விஜயகாந்த் படத்தில் இயக்குனராக கமல் – இந்த விடீயோவை பார்த்திருக்கீங்களா.

0
2934
vijayakanth
- Advertisement -

ஒரு காலத்தில் தமிழ் சினிமாவுலகில் போட்டி போட்டுக்கொண்டு முன்னணி நடிகர்களாக திகழ்ந்தவர் ரஜினிகாந்த், கமலஹாசன் மற்றும் விஜயகாந்த். கமலஹாசன் மற்றும் விஜயகாந்த் இவர்கள் இருவருமே தற்போது அரசியலில் திகழ்ந்து வரும் முக்கிய புள்ளிகள் என்பது குறிப்பிடத்தக்கது. நடிகர் விஜயகாந்த் அவர்கள் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் தலைவர் ஆவார். இவர் முழு கவனத்தையும் அரசியலில் ஈடுபடுத்தி வருகிறார். தூரத்து இடி முழக்கம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் விஜயகாந்த். இவரை கருப்பு எம்ஜிஆர் என்று தான் அழைப்பார்கள்.

-விளம்பரம்-

இவருடைய எல்லா படமும் வெற்றிப் படமாக அமைந்துள்ளது. இவர் அதிகமாக படங்களில் போலீஸ் அதிகாரியாகவும், சமூக சேவைகளைச் செய்யும் கதாபாத்திரங்களில் தான் அதிகம் நடித்து உள்ளார். இந்நிலையில் நடிகர் விஜயகாந்த் அவர்கள் கமலஹாசனுடன் இணைந்து நடித்த படத்தின் புகைப்படம் தற்போது சோஷியல் மீடியாவில் வெளியாகியுள்ளது.

இதையும் பாருங்க : நல்லா கொள்ளையடிக்கறாங்க- தமிழ்நாடு மின்சார துறையை தைரியமாக விமர்சித்த பிரசன்னா.

- Advertisement -

1986 ஆம் ஆண்டு ஆர்.சி. சக்தி இயக்கத்தில் வெளிவந்த படம் தான் மனக்கணக்கு. இந்த படத்தில் விஜயகாந்த், சரத்பாபு, அம்பிகா, ராதா உட்பட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள். மனக்கணக்கு படத்தில் நடிகர் கமலஹாசன் அவர்கள் இயக்குனர் கதாபாத்திரத்தில் அதாவது ஒரு கெஸ்ட் ரோலில் நடித்திருந்தார்.

தற்போது அந்த படத்தின் வீடியோ மற்றும் புகைப்படங்கள் தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாக பரவி வருகிறது. இதனை பார்த்து பலர் அதிகமாக ஷேர் செய்து வைக்கிறார்கள். தற்போது கமலஹாசன் அவர்கள் ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் காஜல் அகர்வால் கதாநாயகியாக நடிக்கிறார்.

-விளம்பரம்-
Advertisement