சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்து உள்ளார்கள் பல்வேறு நடிகர்கள். அந்த வரிசையில் தமிழ் சின்னத்திரையில் பிரபலமான நடிகராகவும்,தொகுப்பாளராகவும் வலம் வருபவர் நடிகர் தீபக். இவர் தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக இருந்து வருகிறார். மேலும்,நடிகர் தீபக் அவர்கள் சன் டிவியில் மிகவும் பிரபலமான சீரியல்களில் ஒன்றான ‘திருமதி செல்வம்’ சீரியலில் செர்ரி என்ற கதாபாத்திரத்தில் நடித்து உள்ளார். இப்படி சின்னத்திரையில் தன்னுடைய நடிப்பு திறனை தொடங்கியவர் நடிகர் தீபக். பின் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஜோடி நம்பர்-1, டான்ஸ் ஜோடி டான்ஸ் என பல நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக பணியாற்றி உள்ளார். மேலும், இவர் நடிப்பதை விட அதிகமாக நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக தான் பட்டையை கிளப்புகிறார் என்பது அனைவருக்கும் தெரிந்தே.
இதுமட்டும் இல்லாமல் இவர் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரையில் கூட கால் தடம் பதித்து உள்ளார் என்று கூட சொல்லலாம். நடிகர் தீபக் அவர்கள் கடந்த 2008 ஆம் ஆண்டு ரஞ்சினி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். இதனைத்தொடர்ந்து இவர் சன் டிவியில் ஒளிபரப்பான ‘தென்றல்’ சீரியலில் ஹீரோ கதாபாத்திரத்தில் மாஸ் காட்டினார். மேலும்,இந்த சீரியல் மூலம் தான் நடிகர் தீபக் ரசிகர் மத்தியில் வைரலாக பேசப்பட்டார். அதுமட்டும் இல்லாமல் இந்த சீரியலில் இவருக்கு சிறந்த ஜோடி என்று தமிழக அரசு விருதும் வழங்கி இருந்தார்கள். ஆரம்ப கட்டத்தில் சினிமாவில் சின்னச் சின்ன கதாபாத்திரங்களில் நடித்து வந்தார் தீபக். அதன் பின்னர் 2015 ஆம் ஆண்டு “இவனுக்கு தண்ணில கண்டம்” என்ற படத்தில் ஹீரோவாக நடித்தார்.
இதையும் பாருங்க : படுக்கையறையில் படு மோசமான ஆடையில் போஸ். ரசிகர்களை ஷாக்காக்கிய ஷாலு ஷம்மு.
இந்த படத்தை சின்னத்திரையில் மிகவும் பிரபலமான ‘சின்ன பாப்பா, பெரிய பாப்பா’ என்ற தொடரை இயக்கிய சக்திவேல் அவர்கள் தான் இயக்கி இருந்தார். ஆனால், இந்த படம் மக்கள் மத்தியில் ஓரளவிற்கு தான் பிரபலமானது. இந்நிலையில் நடிகர் தீபக் அவர்கள் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அந்த பேட்டியில் அவர் விஜய் தொலைக்காட்சியில் பிரபலமான தொகுப்பாளர் டிடி என்கிற திவ்யதர்ஷினி இடம் போன் செய்து பேசியுள்ளார். அதில் அவர்கள் இருவரும் பேசிய கருத்துக்கள் குறித்து சமூக வலைதளங்களில் வைரலாக பரவுகிறது. மேலும், தீபக் அவர்கள் டிடிக்கு போன் செய்து பேசிய வீடியோவைஎன இணையங்களில் பதிவிட்டு உள்ளார்கள். மேலும், அந்த வீடியோவை பார்த்து ரசிகர்கள் பல கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர்.
அந்த பேட்டியில் தீபக் அவர்கள் டிடிக்கு போன் செய்து விளம்பர இயக்குனர் போல் பேசினார். பின் விளம்பரத்தை சீக்கிரமாக எடுப்பதாகவும் அதற்கு நீங்கள் நடிக்க உள்ளீர்களா! என்று கூறினார். மேலும், அந்த விளம்பரத்தை பொங்கல் அன்று வெளியிட வேண்டும் என்று சொன்னார். இதற்கு டிடியை விளம்பரத்தில் நடிக்க சொன்னார். மேலும்,இந்த விளம்பரத்தை பிரபலமானவர் இயக்குகிறார் என்று சொன்னவுடன் டிடி அவரை எனக்கு மெசேஜ் பண்ண சொல்லுங்கள். நான் பார்த்து விட்டு பிறகு பதில் சொல்கிறேன் என்று கூறினார்.ஆனால்,தீபக் விடாமல் அவரை கடுப்பேற்றும் வகையில் பேசிக்கொண்டிருந்தார். டிடி பின்னாடி கோபமடைந்து போன் கட் செய்து விட்டார். மீண்டும் தீபக், டிடிக்கு போன் செய்து நான் தான் தீபக் பேசுறேன் என்று கலாய்த்து நிகழ்ச்சியே செம கல கலப்பாக போனது என்று கூட சொல்லலாம்.