போனை கிளீன் செய்யும் போது இந்த புகைப்படம் கிடைத்தது. பழைய புகைப்படத்தை பதிவிட்ட டிடி

0
65487
- Advertisement -

விஜய் டிவியில் எத்தனையோ தொகுப்பாளினிகள் இருந்தாலும் ரசிகர்களின் அன்றும் இன்றும் என்றும் பேவரைட் தொகுப்பாளினியாக திகழ்ந்து வருகிறார் டிடி எனப்படும் திவ்யதர்ஷினி. இவர் 20 ஆண்டுகளுக்கு மேலாக தொகுப்பாளினியாக பணியாற்றி வருகிறார். டிடி தன்னுடைய ஐந்தாம் வகுப்பு படிக்கும் போதே டிவி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக சின்னத்திரைக்கு அறிமுகமானவர். விஜய் தொலைக்காட்சியில் காபி வித் டிடி என்ற நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலமடைந்தார் டிடி. இதனை தொடர்ந்து பல நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக தொகுத்து வழங்கினார்.

-விளம்பரம்-
Image result for deepak and dd

- Advertisement -

இவருக்கு சிறந்த தொகுப்பாளினி என்ற பட்டத்தையும் வழங்கி உள்ளார்கள். இவர் சின்னத்திரையில் வருவதற்கு முன்பாகவே பல திரைப்படங்களில் நடித்து உள்ளார். இந்நிலையில் டிடி எப்போதும் சமூக வலைதளத்தில் ஆக்ட்டிவாக இருப்பார். மேலும், டிடி தனது புகைபடங்களை வெளியிடுவது வழக்கம். இந்நிலையில் தொகுப்பாளினி டிடி அவர்கள் தன்னுடைய போனை கிளீன் செய்யும் போது புகைப்படம் ஒன்று கிடைத்துள்ளது. அந்த பழைய புகைப்படத்தை தற்போது சோசியல் மீடியாவில் பதிவிட்டுள்ளார்.

இதையும் பாருங்க : தனது முறை பெண்ணுக்கு தனுஷ் செய்த முறை. வைரலாகும் க்யூட் புகைப்படம்

-விளம்பரம்-

அந்த புகைப்படத்தில் டிடி, தீபக் மற்றும் இன்னொரு நபர் உள்ளார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. டிடி மற்றும் தீபக் நல்ல நண்பர்கள். இவர்கள் இருவருமே சிறந்த தொகுப்பாளர்கள் என்று சொல்லலாம். பிரபல நடிகரும், தொகுப்பாளருமாக திகழ்ந்து கொண்டு இருக்கிறார் தீபக். இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஜென்மம் எக்ஸ் என்ற திகில் தொடரில் நடித்திருந்தார். அதன் பின்னர் சன் டிவி, ஜெயா டிவி, ராஜ் டிவி போன்ற பல்வேறு தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பான தொடர்களில் நடித்து வந்தார்.

அதிலும் இவருக்கு மிகப்பெரிய பிரபலத்தை ஏற்படுத்தி தந்தது சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தென்றல் தொடர் தான். இவர் நடித்த தென்றல் தொடர் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருந்தது. இந்த தொடருக்காக சிறந்த நடிகர் என்ற விருதையும் பெற்றிருக்கிறார் நடிகர் தீபக். தொலைக்காட்சி நடிகராக மட்டுமல்லாமல் நடிகர் தீபக் தொகுப்பாளராகவும் இருந்து வந்தார். இந்நிலையில் டிடி மற்றும் தீபக் இருக்கும் பழைய புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலாக பரவி வருகிறது.

Advertisement