சர்கார் சர்ச்சை காட்சிகள் நீக்கம்..!அரசை கண்டித்த நடிகர் கமல்..!

0
127
Kamal

விஜய் நடிப்பில் வெளியாகியுள்ள சர்கார் படத்திற்கு அரசியல் கட்சியின் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது. படத்தில் சர்ச்சையான காட்சிகளை நீக்க வேண்டும் என்று அதிமுக கட்சியினர் போராட்டம் நடத்தி வந்த நிலையில் சர்கார் படத்தின் சில காட்ச்சிகள் நீக்கப்படும் என்று படக்குழு சம்மதம் தெரிவித்துள்ளது.

சர்கார் படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகள் உள்ளதாக அரசுக்கு தகவல் வந்துள்ளது. படத்தில் அரசின் விலையில்லா பொருட்கள் எரிப்பது போல சில காட்சிகள் உள்ளது அந்த காட்சிகளை நீக்க வேண்டும் என்று அதிமுக கட்சியினர் பல்வேறு பகுதிகளில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதை தொடர்ந்து சர்க்கார் படத்தில் இலவச பொருட்கள் எரிக்கும் காட்சியும் மற்ற சில சர்ச்சையான காட்சிகள் நீக்கப்படும் என்றும் படத்தில் வரலட்சுமிக்கு, கோமளவல்லி என்ற பெயரும் பீப் செய்யப்படும் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் சர்கார் படத்தின் விவாகரத்தில் நடிகர் கமல் ஹாசன், படக்குழுவிற்கு ஆதரவாக ட்வீட் செய்துள்ளார். அதில் முறையாகச்சான்றிதழ் பெற்று வெளியாகியிருக்கும் சர்கார் படத்துக்கு,சட்டவிரோதமான அரசியல் சூழ்ச்சிகள் மூலம் அழுத்தம் கொடுப்பது இவ்வரசுக்கு புதிதல்ல.விமர்சனங்களை ஏற்கத்துணிவில்லாத அரசு தடம் புரளும்.அரசியல் வியாபாரிகள் கூட்டம் விரைவில் ஒழியும்.நாடாளப்போகும் நல்லவர் கூட்டமே வெல்லும் என்று பதிவிட்டுள்ளார்.