ரங்கோலி பட இயக்குனர் வாலி மோகன் தாஸ் இயக்கத்தில் தற்போது உருவாகி இருக்கும் படம் மெட்ராஸ்காரன். இந்த படத்தில் கலையரசன், மலையாள நடிகர் ஷேன் நிகம், நிஹாரிகா உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். ஆக்சன் டிராமா பாணியில் இந்த படம் உருவாகி இருக்கிறது. எஸ்.ஆர் ப்ரொடக்ஷன் சார்பில் இந்த படத்தை ஜெகதீஷ் என்பவர் தயாரித்திருக்கிறார். இந்த படம் பொங்கல் பண்டிகை முன்னிட்டு வெளியாக இருக்கிறது.
சமீபத்தில் தான் இந்த படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா நடைபெற்று இருந்தது. இதில் பேசிய நடிகர் கலையரசன், இனிமேல் துணை கதாபாத்திர வேடங்களில் அதிகமாக நான் நடிக்கப் போவதில்லை. காரணம், இந்த துறையில் நான் ஆரோக்கியமாக இல்லை என்று நினைக்கிறேன். எனக்கு சோறு போட்டதே இந்த துணை கதாபாத்திரங்கள் தான். அதை நான் மறக்கவே மாட்டேன். மலையாள சினிமாவை பொறுத்தவரையில் நடிகர்கள் பெரிய படத்தில் சிறிய கதாபாத்திரங்கள் எல்லாம் நடித்திருப்பார்கள்.
மெட்ராஸ்காரன் படம்:
பின் அவர்களை ஹீரோவாக வைத்து இரண்டு, மூன்று படங்கள் வெளியாகும். இங்கேயும் இந்த மாதிரி சூழல் இருக்கிறது. அதை நான் மறுக்க மாட்டேன். ஆனால், குறைவாக தான் இருக்கிறது. அதுமட்டுமில்லாமல் இங்கு ஒரு நடிகர் வில்லனாக நடித்தால் வில்லனாகவே தான் நடிக்க கூப்பிடுகிறார்கள். அதே போல் சாவு என்று வந்தாலே என் பெயரை எழுதி இருப்பார்கள் போலிருக்கிறது. இதுவும் ஒரு பஞ்சாயத்தாகவே இருக்கிறது.
விழாவில் கலையரசன் பேசியது:
என்னை எப்போதும் செகண்ட் ஹீரோவாக தான் தேர்ந்தெடுக்கிறார்கள். இனிமேல் முடிந்த அளவு லீட் ரோலில் நடிப்பேன் என்று ரொம்ப எமோஷனலாக பேசியிருக்கிறார். தமிழில் பல குணச்சித்தர நடிகர்கள் மத்தியில் தனது சிறப்பான நடிப்பு மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் நடிகர் கலையரசன். இவர் மிஸ்கின் இயக்கத்தில் கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியான ‘நந்தலாலா ‘ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
கலையரசன் திரைப்பயணம்:
அதன் பின்னர் முகமூடி, அட்டகத்தி, தானா சேர்ந்த கூட்டம் போன்ற படங்களில் நடித்து வந்தார். ஆனால், இவருக்கு பிரபலத்தை ஏற்படுத்தி தந்தது மெட்ராஸ் படம் தான். இவர் பா. ரஞ்சித் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான படம் தான் மெட்ராஸ். அந்த படத்திற்கு பின்னர் இவர் சில படங்களில் ஹீரோவாகவும் நடித்திருந்தார்.
கலையரசன் பற்றிய தகவல்:
தற்போது இவர் படங்களில் பிசியாக கவனம் செலுத்தி வருகிறார். மேலும், நடிகர் கலையரசன் அவர்கள் திரைப்படத்தில் நடிக்க வரும் முன்பாக கணினி படிப்பை முடித்துவிட்டு சென்னையில் ஒரு பிரபல தகவல் தொழில் நுட்ப கம்பெனியில் பணிபுரிந்து வந்தார். அப்போது ஷண்முக பிரியா என்பவருடன் காதல் ஏற்பட்டு பின்னர் அவரையே திருமணம் செய்துகொண்டார்.