ஒரே குடும்பத்துக்கு 7 தேசிய விருதுகள் – கமல் குடும்பத்தில் இத்தனை தேசிய விருது பெற்றவர்களா?

0
276
- Advertisement -

கமலஹாசனின் ஒரே குடும்பத்தில் ஏழு தேசிய விருதுகள் வாங்கி இருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் கமலஹாசன். தன்னுடைய நடிப்பின் மூலம் புகழின் உச்சத்திற்கு சென்றவர் கமலஹாசன். இவர் தமிழ் சினிமா உலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது உலக நாயகனாக அவதாரம் எடுத்து இருக்கிறார்.

-விளம்பரம்-

மேலும், கடந்த ஆண்டு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளியாகியிருந்த படம் விக்ரம். இந்த படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாஸில் உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்றது மட்டும் இல்லாமல் வசூல் ரீதியாகவும் சாதனை படைத்திருந்தது. இதனை அடுத்து கமலின் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் இந்தியன் 2. இந்த படத்தை பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்குகிறார்.

- Advertisement -

கமல்ஹாசன் திரைப்பயணம்:

ஏற்கனவே கமல்ஹாசன் நடிப்பில் 1996 ஆம் ஆண்டு வெளிவந்து இருந்த படம் “இந்தியன்” என்பது குறிப்பிடத்தக்கது. பின் 25 வருடங்களுக்கு பிறகு மீண்டும் ஷங்கர்- கமலஹாசன் கூட்டணியில் “இந்தியன் 2” படம் உருவாகி வந்தது. இந்த திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது. இது ஒரு பக்கம் இருக்க, இவருடைய நடிப்பு திறமைக்காக பல விருதுகளை வாங்கி இருக்கிறார். அந்த வகையில் இவர் 1960 ஆம் ஆண்டு களத்தூர் கண்ணம்மா என்ற படத்தில் நடித்ததற்காக கமலஹாசன் அவர்கள் சிறந்த குழந்தை நட்சத்திரம் என்ற பிரிவில் தேசிய விருது வாங்கினார்.

கமல் குடும்பம் வாங்கிய விருது:

அதனை அடுத்து 1982 ஆம் ஆண்டு மூன்றாம் பிறை என்ற படத்தில் சிறந்த நடிகர் என்ற பிரிவில் தேசிய விருது வாங்கி இருந்தார். 1988 ஆம் ஆண்டு நாயகன் என்ற படத்தில் சிறந்த நடிகர் என்ற பிரிவில் தேசிய விருது வாங்கியிருந்தார் .1992 ஆம் ஆண்டு தேவர் மகன் படத்தில் சிறந்த படம் என்ற பெயரில் தயாரிப்பாளர் விருது வாங்கி இருந்தார் .இந்தியன் என்ற படத்தில் சிறந்த நடிகர் என்ற பிரிவில் கமலஹாசன் தேசிய விருதை வாங்கி இருந்தார் .

-விளம்பரம்-

மேலும், 1996 ஆம் ஆண்டு இவரை அடுத்து 1986 ஆம் ஆண்டு சிந்து பைரவி என்ற படத்தில் சிறந்த நடிகை என்ற பிரிவில் சுகாசினி தேசிய விருது வாங்கி இருந்தார். 1987 ஆம் ஆண்டு தரபன கதே என்ற கன்னட படத்திற்காக சிறந்த நடிகர் என்ற பிரிவில் கமலஹாசனின் அண்ணன் சாருஹாசன் தேசிய விருது வாங்கி இருந்தார். இப்படி ஒரே குடும்பத்தில் ஏழு தேசிய விருதுகள் வாங்கப்பட்டிருக்கிறது. தற்போது இந்த தகவல் தான் இணையத்தில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது.

கமல் நடிக்கும் படங்கள்:

தற்போது கமல் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன் நடிப்பில் உருவாகி வரும் படம் ப்ராஜெக்ட் கே படத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் நீண்ட இடைவெளிக்கு பிறகு கமலஹாசன் அவர்கள் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அது மட்டும் இல்லாமல் பல வருடங்களுக்குப் பிறகு இந்திய சினிமாவில் ஒரு மிகப்பெரிய திருப்புமுனையாக கமலுக்கு இந்த படம் அமையும் என்று கூறப்படுகிறது. மேலும், இந்த படத்தில் கமல் 21 கெட்டப் போட இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இதன் பின் இயக்குனர் ஹச் வினோத்தின் இயக்கத்தில் கமல் நடிக்க இருக்கிறார். இந்த படத்திற்கு கே எச் 223 என்று பெயரிடப்பட்டிருக்கிறது. இதனை அடுத்து மணிரத்தினத்துடன் இணைந்து கமலஹாசன் பணியாற்ற இருக்கிறார்.

Advertisement