ஒரு வருடம் வேலை இல்லாமல் இருந்த கணவர். வேலை செய்து காப்பாற்றிய நிஷாவின் சோகமான பக்கம்.

0
16099
Nisha
- Advertisement -

விஜய் டி.வி-யின் காமெடிலேடி அறந்தாங்கி நிஷாவுக்கு அறிமுகம் அவசியமில்லை. பெண்களுக்கும் நகைச்சுவைக்கும் இடைவெளி அதிகம் என்கிற கருத்தை உடைத்தவர். ‘காமெடி எங்க ஏரியா…’ என்று ஆண்கள் கட்டிய அரணைத் தகர்த்து, அதிரடியாக உள்ளே புகுந்தவர்.  பொதுவாக பெண் மேடை ஸ்டாண்ட் அப் காமெடியன்கள் கொஞ்சம் அரிதான ஒன்று. அப்படி அறிமுகமான பல பெண் மேடை ஸ்டான்ட் அப் காமடியன்கள் விலாசம் இல்லாமல் சென்று விட்டார்கள். ஆனால், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கலக்க போவது யாரு நிகழ்ச்சி மூலம் அறிமுகமாகி, தற்போது மக்களின் மனதில் அதிக இடம் பிடித்தவர் அறந்தாங்கி நிஷா.

-விளம்பரம்-

காமெடியில் பெண்கள் அதிக முக்கியத்துவம் கொடுப்பதில்லை என்று கூறி வந்தார்கள் மத்தியில் தன்னுடைய நகைச்சுவை திறமையை வெளிப்படுத்தி அவர்கள் எண்ணம் தவறானது என்று நிரூபித்தவர் அறந்தாங்கி நிஷா. தன்னுடைய நகைச்சுவை பேச்சாற்றலால் பல மேடைகளில் கலக்கிய அறந்தாங்கி நிஷா தற்போது சினிமா துறையிலும் கலக்கிக் கொண்டிருக்கிறார்.அது மட்டும் இல்லைங்க நம்ம அறந்தாங்கி நிஷா சமீபத்தில் அறந்தாங்கி நிஷாவிற்கு இரண்டாம் குழந்தை பிறந்துள்ளது. அதுவும் அவர் ஆசைபட்டபடியே பெண் குழந்தை பிறந்திருக்கிறது. அறந்தாங்கி நிஷா கடந்த சில வருடங்களுக்கு முன் ரியாஸ் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

இதையும் பாருங்க : பணத்தை ஏமாற்றியதோடு முதல் மனைவியுடன் சேர்ந்து தன்னை துன்புறுத்துவதாக போலீசில் புகார் அளித்த நடிகை.

- Advertisement -

சொல்லப்போனால் திருமணம் ஆன பின்னர் தான் அறந்தாங்கி நிஷா கலக்க போவது யாரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். ரியாஸ் மற்றும் அறந்தாங்கி நிஷா தம்பதியருக்கு ஏற்கனவே பள்ளி செல்லும் வயதில் மகன் ஒருவர் இருக்கிறார். கடந்த சில நாட்களுக்கு முன்னர் நிஷாவிற்கு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது. நிஷா தனது உறவினர்கள் தான் திருமணம் செய்து கொண்டார் மேலும் இவர்கள் இருவருக்கும் சிறு வயது முதலே ஒரு நல்ல உறவும் இருந்திருக்கிறது. சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற நிஷா மற்றும் அவரது கணவர் இருவரும் தங்கள் வாழ்வில் நடந்த மறக்கமுடியாத நிகழ்வுகளை பகிர்ந்து கொண்டார்கள்.

வீடியோவில் 15: 39 நிமிடத்தில் பார்க்கவும்

அப்போது பேசிய நிஷா, நாங்கள் வருமான ரீதியாக மிகவும் கஷ்டப்பட்டு இருக்கிறோம். எனக்கு முதல் குழந்தை பிறந்தபோது என்னுடைய கணவர் வெளிநாட்டில் தான் இருந்தார் என்னுடைய முதல் மகன் பிறந்து ஒன்றரை ஆண்டுகளுக்கு பின்னர் சில குடும்ப பிரச்சனைகளால் என்னுடைய கணவரை வெளிநாட்டிலிருந்து வர வைத்து விட்டேன். ஆனால், வந்தபின்னர் ஒரு வருடம் என்னுடைய கணவர் வேலை இல்லாமல் இருந்தார் பின்னர் நான் பட்டிமன்றத்திற்கு சென்று அதில் வந்த காசில் தான் சாப்பிட்டோம் அப்போது வாங்கிய 2000, 2500 ரூபாய் தான் எங்கள் குடும்பத்தை காப்பாற்றியது. அதன் பின்னர் ஒரு வருடம் கழித்து தான் அவருக்கு வேலை கிடைத்தது

-விளம்பரம்-

Advertisement