தேவர் மகன் 2 தான் – தலைவன் இருக்கின்றான். விஜய் சேதுபதியின் ரோல் என்ன தெரியுமா ?

0
1785
devarmagan
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் உச்சத்தில் இருக்கும் நடிகர்களில் கமல்ஹாசனும் ஒருவர். இவர் இந்தியாவில் மட்டுமில்லாமல் உலக அளவில் புகழ்பெற்ற கலைஞர். தற்போது கமலஹாசன் அவர்கள் இந்தியன்-2 படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் சில ஆண்டு காலமாக நீடித்துக் கொண்டே போவதால் கமலஹாசன் அவர்கள் “தலைவன் இருக்கின்றான்” என்ற தன்னுடைய அடுத்த படத்தில் கவனம் செலுத்த தொடங்கி விட்டார். இந்த படத்தை இவர் தன்னுடைய சொந்த நிறுவனத்தில் தயாரிக்கிறார். லாக்டோன் நாட்களாக இருந்தாலும் இவர் இந்த சமயத்திலேயே படத்தின் நடிகர்களின் ஒப்பந்த வேலைகளை தொடங்கிவிட்டார். தலைவன் இருக்கிறான் படத்தில் இசையமைப்பாளராக ஏ ஆர் ரகுமான் ஐ கமிட் செய்திருக்கிறார்.

-விளம்பரம்-

பிறகு நடிகர் வடிவேலு, விஜய் சேதுபதியும் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார்கள். சமீபத்தில் கூட யூடியூபில் நடந்த நிகழ்ச்சி உரையாடலில் தலைவன் இருக்கிறான் படம் குறித்து பேசினார்கள். மேலும், 1992 ஆம் ஆண்டு வெளிவந்த தேவர் மகன் படத்தின் இரண்டாம் பாகம் தான் தலைவன் இருக்கிறான் படம் என்று பேசப்படுகிறது. தேவர் மகன் படத்தில் ஜாதிகள் மையமாக இருந்தது. ஆனால், தலைவன் இருக்கின்றான் படத்தில் அரசியலை மையமாக வைத்து இருக்கிறார்கள். தேவர் மகன் படத்தில் இசக்கி கதாபாத்திரத்தில் நடித்த வடிவேலு மீண்டும் அதே கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

- Advertisement -
Sivaji Ganesan, Kamal Hassan

பங்காளி நாசரின் மகனாக விஜய் சேதுபதி நடிக்கிறார். தன் அப்பாவை கொன்று ஜெயிலுக்கு சென்று திரும்பி வரும் கமல்ஹாசனுடன் அரசியல் வில்லனாக விஜய் சேதுபதி மோதல் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் மொத்தம் மூன்று ஹீரோயின்கள். கமல்ஹாசனின் மனைவியாக ரேவதியே நடிப்பதாக பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. இவரை தவிர பூஜா குமாரும், ஆண்ட்ரியாவும் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. தேவர்மகன் படத்தின் ஒரு சில காட்சிகள் எல்லாம் பொள்ளாச்சி வீட்டில் தான் எடுக்கப்பட்டது.

அதே போல் தலைவர் இருக்கிறான் படத்தின் சூட்டிங்கும் பொள்ளாச்சியில் தொடங்கியிருக்கிறார். இந்த படத்தை 60 நாட்களுக்குள் எடுத்து முடிப்பதாக திட்டமிட்டுள்ளது. கொரோனா பிரச்சனை காரணமாக சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களை தவிர்த்து பிற மாவட்டங்களில் படத்தின் வேலைகளை நடத்துவதற்கு அரசிடம் அனுமதி கேட்டுள்ளார். தமிழக அரசின் அனுமதி கிடைத்தவுடன் ஷூட்டிங்கை பொள்ளாச்சியில் தொடங்கி செப்டம்பர் மாதத்துக்குள் முடித்து விடுவார்கள் என்று கூறப்படுகிறது.

-விளம்பரம்-
Vijay Sethupathi and Kamal Haasan joining hands for most expected ...

அதுமட்டுமில்லாமல் இந்த படத்தை 2021 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகை அன்று வெளி விடுவதாக கூறப்படுகிறது. இதற்கு அடுத்ததாக கமலஹாசன் அவர்களின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் ஐம்பதாவது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கினார். அதுவும் லோகேஷ் கனகராஜ் அவர்கள் ரஜினிகாந்தை வைத்து இயக்குவதாக கூறப்படுகிறது. இந்த படத்திற்கான ஷூட்டிங் வேலையும் விரைவில் தொடங்கப்படும் என்று கூறப்படுகிறது.

Advertisement