இவர் நடிகரா இல்லை ஜோசியக்காரரா? சொன்னதெல்லாம் அப்படியே நடக்குதே? வியக்கும் ரசிகர்கள்.

0
10510
- Advertisement -

தற்போது இந்தியாவில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 46,433 தாண்டியது மற்றும் பலியானவர்களின் எண்ணிக்கை 1568 ஆக உயர்ந்து உள்ளது. இதனால் ஊரடங்கு உத்தரவை மே 17 ஆம் தேதி வரை (அதாவது இன்று)நீட்டித்து இருந்தது. ஊரடங்கு உத்தரவால் அனைத்து விதமான படப்பிடிப்புகளும், திரையரங்கள், பொது இடங்கள் என அனைத்தும் மூடப்பட்டு உள்ளது. ஊரடங்கு காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டு உள்ளதால் புதுப்படங்கள் ரிலீஸ் ஆவது தள்ளிப்போய் கொண்டே உள்ளது.

-விளம்பரம்-

இதனால் படத்தின் தயாரிப்பாளர்கள் எல்லாம் சிறு பட்ஜெட் படங்களை நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியிட முடிவு செய்துள்ளனர். இதனால் திரையரங்க உரிமையாளர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு உள்ளது. இருப்பினும் பல்வேறு சர்ச்சைகளுக்கு பின்னர் தமிழ் படங்கள் திரையரங்கில் வெளியாவதற்கு முன்பாகவே OTT தளத்தில் வெளியாக இருக்கிறது.

- Advertisement -

ஏற்கனவே அட்லீயின் ‘அந்தகாரம்’சித்தார்த்தின் ‘டக்கர்’ படங்கள் OTT தளத்தில் வெளியான நிலையில் தற்போது ஜோதிகாவின் ‘பொன்மகள் வந்தால்’ கீர்த்தி சுரேஷ்ஷின் ”பெண்குவியின்” போன்ற படங்கள் OTT தளத்தில் வெளியாக இருக்கிறது. தற்போது பெரும் பிரச்சனையா ஏற்படுத்தியுள்ள இந்த OTT விவகாரம் குறித்து உலக நாயகன் கமல் 7 வருடங்களுக்கு முன்பே கூறியுள்ளார்.

கமலின் விஸ்வரூபம் திரையிடப்பதை நேரடியாக ‘DTH’ ல் வெளியிட போவதாக கமல் அறிவித்திருந்தார். அப்போது கமலுக்கு திரையுலகையும் சேர்த்து ஏகப்பட்ட எதிர்ப்புகள் வந்தன. ஆனால், அப்போது பேட்டி அளித்த கமல் ‘இன்று படத்தை DTH -ல் வெளியிட எதிர்கிறார்களால். இது நான் எடுத்த புது வழி அல்ல என் சுயநலத்திற்காக எடுத்த வழி இல்லை. ஆனால், நாளை இது பொது வழியாக மாறும். புதிய ஊடகங்கள் வரும் ‘என்று கூறியிருந்தார்.

-விளம்பரம்-

கமல் 7 வருடங்களுக்கு முன் சொன்னது போல தற்போது திரைப்படங்கள் OTT தளத்தில் வெளியாக துவங்கி இருக்கின்றனர், இந்த நிலையில் கமல் அன்று சொன்ன விஷயத்தின் விடீயோக்களை ரசிகர்கள் தற்போது சமூக வலைதளத்தில் பகிர்ந்து வருகின்றனர். மேலும், இவர் நடிகரா இல்லை ஜோசியக்காரரா? சொன்னதெல்லாம் அப்படியே நடக்குதே? என்று புகழ்ந்து தள்ளி வருகின்றனர்.

Advertisement