நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை, உலக நாடுகள் பங்கேற்கும் சர்வதேச விளையாட்டுத் திருவிழாவான ஒலிம்பிக் போட்டிகள் நேற்று (ஆகஸ்ட் 8) நிறைவடைந்தது. 53 பெண்கள் 68 ஆண்கள் என 121 பேர் கலந்து கொண்ட இந்த ஒலிம்பிக்கில் வரலாற்றில் முதல் முறையாக ஒரு தங்கம், இரு வெள்ளி, நான்கு வெண்கலம் என மொத்தம் 7 பதக்கங்களை வென்று புதிய சாதனை படைத்து இருக்கிறது இந்தியா. அதே போல ஒரே ஒலிம்பிக்கில் 7 பதக்கங்களை வெல்வது இந்தியாவுக்கு இதுவே முதல்முறை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த ஒலிம்பிக் போட்டியில் பல்வேறு பிரிவுகளில் கலந்து கொண்ட இந்திய போட்டியாளர்கள் பலர் பதக்க வாய்ப்பை பக்கத்தில் சென்று இழந்தனர். இதில், பளுதூக்குதல் வீராங்கனை மீராபாய் சானு வெள்ளிப்பதக்கம் வென்று பதக்க வேட்டையை தொடங்கி வைத்தார். அவரை தொடர்ந்து பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து வெண்கலப் பதக்கம் வென்றார்.இவரைத் தொடர்ந்து குத்துச்சண்டை போட்டியில் இளம் வீராங்கனை லாவ்லினா வெண்கலப் பதக்கம் வென்றார்.

இதையும் பாருங்க : சதுரங்கவேட்டை பட நடிகையை ஞாகபம் இருக்கா ? துபாய் மாப்பிள்ளை, கை குழந்தைன்னு எப்படி ஆகிட்டாங்க பாருங்க.

Advertisement

இதன் பின்னர் மல்யுத்தப் போட்டியில் ரவிக்குமார் தஹியா இறுதிப்போட்டி வரை சென்று வெள்ளிப்பதக்கமும், பஜ்ரங் புனியா வெண்கலப்பதக்கமும் வென்றனர். மேலும், இந்தியாவின் ஆடவர் ஹாக்கி அணி வெண்கலப்பதக்கம் வென்று இருந்தது. இந்த முறை இந்தியாவிற்கு ஒரு தங்கமாவது கிடைக்காதா என்று இந்தியர்கள் பலரும் எதிர்பார்த்துக்கொண்டு இருந்தனர்.

இந்த நிலையில் நிலையில் டோக்யோ ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்று இந்தியாவின் தங்க தாகத்தைத் தணித்து இருந்தார் ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா. அவருக்கு பல்வேறு அரசியல் தலைவர்களும் பிரபலங்களும் வாழ்த்துக்களை கூறி வந்தனர். அந்த வகையில் நடிகரும் மக்கள் நீதி மையம் கட்சி தலைவருமான கமல், நீரஜ் சோப்ராவிற்கு வாழ்த்து தெரிவித்து ட்வீட் ஒன்றை போட்டிருந்தார்.

Advertisement

டோக்கியோ ஒலிம்பிக் 2020இல் ஈட்டி எறிதல் போட்டியில் நீரஜ் சோப்ரா தங்கம் வென்று ஒவ்வொரு இந்தியரின் கனவையும் நினைவாக்கியுள்ளார். அவருக்கு வாழ்த்துகள் என்று அவர் பதிவிட்டு இருந்தார். ஆனால். நீரஜ் சோப்ராவின் புகைப்படத்தை பதிவிடுவதற்கு பதிலாக, மற்றொரு ஈட்டி எறிதல் போட்டியாளரான சிவ்பால் சிங்கின் புகைப்படத்தை போட்டுவிட்டார். பின்னர் அந்த பதிவை நீக்கிவிட்டார். இருப்பினும் கமலின் இந்த ட்வீடடின் ஸ்க்ரீன் ஷாட்டை பகிர்ந்து பலரும் ‘என்ன தலைவரே ஸ்டெடியா தான இருக்கீங்க’ கேலி செய்து வருகின்றனர்.

Advertisement

Advertisement