அவரை வைத்து மட்டும் ஒரு படம் எடுக்க போறேன் – பொன்னியின் செல்வன் முக்கிய கதாபாத்திரம் குறித்து தானு அறிவிப்பு.

0
219
kalaipuli
- Advertisement -

பொன்னியின் செல்வன் முக்கிய கதாபாத்திரத்தை வைத்து தனியாக ஒரு படம் எடுக்க இருக்கிறேன் என்று தயாரிப்பாளர் கலைப்புலி s தாணு அளித்திருக்கும் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டிங் ஆகி வருகிறது. 70 ஆண்டு கனவான வரலாற்று சிறப்புமிக்க காவியங்களில் ஒன்றான பொன்னியின் செல்வன் கதையை யாராலும் சாதிக்க முடியாத செயலை இயக்குநர் மணிரத்னம் தற்போது சாதித்து காட்டி இருக்கிறார். மணிரத்னத்தின் திரைவாழ்க்கையில் இதுவரை இல்லாத அளவுக்கு மிக பிரம்மாண்டமாக இந்த திரைப்படம் தயாராகி இருக்கிறது.

-விளம்பரம்-
ponniyinselvan

இந்த படத்தில் விக்ரம், பிரகாஷ் ராஜ், பார்த்திபன், கார்த்தி, ரவி, விக்ரம் பிரபு, ஜெயராம், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ரகுமான், கிஷோர், அஸ்வின், நிழல்கள் ரவி, ரியாஸ்கான், லால், மோகன் ராமன், பாலாஜி சக்திவேல் என சினிமா உலகில் உள்ள பல முன்னணி நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள். இந்த படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்து இருக்கிறார். இந்த படத்தில் ரவிவர்மன் ஒளிப்பதிவாளராகவும், தோட்டாதரணி கலை இயக்குனராகவும் பணியாற்றி இருக்கிறார்கள். அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து இருந்த பொன்னியின் செல்வன் படம் நேற்று பிரம்மாண்டமாக வெளியாகி இருக்கிறது.

- Advertisement -

இதையும் பாருங்க : ‘நீ இந்த பூமிக்கு வருவது அவ்வளவு எளிதாக நடந்திடவில்லை செல்லமே’ – குழந்தையுடன் Kpy நவீனின் உருக்கமான பதிவு.

வந்திய தேவன் கதாபாத்திரம்:

நாவலை படித்தவர்கள், படிக்காதவர்கள் என அனைவரையுமே சந்தோசப்படுத்தும் வகையில் படத்தை கொடுத்திருக்கிறார் இயக்குனர். தமிழ் சினிமாவின் பெருமையை வேறு ஒரு இடத்திற்கு கொண்டு சென்று விட்டார் என்று சொல்லலாம். மேலும், தமிழ் ரசிகர்கள் மட்டும் இல்லாமல் உலக சினிமா ரசிகர்களும் பொன்னியின் செல்வன் படத்தை கொண்டாடி வருகின்றனர். இது ஒரு பக்கம் இருக்க, இந்த படத்தின் கதாநாயகனாக வந்திய தேவன் கதாபாத்திரத்தில் கார்த்திக் நடித்திருக்கிறார். படத்தின் கதையை வந்திய தேவன் கதாபாத்திரம் வழியாக தான் செல்கிறது.

-விளம்பரம்-

கலைபுலி எஸ் தானு:

ஆகவே, வந்திய தேவன் கதாபாத்திரத்தில் கார்த்திக் கச்சிதமாக நடித்திருக்கிறார். அது மட்டும் இல்லாமல் இந்த படத்தின் மூலம் கார்த்தியின் திரைவாழ்க்கை ஒரு திருப்புமுனையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் வந்திய தேவன் கதாபாத்திரத்தை மட்டுமே வைத்து படம் இயக்க இருக்கிறேன் என்று தயாரிப்பாளர் கலைபுலி எஸ் தானு பேட்டி ஒன்று கொடுத்து இருக்கிறார். தமிழ் சினிமா உலகில் பிரபலமான தயாரிப்பாளராக திகழ்பவர் கலைப்புலி எஸ் தானு. இவர் தயாரிப்பில் வெளிவந்த பல படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்து இருக்கிறது.

நானே வ்ருவேன் படம்:

அந்த வகையில் தற்போது இவர் தயாரிப்பில் வெளியாகியிருந்த படம் நானே வருவேன். இந்த படத்தில் தனுஷ் இரட்டை வேடத்தில் நடித்திருந்தார். செல்வராகவன் இந்த படத்தை இயக்கியிருக்கிறார். படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது. மேலும், இந்த படம் வெளியாகி முதல் நாளிலேயே 10 முதல் 12 கோடி வரை வசூல் செய்ததாக தயாரிப்பாளரே அறிவித்திருக்கிறார். அதுமட்டுமில்லாமல் பொன்னியின் செல்வன் படத்திற்கு போட்டியாக நானே வருவேன் படம் வெளியானது குறித்து எழுந்த சர்ச்சைக்கு தயாரிப்பாளர் தானு பேட்டி ஒன்றும் அளித்திருந்தார்.

கலைப்புலி s தாணு அளித்த பேட்டி:

இந்த நிலையில் கலைப்புலி s தாணு அவர்கள் வந்திய தேவன் கதாபாத்திரம் குறித்து கூறியிருந்தது, வந்தியதேவன் என்ற பெயரிலேயே தினத்தந்தி சண்முகநாதன் எனக்கு கதை ஒன்றை கொடுத்திருக்கிறார், அந்த கதையை படமாக எடுப்பதற்கு சில முயற்சிகளை கூட நான் எடுத்தேன். வந்திய தேவனை நான் மனதில் வரைந்து கொண்டு இருக்கிறேன், இப்படி இருக்கும் போது நான் பொன்னியின் செல்வனை போட்டி என்று சொல்லலாமா? அவர்களுக்கு ஒரு விடை இந்த வந்திய தேவன். அந்த கதையை நான் நிச்சயமாக எடுப்பேன். அந்த படத்தில் வந்தியதேவன் கதாபாத்திரத்தில் கார்த்தியை நடிக்க வைக்க இருக்கிறேன் என்று கூறியிருந்தார்.

Advertisement