என்னது, சூர்யாவிற்கு கமல் கொடுத்த Rolex வாட்ச் பழைய வாட்ச்சா – அது யாருடையது தெரியுமா ? லோகேஷ் சொன்ன சீக்ரெட்.

0
628
lokesh
- Advertisement -

விக்ரம் படத்தில் சம்பளமின்றி நடித்த சூர்யாவிற்கு அன்பு பரிசியாக கமல் கொடுத்த rolex வாட்ச் புதிய வாட்ச் இல்லை என்று லோகேஷ் கனகராஜ் கூறி இருப்பது பெரும் ஷாக்கை கொடுத்து இருக்கிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனராக திகழ்ந்து கொண்டு இருப்பவர் லோகேஷ் கனகராஜ். இவர் இயக்கிய மாநகரம், கைதி, மாஸ்டர் போன்ற படங்கள் எல்லாம் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்து இருக்கிறது. தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளிவந்து இருக்கும் படம் விக்ரம். இந்த படத்தை கமலின் ராஜ்கமல் இண்டர்நேஷனல் நிறுவனம் உடன் இணைந்து உதயநிதி ஸ்டாலின் தயாரித்து இருக்கிறது. இந்த படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில், காளிதாஸ் ஜெயராம், ஷிவானி, மைனா நந்தினி உட்பட பல நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள். இந்த படத்தைப் பொருத்தவரை ஒரு பழிவாங்கல் கதை என்றாலும் இயக்குனர் அதை சொல்லிய விதமும், படமாக்கிய விதமும் பாராட்டுகளை குவித்து இருக்கிறது.

-விளம்பரம்-

விக்ரம் திரைப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் மாஸாக இருக்கிறது. அதோடு விக்ரம் படம் வெளிவந்து எல்லா இடங்களிலும் முதல் நாளே நல்ல வசூல் வேட்டை நடத்தி இருப்பதாக கூறப்படுகிறது. பிரபலங்கள் பலரும் விக்ரம் படத்தை பார்த்து பாராட்டி வருகின்றனர். மேலும், விக்ரம் படம் வெளியானதிலிருந்து அனைவர் மத்தியிலும் சூர்யாவின் கதாபாத்திரம் குறித்து அதிகமாக பேசப்பட்டு வருகிறது. படத்தின் கடைசி நிமிடத்தில் சூர்யா வந்திருந்தாலும் மிரட்டி சென்றிருக்கிறார்.

இதையும் பாருங்க : அந்த சத்தத்தை இங்க போடாதீங்க, அதான் தான் கோபமாக அதட்டினேன் – வைரலாகும் கமலின் வீடியோ இதோ (அப்படி என்ன செய்தார்கள் ரசிகர்கள்)

- Advertisement -

கலக்கிய சூர்யா :

இது நாள் வரை படத்தில் தன்னுடைய கதாபாத்திரம் குறித்து வாய் திறக்காமல் இருந்த சூர்யா தற்போது முதன்முறையாக விக்ரம் படம் குறித்து ட்வீட் ஒன்றுபோட்டிருந்தார். அதில் அவர் கூறியிருப்பது, அன்புள்ள கமலஹாசன் அண்ணா. விக்ரம் படத்தில் உங்களுடன் நடித்ததன் மூலம் என் கனவு நிறைவேறி உள்ளது. இதை உருவாக்கி கொடுத்த இயக்குனர் லோகேஷ் கனகராஜுக்கு நன்றி என்று பதிவிட்டிருந்தார்.

This image has an empty alt attribute; its file name is 1-163-1024x978.jpg

பரிசுகளை அள்ளிக் கொடுத்த கமல் :

விக்ரம் படத்தில் ஏற்கனவே கைதி படத்தில் வந்த கார்த்தியின் குரல் மட்டும் கேட்கப்பட்டது. விக்ரம் படத்தின் கிளைமாக்ஸ்சிலும் விக்ரம் 2 தொடர்ச்சிக்க்கான அடித்தளத்துடன் தான் முடித்தனர். எனவே, விக்ரம் 2 உருவானால் அதில் கார்த்தயும் இடம்பெறுவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விக்ரம் படத்தின் வெற்றியை தொடர்ந்து கமல் பல பரிசுகளை கொடுத்து இருந்தார். லோகேஷ் கனகராஜுக்கு புதிய சொகுசு கார் ஒன்றை பரிசளித்தார்.

-விளம்பரம்-

கமல் கொடுத்த rolex :

அதுமட்டுமல்லாது விக்ரம் படத்தில் பணியாற்றிய 13 உதவி இயக்குனர்களுக்கும் புதிய பைக் ஒன்றையும் வாங்கி கொடுதற். இப்படி ஒரு நிலையில் சூர்யாவிற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக சூர்யாவிற்கு Rolex கை கடிகாரம் ஒன்றை பரிசாக வழங்கி இருந்தார் கமல். Rolex Day – Date Wrist Watch 128238A K18 என்ற அந்த மாடல் வாச்சின் விலை 54902 அமெரிக்க டாலர் ஆகும். இந்திய மதிப்பில் அதன் விலை 4266612.85 ரூபாய்என்றும் கூறப்பட்டது.

This image has an empty alt attribute; its file name is 1-165-1024x1024.jpg

அது கமல் சாரோட வாட்ச் :

இப்படி ஒரு நிலையில் சூர்யாவிற்கு கமல் கொடுத்த rolex வாட்ச் புதிய வாட்ச் இல்லை என்று லோகேஷ் கனகராஜ் கூறியுள்ளார். இதுகுறித்து பேசியுள்ள அவர் ‘சூர்யா சாருக்கு, கமல் சார் வீட்டுக்கு வரார்ன்னே தெரியாது. சொல்லப்போனால் அது புது வாட்ச் எல்லாம் இல்லை. கமல் சார் மனதுக்கு மிகவும் நெருக்கமான வாட்ச் அது. ரொம்ப வருசமாக அதை வைத்து இருக்கிறார். அதை தான் சூர்யா சாருக்கு கொடுத்தார்’ என்று கூறியுள்ளார் லோகேஷ்.

Advertisement