சினேகன்-கன்னிகாவின் மகள்களுக்கு கமலஹாசன் பெயர் சூட்டியிருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான பாடல் ஆசிரியராக திகழ்பவர் சினேகன். இவர் எழுதிய பல பாடல்கள் மக்கள் மத்தியில் பிரபலமாகி இருக்கிறது. இவர் 2500க்கும் அதிகமான பாடல்கள் எழுதி இருக்கிறார். ஆனால், இது பலருக்கும் தெரியாத ஒன்று. அதிலும் தமிழ் சினிமாவில் சூப்பர் ஹிட் கொடுத்திருக்கும் பாடல்களில் பல இவர் எழுதியது தான். இருந்தாலும் இவரை பிரபலமாக்கியது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி இருந்த பிக் பாஸ் நிகழ்ச்சி தான்.
பிக் பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் போட்டியாளராக சினேகன் கலந்து இருந்தார். இந்த நிகழ்ச்சி மூலம் இவர் மக்கள் மத்தியில் இன்னும் பிரபலமானார் என்று சொல்லலாம். இந்த சீஸினில் ஆரவ் வெற்றி பெற்ற நிலையில் சினேகன் இரண்டாம் இடத்தை பிடித்து இருந்தார். இதனிடையே சினேகன் அவர்கள் கன்னிகா என்ற நடிகையை திருமணம் செய்து கொண்டார். அதோடு சுமார் 10 ஆண்டுகளாக சினேகன் – கன்னிகா இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்டார்கள்.
சினேகன் – கன்னிகா திருமணம்:
இவர்களின் திருமணம் பெற்றோர்களால் நிச்சயக்கப்பட்டு கமல் தலைமையில் படு விமர்சயாக நடந்தது. கன்னிகாவும் ஒரு நடிகை தான். இவர் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி இருந்த ‘கல்யாண வீடு’ என்ற தொடரில் கதாநாயகியாக நடித்து இருந்தார். பின் இவர் தேவராட்டம், அடுத்த சாட்டை போன்ற படத்தில் நடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதோடு இவர்கள் இருவருக்கும் 10 வயது வித்தியாசம் இருந்தாலும் ஒருவரை ஒருவர் புரிந்து ஆழமாகக் காதலித்து தங்களுடைய வாழ்க்கையை சந்தோஷமாக வாழ்ந்தும் வருகின்றனர்.
கன்னிகா கர்ப்பம்:
அதோடு இவர்களுக்கு திருமணமாகி வருடங்கள் சில கடந்தாலும், இருவருமே குழந்தை பெற்றுக் கொள்ளவில்லை. இது குறித்த பலருமே ஏன்? எதற்கு? என்று கேள்வி எழுப்பி இருந்தார்கள். இருந்தாலுமே, இருவரும் மௌனம் காத்து வந்தார்கள். மேலும், சினேகன் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின் படங்களில் பிசியாக இருக்கிறார். அதேபோல் கன்னிகா யூடியூப் சேனல் ஒன்று நடத்தி வருகிறார். கடந்த ஆண்டு கூட இவர் புதிய தொழிலை ஆரம்பித்திருப்பதாக அறிவித்து இருந்தார்கள். இதை அடுத்து கடந்த ஆண்டு கன்னிகா கர்ப்பமாக இருப்பதாக அறிவித்து இருந்தார்.
சினேகன்-கன்னிகா குழந்தைகள்:
அதன் பின் கன்னிகா வளைகாப்பு புகைப்படங்கள் எல்லாம் இணையத்தில் வைரலாகி இருந்தது.
கடந்த மாதம் இறுதியில் சினேகன்-கன்னிகாவுக்கு இரட்டை குழந்தை குழந்தை பிறந்தது. அதுவும் இரண்டு மகள்கள். இதற்கு பலருமே கன்னிகா- சினேகன் ஜோடிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார்கள். இது தொடர்பாக கூட சினேகன் பதிவு ஒன்று போட்டு இருந்தார். இப்படி இருக்கும் நிலையில் சினேகனின் மகள்களுக்கு கமலஹாசன் வைத்திருக்கும் பெயர் குறித்த தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
கமல் வைத்த பெயர்கள்:
கமலஹாசன் அவர்கள் சினேகனின் இரண்டு மகள்களுக்கும் தங்க வளையல்களை பரிசாக அளித்து ‘காதல், கவிதை’ என்று பெயர்களை வைத்திருக்கிறார். இதுகுறித்து சினேகன்- கன்னிகா கூறியிருப்பது, காதலர் தினத்தில் எங்கள் தங்க மகள்களுக்கு தங்க வளையல்களோடு ‘காதல் என்ற பெயரையும், கவிதை என்ற பெயரையும்’ சூட்டி வாழ்த்திய நம்மவர் எங்களின் அன்பு தலைவர் பத்மபூஷன் கமலஹாசன் அவர்களுக்கு எங்கள் அன்பின் நன்றிகள். நீங்களும் வாழ்த்துங்கள் காதல் கவிதையை என்று கூறி இருக்கிறார்கள்.