‘நீங்க பேசாதீங்க’ – பிறந்தநாள் கொண்டாட்ட சந்திப்பில் கடுப்பான கமல். வைரலாகும் வீடியோ இதோ.

0
331
kamal
- Advertisement -

மேடையில் பேசவிடாமல் கூச்சலிட்ட பத்திரிக்கையாளர்களின் மீது கமல் டென்ஷனாகி கோபப்பட்டு இருக்கும் வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. கோலிவுட்டில் தன்னுடைய நடிப்பின் மூலம் புகழின் உச்சத்திற்கு சென்றவர் உலக நாயகன் கமலஹாசன். இவர் சினிமா உலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது உலக நாயகனாக கலக்கி கொண்டு இருக்கிறார். இவர் சினிமா திரை உலகில் தன்னுடைய கடுமையான உழைப்பாலும், முயற்சியாலும் இந்த அளவுக்கு விஸ்வரூபம் எடுத்து இருக்கிறார் என்றே சொல்லலாம்.

-விளம்பரம்-
kamal

மேலும், இவர் இந்தியத் திரைப்பட நடிகர், திரைக்கதையாசிரியர், பாடலாசிரியர், பின்னனிப் பாடகர், நடன அமைப்பாளர், இயக்குனர், தயாரிப்பாளர், எழுத்தாளர், அரசியல்வாதி என பல முகங்களை கொண்டவர்.
இந்தியாவில் மட்டும் இல்லாமல் உலகளவில் இவருக்கு ரசிகர் பட்டாளம் இருக்கிறது. இறுதியாக கமல் நடிப்பில் வெளியாகி இருந்த ‘விக்ரம்’ படம் மாபெரும் வெற்றியடைந்தது. இந்த படத்தை லோகேஷ் இயக்கி இருந்தார். இந்த படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில், காளிதாஸ் ஜெயராம், ஷிவானி, மைனா நந்தினி உட்பட பல நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள்.

- Advertisement -

விக்ரம் படம்:

இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்து இருக்கிறார். மேலும், இந்த படம் நான்கு ஆண்டுகளுக்கு பின் வெளிவந்து இருந்ததால் ரசிகர்கள் திரையரங்கில் கொண்டாடி இருந்தார்கள். விக்ரம் திரைப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் மாஸாக இருந்தது. இந்த படம் வெளியாகி 450 கோடிக்கு மேல் வசூல் சாதனை படைத்ததாக அறிவித்திருந்தார்கள். இதனை அடுத்து கமல் அவர்கள் சங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார்.

-விளம்பரம்-

இந்தியன் 2 படம்:

25 வருடங்களுக்கு பிறகு மீண்டும் ஷங்கர்- கமலஹாசன் கூட்டணியில் “இந்தியன் 2” படம் உருவாகி வருகிறது. இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த படத்தில் கமல்ஹாசனுடன், காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், ப்ரியா பவானி சங்கர் உள்ளிட்ட பல நடிகர்கள் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். பல பிரச்சனைகளுக்கு பிறகு இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு செப்டம்பர் மாதம் மீண்டும் தொடங்கியது. தற்போது விறுவிறுப்பாக ஷூட்டிங் சென்று கொண்டு இருக்கிறது.

கமல் பிறந்தநாள்:

இதை தொடர்ந்து அடுத்தடுத்த திரைப்படங்களில் கமல் நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. இந்நிலையில் கமல் தன்னுடைய 68 வது பிறந்த நாளை கொண்டாடி இருந்தார். ரசிகர்கள் முதல் பிரபலங்கள் வரை என பலருமே கமலுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறியிருந்தார்கள். மேலும், ரசிகர்கள் கமலின் பிறந்த நாளை ஒட்டி பல நற்பணிகளை செய்து இருக்கிறார்கள். அதுமட்டும் இல்லாமல் மக்கள் நீதி மையத்தின் மூலம் பள்ளிகளுக்கு கழிப்பறை கட்டுவது, ரத்ததானம் செய்வது போன்ற பல நற்பணிகளை செய்து இருக்கிறார்கள்.

டென்ஷன் ஆன கமல்:

கமல்ஹாசனின் 68-ஆவது பிறந்த நாளையொட்டி சென்னை ஆழ்வாா்பேட்டையில் உள்ள மநீம அலுவலகம் விழாக்கோலம் பூண்டிருந்தது. கட்சித் தொண்டா்கள் பெருமளவில் திரண்டிருந்தனா். அவா்களை கமல்ஹாசன் சந்தித்து வாழ்த்துப் பெற்றாா்கள். இந்த நிலையில் இது குறித்து கமலஹாசன் அவர்கள் பத்திரிகையாளர்களை சந்தித்து பேட்டி ஒன்று அளித்து இருந்தார். அதில் அவர், என்னுடைய பிறந்தநாளுக்கு ரசிகர்கள், மையத்தின் மூலம் பல பேர் மக்களுக்கு நற்பணிகளை செய்து இருக்கிறார்கள். அவர்களுக்கு இந்த தருணத்தில் நன்றி சொல்கிறேன் என்று கமல் பேசியிருந்தார். ஆனால், கமலை பேசவிடாமல் பத்திரிகையாளர்கள் கூச்சலிட்டு கேள்வி எழுப்பியிருந்தார்கள். அதற்கு டென்ஷனான கமல் இது பிரஸ்மீட் கிடையாது. தயவுசெய்து யாரும் பேசாதீர்கள். அமைதியாக இருங்கள். நான் சொல்வதை கேளுங்கள் என்று கோபப்பட்டு பேசி இருக்கிறார். தற்போது இந்த வீடியோ தான் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Advertisement