மொட்டை தலை, புத்தர் கோலத்தில் இருக்கும் கமல். நடனமாடும் ஜெயலலிதா. வைரலாகும் புகைப்படம்.

0
79399
kamaljayalalitha
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் புகழ்பெற்ற நடிகர்களில் கமலஹாசனும் ஒருவர். இவர் திரைப்பட நடிகர் மட்டுமில்லாமல் அரசியல்வாதியும் ஆவார். தமிழ் சினிமா உலகில் மாறுபட்ட வேடங்களில் நடிப்பதில் கமல்ஹாசன் கைதேர்ந்தவர். இவர் நடிகர் மட்டுமில்லாமல் திரைக்கதையாசிரியர், இயக்குனர், பாடலாசிரியர், பின்னணிப் பாடகர், நடன அமைப்பாளர் என பன்முகம் கொண்டவர். நடிகர் கமலஹாசன் அவர்கள் 1960 ஆம் ஆண்டு வெளிவந்த களத்தூர் கண்ணம்மா என்ற படத்தின் மூலம் சினிமா உலகிற்கு அறிமுகமானர். இவர் இந்த படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார். முதல் படத்திலேயே இவர் மக்கள் மத்தியில் பிரபலம் ஆனார்.

-விளம்பரம்-

அன்று தொடங்கி இன்று வரை இவர் உலக அளவில் புகழ்பெற்ற நடிகராக திகழ்ந்து வருகின்றார். இதனால் இவரை உலக நாயகன் என்று தான் அழைக்கிறார்கள். இவர் தன்னுடைய சிறு வயதிலிருந்தே சினிமாவில் நடித்து கொண்டு வருகின்றார். அந்த வகையில் இவர் மறைந்த முன்னாள் முதலமைச்சருமான ஜெயலலிதா அவர்களின் படத்தில் கூட நடித்திருக்கிறார். இது பலரும் அறிந்திராத ஒன்று. தமிழ் சினிமா உலகில் பழம்பெரும் நடிகையாக திகழ்ந்தவர் ஜெயலலிதா. இவர் நடிகை என்பதை விட தமிழ்நாட்டின் முதல்வர் என்று சொன்னால் தான் பலருக்கும் தெரியும்.

- Advertisement -

இதையும் பாருங்க : போனை கிளீன் செய்யும் போது இந்த புகைப்படம் கிடைத்தது. பழைய புகைப்படத்தை பதிவிட்ட டிடி

இவர் தமிழக முதலமைச்சராக 5 முறை பதவி வகித்து உள்ளார். நடிகை ஜெயலலிதா அவர்கள் அரசியலில் நுழைவதற்கு முன் 140க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து உள்ளார். இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல மொழி படங்களில் நடித்து உள்ளார். இந்நிலையில் நடிகை ஜெயலலிதா அவர்களும் நடிகர் கமல்ஹாசன் அவர்களும் இணைந்து படத்தில் நடித்து உள்ளார்கள். 1974 ஆம் ஆண்டு வெளிவந்த “அன்புத்தங்கை” என்ற படத்தில் கமலஹாசன் அவர்கள் சிறப்பு வேடத்தில் நடித்திருந்தார்.

-விளம்பரம்-

இந்த படத்தில் நடிகை ஜெயலலிதா அவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து உள்ளார். இந்த படத்தில் நடிகை ஜெயலலிதா அவர்கள் நடனம் ஆடும் காட்சியில் கமல்ஹாசன் நடித்து இருப்பார். மேலும், இந்த படத்தில் நடித்த போது எடுத்த புகைப்படம் ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் அனைவரும் ஜெயலலிதாவும், கமலும் இணைந்து நடித்திருக்கிறார்களா!! என்று வியந்து போய் உள்ளார்கள்.

Advertisement