கடந்த சில காலமாக தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறார் நடிகர் கமல். இந்தியன் 2 படத்திற்கு பின்னர் சினிமாவில் நடிப்பதை நிறுத்திவிட்டு அரசியலில் முழு கவனம் செலுத்தப்போவதாகவும் சமீபத்தில் அறிவித்திருந்தார்.

சமீபத்தில் கஜா புயலால் பாதிக்கபட்ட பகுதிகளுக்கு சென்று மக்களை நேரில் சந்தித்து குறைகளை கேட்டறிந்து வருகிறார். இந்நிலையில் பாதிக்கப்பட்ட மக்களை கமல் சந்தித்த போது புயல் பாதித்த பகுதிகளை அரசு அதிகாரிகள் பார்வையிடவில்லை என பொதுமக்கள் புகார் தெரிவிப்பதாகக் குற்றம்சாட்டினார். 

Advertisement

இதனால் சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு போன் செய்தார் கமல், அதற்கு முன்னதாக, ம‌லைய‌க்காடு பகுதியில் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடுகள் கட்டித்தர ஊராட்சி அலுவலக உதவியாளர், வீடு ஒன்றுக்கு 50 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்பதாக கமலிடம் புகார் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, “முதல்வன்” சினிமா பாணியில் அதிகாரியை போனில் தொடர்பு கொண்ட கமல், இதுதொடர்பாக விசாரித்தார். அப்போது, தாங்கள் கவனித்துக் கொண்டு இருப்பதாகவும், பணம் கேட்காமல் பார்த்துக்கொள்ளுமாறும் அவர் அறிவுரை கூறினார்.

வீடியோ : தந்தி தொலைக்காட்சி 

Advertisement

Advertisement

Advertisement