அர்னால்டு,அக்ஷேய் இல்லை..!முதலில் இவர் தான் 2.0 வில்லனாக நடிக்க வேண்டியது..!இயக்குனர் ஷங்கர் ..!

0
560
Shankar

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ்ஸின் பிரம்மாண்ட தயாரிப்பில் உருவாகி வருகிறது ‘2.O’ திரைப்படம். இந்திய அளவில் அதிக பொருட்ச்செலவில் உருவாகி வரும் இந்த திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மாபெரும் எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.

2.0

சிவாஜி,எந்திரன் படத்தை தொடர்ந்து இயக்குனர் ஷங்கர் மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த கூட்டணியில் “2.0” திரைப்படம் மிகவும் பிரமாண்டமாக தயாராகி வருகிறது. இந்த படத்தில் கதாநாயகியாக எமி ஜாக்சன், இந்தி நடிகர் அக்சய் குமார், ரியாஸ் கான் போன்ற பல நடிகர்கள் நடித்துள்ளனர்.

இந்த படத்தில் வில்லனாக ஹாலிவுட் நடிகர் ஆர்னோல்டை ஒப்பந்தம் செய்வதாக இருந்தது ஆனால், அது முடியாமல் போக பாலிவுட் நடிகர் அக்ஷேய் குமாரை படத்தின் வில்லனாக கமிட் செய்தார் இயக்குனர் ஷங்கர். ஆனால், முதலில் கமலை தான் இந்த படத்தின் வில்லனாக நடிக்க ஷங்கர் கமலிடம் கேட்டுள்ளார்.

ஆனால், நடிகர் கமல் ஹாசன் ‘இந்தியன் 2’ படத்தில் மும்மரம் காட்டி வந்ததால் 2.0 படத்தில் நடிக்க மறுத்து விட்டாராம். இந்தியன் 2 வின் படப்பிடிப்பு அடுத்த மாதம் டிசம்பரில் துவங்க உள்ளதாக இயக்குனர் சங்கர் ஆனந்த விகடனில் அளித்த பேட்டி ஒன்றில் கூறியுள்ளாராம்.