படத்தில் ரஜினி செய்ய இருந்த மாற்றம், வேண்டாம் என்று சொல்லியுள்ள கமல் – சூப்பர் ஹிட் அடித்த ரஜினியின் அந்த படம்.

0
466
rajini
- Advertisement -

கமல் சொன்ன அறிவுரையால் ரஜினியின் படம் மெகா ஹிட்டாகி இருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் என்றென்றும் சூப்பர் ஸ்டாராக ஜொலித்துக் கொண்டு இருப்பவர் நடிகர் ரஜினிகாந்த். இவர் கர்நாடக மாநிலத்தில் பேருந்து நடத்துனராக வாழ்க்கையை தொடங்கி இன்று தமிழ் திரையுலகில் மிகப் பெரிய ஸ்டாராக திகழ்ந்து கொண்டிருக்கிறார். இவர் 1975 ஆம் ஆண்டு வெளிவந்த அபூர்வ ராகங்கள் என்ற படத்தின் மூலம் தன்னுடைய திரைப் பயணத்தை தொடங்கி இருந்தார்.

-விளம்பரம்-

அன்று தொடங்கி இன்று வரை இவர் 168 படங்களில் நடித்து முடித்திருக்கிறார். மேலும், இவருடைய படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பையும், அதிக வசூலையும் பெற்றுத் தந்திருக்கின்றது. இதனால் இவருக்கு தமிழகத்தில் மட்டுமில்லாமல் உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். அதோடு இவருடைய நடிப்பு திறமைக்காக கடந்த ஆண்டு தேசிய விருதும் பெற்றிருந்தார். இதற்கு பலரும் வாழ்த்தி இருந்தார்கள். சமீபத்தில் இவருடைய நடிப்பில் வெளிவந்த அண்ணாத்த படம் மக்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று இருந்தாலும் வசூலில் கோடிகளை குவித்து இருக்கிறது.

- Advertisement -

ஜெயிலர் படம்:

குடும்ப உறவுகளின் முக்கியத்துவத்தையும், குடும்ப பாசத்தையும் மையமாக வைத்து இந்த படம் உருவாகி இருந்தது. இதனை தொடர்ந்து தற்போது ரஜினிகாந்த் அவர்கள் ஜெயிலர் என்ற படத்தில் நடிக்க கமிட்டாகியிருக்கிறார். இந்த படத்தை நெல்சன் குமார் இயக்குகிறார். இந்த படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார். இதற்கான வீடியோ எல்லாம் சமீபத்தில் வெளியாகி இருந்தது. இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனமே தயாரிக்கிறது. இந்த படத்தில் கன்னட நடிகர் சிவராஜ்குமார் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

படம் குறித்த தகவல்:

இவர்களுடன் பிரியங்கா மோகன், யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, கிளி அரவிந்த், இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார், நெல்சன் படங்களில் ஆஸ்தான நடிகர்கள் பலரும் இந்த படத்தில் நடிக்க இருக்கிறார்கள். இந்த படம் 2023 ஆம் ஆண்டு பொங்கல் அன்று வெளியாகும் என்று கூறப்படுகிறது. இந்த படத்தின் டைட்டில் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டிங் ஆகி இருந்தது. இந்த நிலையில் கமல் சொன்ன அறிவுரையால் ரஜினியின் படையப்பா படம் சூப்பர் ஹிட் ஆனது என்ற தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

-விளம்பரம்-

படையப்பா படம்:

இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் 1999 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் படையப்பா. இந்த படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் சிவாஜி, ரம்யா கிருஷ்ணன், சௌந்தர்யா என பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள். இந்த படம் வெளியாகி மக்கள் மத்தியில் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்து இருந்தது. காலம் கடந்தாலும் படையப்பா திரைப்படம் இன்றும் ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்த படம் குறித்த ஒரு சுவாரஸ்யமான தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது. இதை இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார் பல்வேறு பேட்டிகளில் தெரிவித்திருக்கிறார்.

கமல் சொன்ன அறிவுரை:

அதாவது, படையப்பா படத்தின் பிரிவியூ ஷோவை பார்த்து முடித்த ரஜினி, இயக்குனரிடம் படம் நன்றாக இருக்கு. ஆனால், ரொம்ப நீளமாக இருக்கிறது. மூன்றரை மணி நேரம் படம் ஓடியதால் ரஜினி இரண்டு இன்ட்ரவல் விட்டு படத்தை வெளியிடலாம். இந்தியில் கூட அப்படி ஒரு படம் வந்திருக்கிறது என்று கூறியிருந்தார். பின் கமலிடமும் ரஜினி ஆலோசனை கேட்டிருந்தார். அதற்கு கமல், வேண்டாம், தமிழுக்கு செட்டாகாது. நீங்கள் அதனை இயக்குனரிடம் விட்டுவிடுங்கள். அவருக்கு தெரியும். நீங்கள் நடித்ததனால் எல்லா சீன்களும் நல்ல சீன்களாக தெரியும். நீங்கள் தலையிட வேண்டாம் என்று கூறியிருந்தார். அதேபோல் ரஜினியும் அந்த விஷயத்தை இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார் இடமே விட்டுவிட்டார். அதேபோல் படம் மெகா ஹிட்டானது.

Advertisement