இந்தியன் படத்துல ரஹ்மானின் இந்த எனக்கு பிடிக்கவே இல்ல – அவரிடமே சொன்ன கமல். (இது செம பாட்டாச்சே)

0
567
kamal
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் உச்சத்தில் இருக்கும் நடிகர்களில் கமல்ஹாசனும் ஒருவர். இவர் இந்தியாவில் மட்டுமில்லாமல் உலக அளவில் புகழ்பெற்ற கலைஞர். தற்போது கமலஹாசன் அவர்கள் இந்தியன்-2, விக்ரம் படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் சில ஆண்டு காலமாக நீடித்துக் கொண்டே போவதால் கமலஹாசன் அவர்கள் “தலைவன் இருக்கின்றான்” என்ற தன்னுடைய அடுத்த படத்தில் கவனம் செலுத்த தொடங்கி விட்டார். இந்த படத்தை இவர் தன்னுடைய சொந்த நிறுவனத்தில் தயாரிக்கிறார். லாக்டோன் நாட்களாக இருந்தாலும் இவர் இந்த சமயத்திலேயே படத்தின் நடிகர்களின் ஒப்பந்த வேலைகளை தொடங்கிவிட்டார். தலைவன் இருக்கிறான் படத்தில் இசையமைப்பாளராக ஏ ஆர் ரகுமானை கமிட் செய்திருக்கிறார்.

-விளம்பரம்-

மேலும், 1992 ஆம் ஆண்டு வெளிவந்த தேவர் மகன் படத்தின் இரண்டாம் பாகம் தான் தலைவன் இருக்கின்றான் படம் என்று பேசப்படுகிறது. தேவர் மகன் படத்தில் ஜாதிகள் மையமாக இருந்தது. ஆனால், தலைவன் இருக்கின்றான் படத்தில் அரசியலை மையமாக வைத்து இருக்கிறார்கள். தேவர் மகன் படத்தில் இசக்கி கதாபாத்திரத்தில் நடித்த வடிவேலு மீண்டும் அதே கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்றும் கூறப்படுகிறது. பங்காளி நாசரின் மகனாக விஜய் சேதுபதி நடிக்கிறார்.

- Advertisement -

தலைவர் இருக்கிறான் பற்றிய தகவல்:

தன் அப்பாவை கொன்று ஜெயிலுக்கு சென்று திரும்பி வரும் கமல்ஹாசனுடன் அரசியல் வில்லனாக விஜய் சேதுபதி மோதல் அரசியல் கூறப்படுகிறது. இந்த படத்தில் மொத்தம் மூன்று ஹீரோயின்கள். கமல்ஹாசனின் மனைவியாக ரேவதியே நடிப்பதாக பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. இவரை தவிர பூஜா குமாரும், ஆண்ட்ரியாவும் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. தேவர்மகன் படத்தின் ஒரு சில காட்சிகள் எல்லாம் பொள்ளாச்சி வீட்டில் தான் எடுக்கப்பட்டது.

தலைவர் இருக்கிறான் ஷூட்டிங் தள்ளிப்போக காரணம்:

அதே போல் தலைவர் இருக்கிறான் படத்தின் சூட்டிங்கும் பொள்ளாச்சியில் இருக்கிறது. இந்த படத்தை 60 நாட்களுக்குள் எடுத்து முடிப்பதாக திட்டமிட்டுள்ளது. ஆனால், கொரோனா பிரச்சனை காரணமாக தள்ளி கொண்டு போனது. தற்போது இந்த படத்தின் வேலைகள் தொடங்கி உள்ளது. இந்த நிலையில் தலைவன் இருக்கிறான் படத்தின் முன்னோட்டமாக சமீபத்தில் ஏ ஆர் ரஹ்மான் மற்றும் கமல் நேரலையில் உரையாடினார்கள்.

-விளம்பரம்-

ஏ.ஆர் ரகுமான் குறித்து கமல் கூறியது:

இந்த நேரலையின் போது நடிகர் கமலஹாசனும், ஏ ஆர் ரகுமான் எண்ணற்ற பிளாஷ்பேக் குறித்து பேசி இருந்தார்கள். அப்போது கமலிடம் ஏ ஆர் ரகுமான் இசையில் உங்களுக்கு பிடித்த பாடல் எது என்று கேட்கப்பட்டது. அதற்கு கமல் கூறியது, ரகுமான் ஒவ்வொரு பாடலையும் வித்தியாசமாக கொடுக்கக்கூடியவர். ஒரு பாடலில் இடம்பெற்ற இசை மீண்டும் ரிப்பீட் ஆகாது. இந்தியன் படத்தில் இடம்பெற்ற கப்பலேறிப் போயாச்சு பாடல் முதலில் கேட்கும் போது எனக்கு பிடிக்கவில்லை.

ஏ.ஆர் ரகுமான் பாடலை கமலுக்கு பிடிக்காத காரணம்:

இதனை நான் இயக்குனரிடம் சொன்னேன். ஆரம்பத்தில் அந்த பாடலை போட்டு காமிக்கும் போது ஓகே என்று அரை மனதுடன் தான் சொன்னேன். ஆனால், அந்த பாடல் வேற லெவல் இருந்தது. அதற்குப் பிறகுதான் நாம் சரியாக அவருடைய இசையில் ஆர்வம் காட்ட வில்லையோ என்று உணர்ந்தேன். பின் எனக்கு பிடித்த இசையமைப்பாளர்களில் ஏ ஆர் ரஹ்மானும் ஒருவர் ஆனார். இந்தியன் படத்தின் பாடலை மிஞ்சும் அளவுக்கு தலைவன் இருக்கிறான் பாடல் உருவாகி இருக்கிறது. பின் இருவரும் மீண்டும் இணைந்து ஆல்பம் ஒன்றை வெளியிடுவோம் என்று கூறியுள்ளார் கமல்.

Advertisement