சீனாவில் தொடங்கிய இந்த கொரோனா வைரஸின் ஆட்டம் தற்போது உலகம் முழுவதும் உள்ள பல நாடுகளில் பரவி கோரதாண்டவம் ஆடிக் கொண்டு இருக்கிறது. நாளுக்கு நாள் அப்பாவி மக்களின் உயிரை பறித்து வருகிறது. கொரோனா வைரஸை ஒழிக்க இன்னும் மருந்து கண்டுபிடிக்கவில்லை. இதனால் மக்கள் அனைவரும் தங்களின் பாதுகாப்பாக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை உயர்ந்துகொண்டே செல்கிறதே தவிர குறைந்த பாடில்லை.
மேலும், இந்த இக்கட்டான சூழ்நிலையில் மத்திய அரசு தொடர்ந்து ஊரடங்கை நீட்டித்து வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. மக்கள் அனைவரும் வெளியில் வரக்கூடாது என்பதால் வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடக்குகிறார்கள். இந்நிலையில் கோடைகாலம் காரணமாகவும், கொரோனா பரவல் காரணமாகவும் மக்கள் வீட்டிலேயே இருப்பதால் மின்சாரத்தின் பயன்பாடு அதிகரித்துள்ளது.
அதோடு கொரோனாவால் ஒட்டுமொத்த திரையுலகமும் மூடப்பட்டது உள்ளது. வீட்டுக்குள் இருப்பது போரடிக்காமல் இருப்பதற்கு சமூகவலைத்தளங்களை அதிகமாக பயன்படுத்தி வருகிறார்கள். பலரும் தங்களுக்கு பிடித்த வேலைகளை செய்து வருகிறார்கள். இந்நிலையில் நடிகர் பிரசன்னா அவர்கள் மின்சார வாரியம் குறித்து ட்விட்டரில் கேள்வி எழுப்பியுள்ளார்.
அதில் அவர் கூறி இருப்பது, இந்த கொரோனா லாக்டவுனில் தமிழ்நாடு மின்சார வாரியம் ஒரு கொள்ளையடிக்கும் செயலில் ஈடுபட்டிருக்கிறது. இதை உங்களில் எத்தனை பேர் நினைக்கிறீர்கள்? எனப் பதிவிட்டுள்ளார். இதை பார்த்த பலரும் பதில் அளித்து வருகின்றனர். மேலும், தங்களுக்கும் இம்மாதம் அதிக மின் கட்டணம் வந்ததாக கூறி வருகின்றனர்.