பிஜேபிக்கு எதிராக தோல்வியடைந்து விட்டதாக அறிவித்த பின்னர் கமல் என்ன செய்தார் – கமலுடன் இருந்த முக்கிய நபர்.

0
1769
kamal
- Advertisement -

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி 234 தொகுதிகளுக்கான சட்டமன்ற தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற்றது. தமிழ்நாட்டின் இரண்டு முக்கிய தலைவர்கள் ஜெ. ஜெயலலிதா, மு. கருணாநிதி ஆகியோரின் இறப்பிற்குப் பின்னர் தமிழ்நாட்டில் நடைபெற்ற முதலாவது சட்டமன்றத் தேர்தல் இதுவாகும். அதே போல மக்கள் நீதி மய்யம், அம்மா மக்கள் கட்சி என்று பல்வேறு புதிய கட்சிகளும் தேர்தலில் களம் கண்டனர்.கொரோனா பிரச்சனை காரணமாக தேர்தல் வாக்கு எண்ணிக்கை தள்ளி செல்லும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், திட்டமிட்டபடி (மே 2) தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை படு மும்மரமாக நடைபெற்றுது.

-விளம்பரம்-

இந்த நிலையில் கோவை தெற்கில்திமுக கூட்டணியில் இணைந்த காங்கிரஸ் கட்சியின் சார்பில், மயூரா எஸ்.ஜெயக்குமாரும், அதிமுக இணைந்த பாஜக சார்பில் வானதி சீனிவாசனும், மக்கள் நீதி மய்யத்தின் சார்பில், அதன் தலைவர் கமல்ஹாசனும், நாம் தமிழர் கட்சியின் சார்பில் அப்துல் வகாப்பும், அமமுக சார்பில் முன்னாள் எம்எல்ஏ சேலஞ்சர் துரை என்ற ஆர்.துரைசாமி உள்ளிட்டோர் போட்டியிட்டனர்.

- Advertisement -

இந்த தொகுதியில் ஆரம்பத்தில் ஒரு சில சுற்றில் முன்னணியில் இருந்து வந்தார் கமல். இவருக்கும் வானதி சீனிவாசனுக்கு இழுபறி ஏற்பட்டு வந்த நிலையில் யார் வெற்றி பெறுவார் என்று பலரும் எதிர்பார்த்த நிலையில் வானதி ஸ்ரீநிவாசன்,1728 ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். கடும் போராட்டதிற்கிடையே கமல் தோல்வியுற்றார். கமல் தோல்வியடைந்த பின்னர் கனத்த இதயத்துடன் வாக்கு என்னும் இடத்தில் இருந்து சென்றார் கமல்,

இப்படி ஒரு நிலையில் தோல்வியடைந்த பின்னர் கமல் என்ன செய்தார் என்பதை கமலின் சட்ட ஆலோசகராக இருந்த அர்ஜுன் என்பவர் தனது சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை போட்டுள்ளார். அதில், அந்த நாளில், 21 சுற்றுகளுக்கு முன்னிலை வகித்தபின், வாக்குகளுக்கு ஒரு ரூபாயைக் கூட வழங்காமல், இதுவரை மதிப்பெண் பெறுவதில் உண்மையான நம்பிக்கையின்றி இதைச் செய்ததில் பெருமிதம் அடைந்தேன். கடைசி சுற்றுக்குப் பிறகு, எனது கண்ணீரைத் தடுத்து நிறுத்த முடியவில்லை, தேர்தலில் வெறும் 1000 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியுற்றதற்காக அல்ல, ஆனால் ஊழல் நிறைந்த ரவுடிகளுக்குப் பதிலாக அவரை பிரதிநிதித்துவப்படுத்திய ஒரு சிறந்த தலைவரை இந்த அரசு தவறவிட்டது என்பதற்காக.

-விளம்பரம்-

முடிவுகள் அறிவிக்கப்பட்ட பிறகும் அவர் ஒரு வார்த்தை கூட சொல்லாமல் என்னைப் பார்த்து சிரித்தார். அந்த கண்கள் ஒரு மில்லியன் கதைகளைச் சொன்னன, உரத்த குரலில் அவர் ஒரு மாற்றத்தைக் கொண்டுவருவதில் உறுதியாக இருந்த மக்களுக்கு சேவை செய்ய முடியாமல் போனது மற்றும் தமிழ்நாடு பற்றிய அவரது கனவு காத்திருக்க வேண்டும். இருப்பினும், கமல் ஐயா மீதான அனைத்து அன்பையும் சமூக ஊடகங்களில் பார்த்தால், நாங்கள் போரில் தோற்றிருக்கலாம் என்று நான் நம்புகிறேன்; ஆனால் மாற்றத்திற்கான போர் தொடங்கியது. மாற்றத்திற்கான புரட்சியைத் தூண்டியதற்காக கமல் ஐயாவுக்கு நீங்கள் காட்டிய உங்கள் எல்லா அன்பிற்கும் நன்றி. இது ஒரு ஆரம்பம்,

Advertisement