43 வருடங்களுக்கு முன்பே கமல் படத்தில் இடம்பெற்ற விஜய்யின் திருப்பாச்சி படக்காட்சி.

0
126
kamal
- Advertisement -

விஜய்யின் திருப்பாச்சி பட காட்சியை 43 வருடங்களுக்கு முன்னே கமல் படத்தில் இடம்பெற்றிருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக கலக்கி கொண்டிருப்பவர் விஜய். இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்திருக்கிறது. சமீபத்தில் நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளிவந்த படம் பீஸ்ட். இந்த படத்தை தொடர்ந்து தற்போது விஜய் அவர்கள் வாரிசு என்ற படத்தில் நடித்து வருகிறார்.

-விளம்பரம்-

தற்போது இந்த படத்தின் படப்பிடிப்புகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்த படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகை முன்னிட்டு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனை அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி 67 என்ற படத்தில் விஜய் நடிக்க இருக்கிறார். இப்படி விஜய் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்திருக்கிறது. அந்த வகையில் விஜய் நடிப்பில் இயக்குனர் பேரரசு இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்திருந்த படம் திருப்பாச்சி.

- Advertisement -

திருப்பாச்சி படம்:

இந்த படத்தில் விஜய், திரிஷா உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். இந்த படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய அளவில் வெற்றி அடைந்தது. மேலும் இந்த படத்தில் விஜய் அவர்கள் தன்னுடைய தங்கைக்காக எதையும் செய்வார். அப்படித்தான் இந்த படத்தில் தன் தங்கையை விட அதிகமாக முடி வைத்திருக்கும் பக்கத்து வீட்டு பெண்ணின் தலைமுடியை விஜய் இரவோடு இரவாக வெட்டிக்கொண்டு வருவார்.

திருப்பாச்சி பட காட்சி:

மறுநாள் பார்த்தால் அப்பெண்ணின் தலைமுடி அப்படியே இருக்கும். ஆனால், அந்தப் பெண் என நினைத்து விஜய் அவளுடைய அம்மாவின் தலைமுடியை வெட்டி எடுத்து இருப்பார். இந்த காட்சி ரசிகர்கள் மத்தியில் அதிமாக வரவேற்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் விஜயின் திருப்பாச்சி படத்தின் இந்த காட்சியை 43 வருடங்களுக்கு முன்பே கமல் படத்தில் இடம் பெற்றிருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

-விளம்பரம்-

மங்கள வாத்தியம் படம்:

அதாவது, கமலை நடிப்பில் 1979 ஆம் ஆண்டு வெளிவந்த படம் தான் மங்கள வாத்தியம். இந்த படத்தை சங்கர் இயக்கியிருந்தார். இந்த படத்தை மெல்லிசை மன்னர் எம் எஸ் விஸ்வநாதனின் மகன் கோபிகிருஷ்ணன் தயாரித்திருந்தார். இந்த படத்தில் கமல், ஸ்ரீபிரியா, காந்திமதி, நாகேஷ், விகே ராமசாமி, ஒய் ஜி மகேந்திரன் உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். இந்த படத்தில் எம் எஸ் வி இசைக்கு கண்ணதாசன் பாடல்கள் எழுதியிருந்தார்.

மங்கள வாத்தியம் பட காட்சி:

மேலும், இந்த படத்தில் தன்னை மதிக்காத ஸ்ரீபிரியாவின் தலை முடியை வெட்டி எடுத்து வர சொல்லுவார் காந்திமதி. கடைசியில் பார்த்தால் ஸ்ரீ பிரியாவுக்கு பதில் அவருடன் இருந்த கமலின் குடுமியை வெட்டி எடுத்து வந்திருப்பார்கள். இந்த காட்சியை தான் திருப்பாச்சி விஜயின் திருப்பாச்சி படத்தில் வைத்திருக்கிறார்கள். அதுமட்டும் இல்லாமல் மங்கள வாத்தியம் படம் இன்றோடு வெளியாகி 43 வருடங்கள் நிறைவடைந்து இருக்கிறது.

Advertisement