‘இந்தியன் 2’ பத்திரிக்கையாளர் சந்திப்பில் நடிகர் விவேக் குறித்து கமல் பேசியது தான் இப்போது வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் கமலஹாசன். தன்னுடைய நடிப்பின் மூலம் புகழின் உச்சத்திற்கு சென்றவர் கமலஹாசன். கடைசியாக இவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகியிருந்த ‘விக்ரம்’ படத்தில் நடித்து இருந்தார். இந்த படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாஸில் உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள்.
இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்றது மட்டும் இல்லாமல் வசூல் ரீதியாகவும் சாதனை படைத்திருந்தது. இதனை அடுத்து கமலின் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் இந்தியன் 2. இந்த படத்தை பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கி இருக்கிறார். ஏற்கனவே கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் 1996 ஆம் ஆண்டு வெளிவந்து இருந்த “இந்தியன்” படம் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்து இருந்தது.
இந்தியன் 2:
இதனால் இந்த படத்தின் இரண்டாம் பாகம் எடுக்க முடிவு செய்து இருந்தார்கள் படக்குழு. 25 வருடங்களுக்கு பிறகு மீண்டும் ஷங்கர்- கமலஹாசன் கூட்டணியில் “இந்தியன் 2” படம் உருவாகி வந்தது. இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரித்து இருக்கிறது. இந்த படத்தில் சித்தார்த், காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், ப்ரியா பவானி சங்கர், பாபி சிம்ஹா, சமுத்திரக்கனி உட்பட பல நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து இருக்கிறார். வெற்றிகரமாக படப்பிடிப்பும் முடிந்துஉள்ளது.
படத்தின் ரீலிஸ் தேதி:
மேலும், இந்தியன் 2 திரைப்படத்தில் மறைந்த நடிகர் விவேக் முக்கிய கதாபாத்திரத்தில் ஏற்று நடித்திருந்தார். தற்போது விவேக் நடித்த காட்சிகளை நீக்கிவிட்டு ஜோக்கர் திரைப்படத்தின் நாயகன் குரு சோமசுந்தரம் நடித்து இருக்கிறார். சமீபத்தில் தான் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெற்று இருந்தது. சில தினங்களுக்கு முன் இந்த படத்தினுடைய பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. அனைவர் மத்தியிலும் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இந்தியன் 2 படம் ஜூலை 12ம் தேதி வெளியாக இருக்கிறது.
விவேக் குறித்து நடிகர் கமல்:
‘இந்தியன் 2 ட்ரைலர்’ லாஞ்சின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடந்தது. அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய கமல்ஹாசன், ‘நன்றாக நடிக்கும் நடிகர்கள், நண்பர்கள் சிலர் இங்கு இல்லை’. அவங்க மூணு பேர் இருந்திக்க வேண்டிய மேடை இது. கடந்த தெருவில் தான் விவேக் தொடர்பான காட்சிகளை சங்கர் எடுத்துக் கொண்டிருந்தார். ஏதோ இப்போதுதான் நடந்தது போல இருக்கிறது. காலம் எவ்வளவு வேகமாக ஓடுகிறது என்பதற்கு இந்தியன் 1, 2 தான் உதாரணம் என்று உருக்கத்தோடு பேசியுள்ளார்.
ட்ரைலர் வீடியோ:
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நேற்று இந்த படத்தின் ட்ரைலர் வெளியாகி இருந்தது. படத்தின் ட்ரைலரில் மறைந்த நடிகர்கள் நெடுமுடி வேணு, மனோ பாலா உள்ளிட்டோர் இடம்பெற்று இருக்கின்றனர். ஆனால், விவேக்கின் காட்சிகள் ட்ரைலரில் இடம்பெறவிலை. மேலும், பல ஆண்டுகள் கழித்து இந்த படத்தில் ஷர்ட் லெஸ் சண்டை கட்சியில் நடித்துள்ளார் கமல். இந்தியன் முதல் பாகம் அளவிற்கு சேனாதிபதி மக்கள் மனதில் இடம்பிடிப்பாரா என்பதை பொறுத்திருந்து பாப்போம்