வரலாற்றின் மாபெரும் துயரங்களில் ஒன்று – கொண்டாட்டத்தை தவிர்த்துவிட்டு ஒடிஷா ரயில் விபத்து குறித்து கமல் போட்ட பதிவு.

0
1613
Kamal
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்றுள்ள கோர ரயில் விபத்து குறித்து கமல் உருக்கமான பதிவு ஒன்றை போட்டுள்ளார். ஒடிசா மாநிலம் பாலசோர் அருகே பயணிகள் பயணித்த இரண்டு ரயிலும், ஒரு சரக்கு ரயிலும் மோதிக்கொண்ட சம்பவம் நாடு முழுவதும் அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த விபத்தில் இதுவரை 260 பேருக்கு மேல் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

-விளம்பரம்-

அதோடு 650 பேருக்கு மேல் படுகாயம் அடைந்திருக்கிறார்கள். விபத்து நடந்த இடத்திற்கு விபத்தில் சிக்கிய பயணிகளை மீட்பு குழுவினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சை அளித்து வருகிறார்கள். மேலும், இந்த கோர விபத்தில் ஹவுரா – சென்னை கோரமண்டல் எக்ஸ்பிரஸ், யஷ்வந்த்பூர் – ஹவுரா சூப்பர் பாஸ்ட் அதுமட்டுமில்லாமல் உயிரிழந்தோர் மற்றும் காயமடைந்த குடும்பங்களுக்கு நிவாரண உதவி வழங்குவதாக ரயில்வே அமைச்சர் அறிவித்திருக்கிறார்.

- Advertisement -

தற்போது இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இதை தொடர்ந்து பிரதமர் மோடி, தமிழ்நாடு முதல்வர், மு க ஸ்டாலின் உட்பட பல அரசியல் தலைவர்கள் இந்த கோர சம்பவத்திற்கு இரங்கலை தெரிவித்து வருகிறார்கள். அது மட்டும் இல்லாமல் தமிழ்நாட்டில் இது ஒரு துக்க நாள் நாளாக அனுசரிக்கப்படும் என்று மாநில அரசு அறிவித்து இருக்கிறது. மேலும், பல்வேறு பிரபலங்களும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் இந்த சம்பவம் குறித்து பதிவிட்டுள்ள நடிகர் கமல் ‘ ஒடிசா மாநிலம் பாலசோர் அருகே இரு பயணிகள் ரயில்களும், ஒரு சரக்கு ரயிலும் மோதிக் கொண்ட விபத்தில் 280-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததும், ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதும் மிகுந்த வேதனையையும், அதிர்ச்சியையும் அளிக்கிறது. நாட்டையே உலுக்கியுள்ள இந்த விபத்தில் தமிழகத்தைச் சேர்ந்தவர்களும் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது நம் வேதனையை அதிகரிக்கிறது.

-விளம்பரம்-

உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுமென விழைகிறேன். உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள இந்த ரயில் விபத்து, இந்திய வரலாற்றின் மாபெரும் துயரங்களில் ஒன்றாக மாறியிருக்கிறது. பாதிக்கப்பட்டவர்கள், விபத்தின் தாக்கத்தில் இருந்து மீள தேச மக்கள் அனைவரும் துணை நிற்போம்’ என்று பதிவிட்டுள்ளார்.

கமலின் இந்த பதிவை கண்ட ரசிகர்கள் பலரும் அன்பே சிவம் படத்தில் இடம்பெற்ற ரயில் விபத்து காட்சியை நினைவுகூர்ந்து வருகின்றனர். அதே போல கமல் நடிப்பில் கடந்த ஆண்டு இதே நாளில் வெளியான விக்ரம் படம் இன்றோடு ஒரு ஆண்டை நிறைவு செய்துள்ளதை தொடர்ந்து ட்விட்டரில் பலர் oneyearofvikram என்று பதிவிட்டு வருகின்றனர். ஆனால், கமல் இந்த கொண்டாட்டத்தை தவிர்த்து இருக்கிறார்.

Advertisement