வயதில் தான் நான் நடிக்க வந்தேன். அப்போது நான் சினிமாவில் நுழையும்போது ஒரு தயக்கத்துடனும் பயத்துடனும் தான் நுழைந்தேன். ஆனால், கிட்டத்தட்ட 100 படங்களுக்கு மேல் நடித்து விட்டேன். நான் விஜய்- அஜித் இரண்டு நபர்களுடன் நடித்திருக்கிறேன். விஜய் சார் செட்டில் ரொம்ப அமைதியாக இருப்பார். நடிப்பினும் வந்துட்டா அவர் வேற மாதிரி. அஜித் சார் நன்றாக பேசுவார். அவருக்கு என் மகன் சாயல் இருக்கிறது என்பதால் அவரை நான் பார்த்துக் கொண்டே இருப்பேன். ஒரூ முறை ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் படம் பண்ண வாய்ப்பு கிடைத்தது. அப்போது என் மகள் உடல் நிலை சரியில்லாமல் இருந்தார்.

சினிமா வாய்ப்பு குறித்து சொன்னது:

அதனால் நடிக்க முடியாமல் போனது. அதன் பின் அவர்கள் நினைத்தால் வருவார்கள் நினைத்தால் போவார்கள் என்ற எண்ணம் பலருக்கும் வந்து விட்டது. அதையும் தாண்டி நான் சினிமாவில் நடிக்க தொடங்கினேன். இப்போது நான் கல்யாணி கலாலயம் என்ற பெயரில் குழந்தைகளுக்கு நடனம் சொல்லிக் கொடுக்கிறேன். அதேபோல் நான் நிறைய சின்னத்திரை தொடர்கள் நடித்திருக்கிறேன். இருந்தாலும் திருமதி செல்வம் தொடர் தான் மக்கள் மத்தியில் பிரபலம் படுத்தியது. இந்த சீரியல் நடித்துக் கொண்டிருக்கும் போது தான் என்னுடைய திருமண வாழ்க்கையும் பிரிவுக்கு வந்தது. அதனால் அந்த தொடரில் என்னால் தொடர்ந்து நடிக்க முடியவில்லை. அதற்கு பிறகு தென்றல் தொடர் வாய்ப்பு வந்தது. இப்பவும் சிலர் என்னை தென்றல் சீரியல் திலகா என்று தான் கூப்பிடுவார்கள். கலைக்கு நேரம் காலம் எல்லாம் கிடையாது. நிச்சயம் நல்ல வாய்ப்பு கிடைத்தால் சின்ன திரையில் நடிப்பேன் என்று உணர்வுபூர்வமாக பேசி இருந்தார்.

Advertisement