‘மக்கள் நல்ல படத்தை கொண்டாடுவார்கள்’ – அமரன் வெற்றிக்கு பிறகு கமல்ஹாசன் வெளியிட்ட அறிக்கை

0
134
- Advertisement -

‘அமரன்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு கமல்ஹாசன் வெளியிட்டு இருக்கும் அறிக்கை தான் இணையத்தில் வைரலாகி வருகிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில், சிவகார்த்திகேயன்- சாய் பல்லவி நடிப்பில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றிருக்கும் திரைப்படம் தான் அமரன். இந்த படத்தை கமல்ஹாசனின் ராஜ் கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்திருக்கிறது. தற்போது இப்படத்தின் வெற்றியை பாராட்டி கமல்ஹாசன் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

-விளம்பரம்-

அதில், ‘திரை இட்ட இடங்களில் எல்லாம் அமரன் படத்திற்கு மகத்தான வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த படத்தை அறிவித்தபோது, ‘சில வேலைகள் சந்தோஷத்தைத் தரும். சில வேலைகள் கௌரவத்தையும், பெருமையையும் தரும். அமரன் அனைவருக்குமே பெருமையை தேடித் தரும்’ என்று கூறியிருந்தேன். ஆயிரம் நாட்களுக்கு மேலான உழைப்பிற்குப் பிறகு அமரன் அடைந்திருக்கும் வெற்றி, ‘மக்கள் நல்ல படத்தைக் கொண்டாடுவார்கள்’ என்னும் நம்பிக்கையை உறுதி செய்து இருக்கிறது.

- Advertisement -

மேஜர் முகுந்த் வரதராஜன் குறித்து:

மேலும், மேஜர் முகுந்த் வரதராஜன் இந்த தேசத்திற்காக எதிரிகளுடன் தீரத்துடன் போரிட்டு வீரமரணம் எழுதியவர். அன்புத் தந்தையை இழந்த மகள், அருமைக் கணவனை இழந்த மனைவி, ஆசை மகனைப் பறிகொடுத்த பெற்றோர், உயிர் நட்பை பறிகொடுத்த நண்பர்கள் சிந்திய கண்ணீர் அளவீடற்றவை. மேஜர் முகுந்த் சிந்திய ரத்தத்திற்கும், அவரது அன்புக்குரியவர்கள் சிந்திய கண்ணீருக்குமான எங்களது எளிய காணிக்கை தான் அமரன். இது இந்திய நிலப்பரப்பைக் காக்கும் ஒவ்வொரு வீரர் மற்றும் ஒவ்வொரு இந்தியக் குடும்பத்தின் கதைதான்.

சிவகார்த்திகேயன் குறித்து:

ஒரு நிஜமான கதாபாத்திரத்துக்கு உயிரூட்டப் போகிறோம் என்பதை உணர்ந்து தன்னை முழுதாக அர்ப்பணித்து மேஜர் முகுந்து வரதராஜனாகவே வாழ்ந்திருக்கிறார் தம்பி சிவகார்த்திகேயன். இந்த படத்தின் மூலம் சிவகார்த்திகேயனின் திரைபயணம் ஒரு புதிய பரிமாணத்தை அடைந்துள்ளது. இந்த படத்திற்கான அவரது முழுமையான பங்களிப்பும் உழைப்பும் திரை ரசிகர்களால் நீண்ட காலத்துக்கு போற்றப்படும் என்பதில் ஐயமில்லை. வாழ்த்துக்கள் சிவகார்த்திகேயன். மேஜர் முகுந்த் வரதராஜனின் காதல் மனைவி இந்து வர்கீஸ் இந்த தேசமே போற்றிய இரும்பு பெண்மணி.

-விளம்பரம்-

அமரன் குறித்து:

அத்தனை இழப்புகளுக்கு மத்தியில் நான் ஒரு ராணுவ வீரரின் மனைவியிடம் பெருமிதத்தை தன் அடையாளமாக அணிந்து கொண்ட வீரமங்கை. அவரது பாத்திரமாகவே மாறி இருக்கிறார் சாய்பல்லவி. அவர் கதாநாயகியாக அமைந்தது இந்த படத்திற்கு பெரும் பலம். அதோடு இசையினால் இந்த படத்திற்கு உயிரூட்டு இருக்கிறார் தம்பி ஜி‌‌. வி. பிரகாஷ்‌. என்னுடைய இளவல் ராஜ்குமார் பெரியசாமியின் திறமையை நான் ஏற்கனவே நன்கு அறிந்தவன் விளைவுதான் அமரன். ஒரு மகத்தான மாவீரனின் சரிதையை திரைப்படமாக எடுப்பது எளிதான காரியம் அல்ல. இந்தப் படத்திற்காக ராஜ்குமார் பெரியசாமியின் தீவிரமும் உழைப்பும் அர்ப்பணிப்பும் போற்றுதலுக்குரியவை.

பெருமை கொள்கிறோம்:

அதோடு ஒரு நல்ல திரைப்படம் என்பது தனிக்கனவு அல்ல. இயக்குனர், கதாநாயகன், தயாரிப்பாளர் தொடங்கி மொத்த அணியுமே நன்மையில் நம்பிக்கை வைத்து உழைக்க வேண்டிய பொதுக்கனவு. படத்தின் மொத்த குழுவும் அமரன் எனும் பொது கனவை சாத்தியமாக்கி இருக்கிறார்கள். தன்னைத் தந்து மண்ணைக் காத்த தமிழ் வீரர்களுக்கான சிறந்த சமர்ப்பணமாகவும், நாமறியாத ராணுவ வாழ்க்கையை, அவர்களின் குடும்பத்தார் செய்யும் தியாகங்களையும் மக்கள் அறிந்து கொள்ளக்கூடிய படமாகவும் அமரன் அமைந்ததில் நாங்கள் பெருமை கொள்கிறோம் என்று குறிப்பிட்டுள்ளார்.

Advertisement