அந்த சத்தத்தை இங்க போடாதீங்க, அதான் தான் கோபமாக அதட்டினேன் – வைரலாகும் கமலின் வீடியோ இதோ (அப்படி என்ன செய்தார்கள் ரசிகர்கள்)

0
377
Kamal
- Advertisement -

நேற்று (ஜூன் 13) ரத்த தான தினத்தை முன்னிட்டு கமல் தனது மக்கள் நீதி மய்யம் கட்சி தலைமை அலுவலகத்தில் ‘Kamal’s Blood Commune’ என்ற திட்டத்தைத் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பேசிய கமல் ’40 ஆண்டுகளாக பல விஷயங்களை செய்து வருகிறேன். எனது படத்திலும் ரத்த தானம் பற்றி முடிந்தவரை பேசியிருக்கிறேன். இதுபோல ரத்த தானம் செய்யும்போது சாதி மதம் எல்லாம் கடந்து விடுவோம். நம் உடலில் இருந்து இன்னொருவருக்கு ரத்தம் கொடுப்பதன் மூலம் நாமும் சிபிச் சக்கரவர்த்தியாக மாறலாம்.

-விளம்பரம்-

அதற்கான சாத்தியத்தை விஞ்ஞானம் வழங்கியிருக்கிறது. அதை நாம் சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.இந்த ரத்த தானம் என்பது வெறும் ஆரம்பம் மட்டும்தான். முன்பே ஆரம்பக் கல்வியை நாம் கையில் எடுத்தால் என்ன? என்ற யோசனையெல்லாம் வந்திருக்கிறது.இப்படி ஒரு நிலையில் இந்த நிகழ்ச்சியின் இடையில் ரசிகர்கள் சிலர் விக்ரம், விக்ரம் என்று கோஷமிட்டனர்.

இதையும் பாருங்க : திருப்பதியில் காலணி அணிந்து சென்றதில் உள்நோக்கம் இருக்கிறது, நடிகைனா என்ன வேனா செய்வாரா ? நயன்தாராவை கண்டித்த தமிழர் கட்சி தலைவர்.

- Advertisement -

ரசிகர்களால் கடுப்பான கமல் :

இதனால் கொஞ்சம் கடுப்பான கமல், ரசிகர்களை பார்த்து கை காட்டி அதட்டி வாயில் கை வைத்து அமைதியாக இருக்குமாறு செய்கை காட்டினார். இதன் பின்னர் பேசிய கமல் ‘நானும் என் தம்பிகளும் ரத்த தானத்தை ஆரம்பித்ததன் விளைவு, இதுவரை நான்கு லட்சம் லிட்டர் ரத்தத்தை தானமாக வழங்கியிருக்கிறோம். அதை நாங்கள் மற்ற வியாபாரிகளிடம் விற்றிருந்தால் கோடிக்கணக்கில் சம்பாதித்திருக்க முடியும்.

விக்ரத்த நாங்க வித்துக்றோம் :

ஆனால், நாங்கள் அதை செய்யவில்லை. எது வியாபாரம், எது கடமை என்பதைப் இங்கிருப்பவர்கள் புரிந்துகொள்ள வேண்டும். அதனால் தான் இந்த ரத்த தான முகாம் ஆரம்பிக்கும் போது பின்னால் இருந்து ரசிகர்கள் சிலர் ‘விக்ரோம், விக்கிரோம்னு கத்திட்டு இருந்தாங்கன்னா, ரத்தம் நாமளும் விக்ரோம்னு நெனைச்சிப்பாங்க. அதனால் தான் அந்த சத்தத்தை இங்க போடாதீங்க அய்யா, அத நாங்க வித்துக்றோம் என்று கோபமாக கத்தினேன் ‘ என்று பேசியுள்ளார் கமல்.

-விளம்பரம்-

விக்ரம் படத்தின் வசூல் குறித்து கமல் சொன்னது:

இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. மேலும், இதை தொடர்ந்து பேசிய கமல், உங்கள் தெருவில் ஒருவன் பணக்காரன் ஆனால் போதாது. எல்லோருமே சந்தோஷமாக இருக்க வேண்டும். உங்களுக்கு பணத்தைப் பற்றி கவலைப்படாத ஒரு தலைவன் வேண்டும். நான் சொல்லும் போது யாருக்கும் புரியவில்லை. யோவ், என்னய்யா நடிக்க விட்டீங்கன்னா 300 கோடி சம்பாதிப்பேன். அதற்கு சிலர் விமர்சனம் சொன்னார்கள்.ஆனால், அது வந்துட்டு இருக்கு.

300 கோடி வசூலித்து விட்டதா விக்ரம் :

நான் என் கடனை அடைப்பேன், நான் வயிறார சாப்பிடுவேன், என்னுடைய உறவினர்கள், நண்பர்களுக்கு கொடுக்க முடிந்ததை கொடுப்பேன். அதற்குப் பிறகு இல்லை என்றால் இல்லை என்று தைரியமாகச் சொல்லுவேன். எனக்கு வள்ளல் ஆகுவதில் நம்பிக்கை இல்லை, மனிதனாக இருப்பதே போதும் என்று கூறியிருந்தார். இப்படி இவர் கூறியதன் மூலம் விக்ரம் படம் வசூலில் 300 கோடியை நெருங்கிவிட்டது என்பதை நாசுக்காக கமலஹாசன் சொல்லி இருக்கிறார்.

Advertisement