கமலுக்கு பொது மேடையிலேயே முத்தம் கொடுத்த நடிகை. இவங்களுக்கு அந்த உரிமை இருக்கு தான்.

0
4367
- Advertisement -

சினிமா உலகில் நடிப்பில் ஜாம்பவான் என்ற படத்தை பெற்றவர் நடிகர் கமல் ஹாசன். மேலும்,இவருடைய நடிப்பு திறனை பாராட்டாதவர்கள் எவரும் இலர். அதோடு நடிகர் கமல்ஹாசன் அவர்கள் பரமக்குடியை பூர்விகமாக கொண்டவர் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. இந்நிலையில் சமீபத்தில் உலகநாயகன் கமலஹாசன் அவர்கள் தன் குடும்பத்துடன் எடுத்த போட்டோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. மேலும்,இந்த புகைப்படம் குறித்து பல விமர்சனங்கள் எழுந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் உலகநாயகன் கமலஹாசன் அவர்கள் பரமக்குடியில் தனது தந்தை திறப்பு விழாவிற்கு தன் குடும்பத்தோடு சென்று இருந்தார். இதனைத் தொடர்ந்து பரமக்குடியில் கமலின் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் அவருடைய சகோதரர் சாருஹாசன், மருமகள் சுகாசினி மணிரத்தினம், மகள்கள் ஸ்ருதி மற்றும் அக்ஷரா ஹாசன் மற்றும் நடிகை பூஜா குமார் ஆகியோருடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

-விளம்பரம்-

நடிகை சுகாசினி அவர்கள் விழாவின் போது பொது மேடையில் உலகநாயகன் கமலஹாசன் அவர்கள் கண்ணத்தில் முத்தமிட்டு உள்ளார். மேலும், இதனை நடிகர் சாருஹாசன் பார்த்து உள்ளார். மேலும்,அப்போது சுகாசினி கமலஹாசன் கன்னத்தில் முத்தமிடும் போது எடுக்கப்பட்ட புகைப்படம் தற்போது இணையங்களில் வைரலாக பரவி வருகிறது. நடிகை சுகாசினி அவர்கள் திரைப்பட நடிகை மட்டுமல்லாமல் தயாரிப்பாளர், இயக்குனரும் ஆவார். நடிகை சுகாசினி அவர்கள் 1988ல் தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனர் மணிரத்தனத்தை திருமணம் செய்து கொண்டார். தற்போது இவர் தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளராகவும் செயல்பட்டு வருகிறார். மேலும்,இவர் தமிழ்,தெலுங்கு,கன்னடம்,மலையாளம் என பல மொழி படங்களில் நடித்தவர்.

இதையும் பாருங்க : ஹே மொகரகட்ட. கடைதிறப்புக்கு போனில் அழைத்த நபரால் கடப்பான டிடி.

- Advertisement -

நடிகை சுகாசினி சினிமா உலகில் தனக்கென்ற ஒரு பாதையை உருவாக்கியவர். மேலும், இவர் நடிகர் சாருஹாசனின் மகளும் ஆவார். அப்படிப் பார்த்தால் நடிகர் கமல்ஹாசனுக்கும் மகள் முறை தான். ஏன்னா, நடிகர் சாருஹாசன் அவர்கள் கமலஹாசனின் மூத்த சகோதரர் ஆவார். நடிகர் சாருஹாசனை எல்லாருக்கும் தெரிந்த முகம் தான். இவர் திரைப்பட நடிகர், இயக்குனர்,தொலைக்காட்சி நடிகர் மற்றும் ஓய்வு பெற்ற வழக்கறிஞர் என பல முகங்களைக் கொண்டவர். இவர் கன்னடம், தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என பல மொழி திரைப்படங்களில் தன்னுடைய நடிப்பு திறனை காண்பித்தவர்.

அதுமட்டும் இல்லாமல் இவர் நடிகர் கமல்ஹாசனின் மூத்த சகோதரரும் ஆவார். மேலும், சுகாசினியின் தந்தை என்பது அனைவருக்கும் தெரிந்தது தான். தற்போது கமலஹாசன் அவர்களின் பிறந்தநாள் விழாவில் இவர்கள் குடும்பத்தோடு கலந்து கொண்டுள்ளார்கள். இதனைத்தொடர்ந்து கமல்ஹாசன் குடும்ப புகைப்படத்தில் நடிகை பூஜை ஏன்? உள்ளார் என பல விமர்சனங்கள் எழுந்தது. மேலும்,கமல்ஹாசனின் இந்தியன் 2 படத்திற்கான படப்பிடிப்புகள் மும்முரமாக போய் கொண்டு உள்ளது.இந்நிலையில் இப்படி கமல்ஹாசன் குறித்து விமர்சனங்கள் வருவது குறித்து ரசிகர்கள் வருத்தத்தில் உள்ளார்கள் என இணையங்களில் நெட்டிசன்கள் தெரிவிக்கின்றன.

-விளம்பரம்-
Advertisement