அறுவை சிகிச்சை முடிந்து கமலின் நிலை – மகள்கள் வெளியிட்ட அறிக்கை.

0
2153
kamal
- Advertisement -

கமலுக்கு நடைபெற்றுள்ள அறுவை சிகிச்சை குறித்து அவரது மகள்கள் அறிக்கை வெளியிட்டுள்ளனர். நடிகரும், மக்கள் நீதி மையத்தின் தலைவருமான கமல் தனக்கு காலில் அறுவை சிகிச்சை நடைபெற இருப்பதாகவும் இதனால் சிறிது நாள் அணைத்து வேளைகளில் இருந்து இடைவேளை எடுத்துக்கொள்ளப்போவதாக பிக் பாஸ் 4 நிகழ்ச்சி இறுதி போட்டியின் போது அறிவித்து இருந்தார் . மேலும், இதுகுறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்ட கமல், பிக் பாஸ் நிகழ்ச்சி முடிவடைந்த மறுநாளே கமல்ஹாசன் காலில் அறுவை சிகிச்சை மேற்கொள்ள உள்ளதாக அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில்,தமிழகத்தை தலை நிமிரச் செய்த ‘சீரமைப்போம் தமிழகத்தை’ எனும் முதல் கட்ட தேர்தல் பிரசாரத்தைப் பூர்த்தி செய்திருக்கிறேன்.

-விளம்பரம்-

ஐந்து பாகங்களாக ஐந்தாயிரம் கிலோ மீட்டர்கள் பயணித்து தமிழ் மக்களைச் சந்தித்திருக்கிறேன். மாற்றத்துக்கான மக்கள் எழுச்சியைக் கண்ணாரக் கண்டு திரும்பியிருக்கிறேன். அதுபோலவே கொரோனா பொது முடக்கத்தின்போது தொடங்கிய ‘பிக்பாஸ் – சீசன் 4’ தொலைக்காட்சி நிகழ்ச்சியையும் வெற்றிகரமாக முடித்திருக்கிறேன். இதுவும் மக்களுடனான பயணம்தான். நான்கரை கோடி தமிழர்களோடு வாராவாரம் உரையாடியதும் உறவாடியதும் மகிழ்ச்சியூட்டுகிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு நடந்த விபத்தால் காலில் ஏற்பட்ட எலும்பு முறிவு காரணமாக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாகவும், அதற்காக மீண்டும் அறுவை சிகிச்சை செய்ய வேண்டி உள்ளடஹல் சிறிது காலம் ஓய்வில் இருக்க வேண்டியுள்ளதாகவும் தெரிவித்தார்.

- Advertisement -

அதனால், மக்களை நேரில் சந்திக்க இயலாது என்றாலும் அந்த மனக்குறையைத் தொழில்நுட்பத்தின் வழியாக போக்கிக்கொள்ளலாம். இந்த மருத்துவ விடுப்பில் உங்களோசு இணையம் வழியாகவும் வீடியோக்கள் வழியாகவும் பேசுவேன். மாற்றத்துக்கான இடையூறின்றி நிகழும். என் மண்ணுக்கும் மொழிக்கும் மக்களுக்கும் சிறு துன்பம் என்றாலும் என் குரல் எங்கும் எப்போதும் எதிரொலித்தபடிதான் இருக்கும் இப்போதும் இது தொடரும் என்றும் தெரிவித்து இருந்தார். இந்நிலையில் கமல்ஹாசனுக்கு காலில் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்து முடிந்ததாக அவரது மகள்கள் ஸ்ருதி மற்றும் அக்‌ஷரா இருவரும் தெரிவித்துள்ளனர். 

அதில், இன்று காலை ஸ்ரீராமச்சந்திரா மருத்துவமனையில் எங்கள் அப்பாவுக்கு காலில் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்து முடிந்தது. அப்பா நலமுடன் உற்சாகமாக இருக்கிறார். அப்பாவை மருத்துவர்களும், மருத்துவப் பணியாளர்களும், மருத்துவமனை நிர்வாகமும் நல்லமுறையில் பார்த்துக் கொள்கிறார்கள். 4,5 நாட்களுக்கு பிறகு அப்பா வீடு திரும்புவார். சில நாட்கள் ஓய்வுக்குப் பின் மீண்டும் மக்களை சந்திப்பார். மகிழ்விப்பார். அனைவரது அன்புக்கும், பிரார்த்தனைகளுக்கும் எங்களது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம் என்று கூறியுள்ளனர்.

-விளம்பரம்-
Advertisement