விஜய் காலில் விழ சொன்னாங்களா? விஜய் என்ன சொன்னார்? சர்ச்சை வீடியோவில் வந்த பெண்ணே அளித்த விளக்கம்

0
114
- Advertisement -

கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக பாதிக்கப்பட்டவர்களை விஜய் நேரில் சந்தித்த போது பெண்மணியை கட்டாயப்படுத்தி விஜய் காலில் விழ வைத்த சர்ச்சை தான் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. கள்ளக்குறிச்சியில் விஷசாராயம் குடித்து 50க்கும் மேற்பட்டோர் இறந்திருக்கும் சம்பவம் தான் ஒட்டுமொத்த தமிழகத்தையே புரட்டி போட்டு இருக்கிறது. சில பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

-விளம்பரம்-

அதுமட்டுமில்லாமல் பல பேர் வாந்தி, மயக்கம், தலைவலி, வயிறு எரிச்சலால் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இருந்தாலுமே, மருத்துவர்கள் பல பேர் இறக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இதை அடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு இருக்கிறார்கள். அதில் மெத்தனால் கலந்த சாராயத்தை குடித்ததால் தான் இந்த உயிரிழப்பிற்கு காரணம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரிந்திருக்கிறது. மேலும், காவல்துறை பொறுப்பு இல்லாமல் இருந்ததால் இந்த சம்பவம் நிகழ்ந்து இருக்கிறது.

- Advertisement -

கள்ளக்குறிச்சி சம்பவம்:

இதனால் பத்துக்கு மேற்பட்ட காவல்துறை அதிகாரிகளை அதிரடியாக பணி நீக்கம் செய்யப்பட்டிருக்கிறது. இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர்களை உடனடியாக கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இறந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 10 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்றும் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் உத்தரவு போட்டிருக்கிறார். கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக பிரபலங்கள், எதிர்க்கட்சி தலைவர்கள் என பலரும் திமுக அரசை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். அந்த வகையில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், நடிகருமான விஜய் அவர்கள் தமிழக அரசை கண்டித்தும், பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ஆறுதல் கூறும் வகையில் பதிவு ஒன்று போட்டிருக்கிறார்.

விஜய் பதிவு:

அதில் அவர், கள்ளக்குறிச்சி மாவட்டம், கருணாபுரம் பகுதியில் கள்ளச் சாராயம் அருந்திய 25க்கும் மேற்பட்டோர் காலமான செய்தி மிகுந்த அதிர்சியையும், மன வேதனையையும் அளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்வதோடு, உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்கள் விரைவில் முழு உடல்நலம் பெற இறைவனைப் பிரார்த்திக்கின்றேன். கடந்த ஆண்டு இதே நிகழ்வு காரணமாகப் பல உயிர்களை இழந்த துயரத்தில் இருந்து இன்னும் முழுமையாக மீளாத நிலையில், மீண்டும் இப்படியொரு சம்பவம் நிகழ்ந்திருப்பது அரசு நிர்வாகத்தின் அலட்சியத்தையே காட்டுகிறது.

-விளம்பரம்-

நேரில் சந்தித்த விஜய்:

இது போன்ற சம்பவங்கள் நிகழாத வண்ணம் இனிமேலாவது தமிழக அரசு கடுமையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு தடுக்க வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன் என்று கூறி இருக்கிறார். இதை தொடர்ந்து இன்று மாலை நடிகர் விஜய் அவர்கள் கள்ளச்சாராயத்தால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து நலம் விசாரித்து பாதிக்கப்பட்டவர்கள் உடைய உறவினர்களுக்கு ஆறுதல் தெரிவித்திருக்கிறார். பின் விஜய், பாதிக்கப்பட்டவர்களை ஒவ்வொருவராக சந்தித்து ஆறுதல் கூறி வந்தார். அப்போது அங்கிருந்த பெண்மணி ஒருவர், அவருடைய காலில் விழுந்து கதறி அழுதார்.

சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த பெண்:

உடனே விஜய் தடுத்து அவருக்கு ஆறுதல் சொன்னார். இது தொடர்பான வீடியோ தான் இணையத்தில் வைரலாகி இருந்தது. இதற்கு பலருமே, விஜய் காலில் விழ சொல்லி கட்டாயப்படுத்தி அந்த பெண்மணியை விழ வைத்திருக்கிறார். எதற்கு இந்த கேவலமான செயல். அரசியலுக்கு வருவதற்கு இப்படி எல்லாம் செய்வதா? என்றெல்லாம் பயங்கரமாக விமர்சித்து பேசி இருக்கிறார்கள். இந்நிலையில் இது தொடர்பாக அந்த பெண்மணியிடம் விசாரித்த போது, அந்த மாதிரி யாரும் காலில் விழ சொல்லவில்லை. நானே தான் அவர் காலில் விழுந்தேன். நிறைய கட்சித் தலைவர்கள் வந்து போனதாக சொல்கிறார்கள். நான் யாரையுமே பார்க்கவில்லை. விஜய் மட்டும் தான் எங்கள் அருகில் இருந்து ஆறுதல் சொல்லி இருந்தார். அதுமட்டுமில்லாமல் பெண்கள் பேச்சை கேளுங்கள் என்று அவர்களுக்கு அறிவுரையும் சொன்னார் என்று கூறியிருக்கிறார்.

Advertisement