பிரபல பாடலில் பைக்கில் இருந்து மல்லாக்க விழுந்துள்ள கமல் – ஆனா, இத கட் பண்ணாம அப்படியே போட்டு இருக்காங்களே.

0
797
- Advertisement -

உலகநாயகன் கமலஹாசன் பைக்கில் இருந்து கீழே விழுந்த காட்சி வீடியோ ஒன்று தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இது குறித்து ரசிகர்கள் பலரும் என்ன படம்? எப்படி என்று கேள்வி கேட்டு வருகிறார்கள். பொதுவாகவே சினிமா துறையில் படங்களில் பல மிஸ்டேக்குகள் படக்குழுவினரை அறிந்தும், அறியாமலும் வரும். இதுகுறித்து சோசியல் மீடியாவில் பலரும் ட்ரெண்டிங்க் ஆக்கி விடுவார்கள். அதில் சின்ன நடிகர்கள் முதல் பெரிய நடிகர்கள் வரை என பலருடைய படங்களில் மிஸ்டேக்குகள் வருவது வழக்கமான ஒன்று.

-விளம்பரம்-

அந்த வகையில் கமல் நடித்த படம் ஒன்றில் கூட மிஸ்டேக் நடந்து இருக்கிறது. அந்த படத்தில் ஒரு காட்சியில் வரும் மிஸ்டேக் அப்பட்டமாக தெரியும். தமிழ் சினிமா உலகில் என்றென்றும் உலக நாயகனாக கலக்கிக் கொண்டிருப்பவர் கமலஹாசன். இவர் நடிகர் மட்டுமில்லாமல் தயாரிப்பாளர், தொகுப்பாளர், அரசியல்வாதி என பன்முகம் கொண்டு இருக்கிறார். இவர் விஜய் டிவியில் வெற்றிகரமாக நான்கு ஆண்டுகளை கடந்து ஐந்தாவது ஆண்டாக ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.

- Advertisement -

கமல்ஹாசன் பிக் பாஸ் நிகழ்ச்சி:

அதோடு பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி இறுதி கட்டத்தை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது. அதோடு இவரை பார்ப்பதற்கு என்றே பிக்பாஸ் நிகழ்ச்சி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது என்று சொல்லலாம். இப்படி ஒரு நிலையில் கமலஹாசன் உடைய பழைய படத்தின் பாடல் வீடியோ ஒன்று தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி உள்ளது. அந்த வீடியோவில் கமல் தவறிக் கீழே விழுந்த போது எடுக்கப்பட்ட காட்சி இடம் பெற்று இருக்கிறது.

கமல் நடித்த ஹந்தி படம்:

அது என்னவென்றால், 1981-ஆம் ஆண்டு ஹிந்தியில் வெளியான Ek Duuje Ke Liye என்ற படம். இந்த படத்தை கே பாலச்சந்தர் இயக்கியிருந்தார். இந்த படத்தில் கமலஹாசனுடன், மாதவி உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். இந்த படத்தில் ஒரு பாடலின் போது கமலஹாசன் அவர்கள் பைக்கின் மீது நடனம் ஆடுவார். அப்போது அவரை அறியாமல் கீழே விழுகிறார். அந்த காட்சியை அப்படியே படக்குழுவினர் பாடலில் வெளியிட்டிருக்கிறார்கள்.

-விளம்பரம்-

கமல் தவறி கீழே விழுந்த வீடியோ:

தற்போது அந்த வீடியோ தான் சோசியல் மீடியாவில் வெளியாகி உள்ளது. இதுகுறித்து கூட சமீபத்தில் பிரபல இயக்குனர் வசந்த் பேட்டியில் கூறியிருக்கிறார். அதேபோல் இயக்குனர் வசந்த் உடைய நேருக்கு நேர் படத்தில் விஜய் – சூர்யா இருவரும் பைக்கில் இருந்து கீழே விழும் காட்சியும் இதேமாதிரி படத்தில் இடம்பெற்றிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது கமலஹாசன் அவர்கள் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் என்ற படத்தில் நடித்து இருக்கிறார்.

கமல் நடித்து இருக்கும் படங்கள்:

இந்த படத்தின் ரிலீஸுக்காக ரசிகர்கள் அனைவரும் காத்துக் கொண்டிருக்கின்றனர். அதேபோல் சில ஆண்டுகளாகவே ஷங்கர் இயக்கத்தில் தாமதமாகி வரும் இந்தியன் 2 படமும் தயாராகி வருகிறது. இதனைத்தொடர்ந்து சபாஷ் நாயுடு, தேவர் மகன் 2 போன்ற பல படங்களில் கமலஹாசன் நடித்திருக்கிறார். இந்த படங்கள் எல்லாம் இந்த ஆண்டு இறுதிக்குள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement