திராவிடம் குறித்து கமலஹாசன் பேசிய வீடியோவை ரசிகர்கள் கிண்டல் செய்து வரும் பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் கமலஹாசன். இவரை உலக நாயகன் என்றுதான் எல்லோரும் அழைப்பார்கள். இவர் சமீப காலமாகவே சினிமாவில் மட்டும் இல்லாமல் அரசியலில் அதிக ஈடுபாடு காட்டி வருகிறார். அந்த வகையில் இவர் வலதும் இல்லை இடதும் இல்லை மையம் தான் முக்கியம் என்று மக்கள் மைய கட்சி ஒன்றை தொடங்கி இருக்கிறார்.
அது #bigboss மேடையில்ல ஆண்டவரே🤣🤣🤣
— இரமேஷ் – தமிழ் நேயன்❤️❤️❤️ (@awareness4uth) June 6, 2023
பாத்த உடனே எல்லாரும் கை தட்டுறதுக்கு🤣🤣🤣 pic.twitter.com/1ov2Uxsbpb
இந்த கட்சி துவங்கி ஒரு சில ஆண்டுகள் இவர் தீவிரமாக அரசியலில் ஈடுபட்டிருந்தார். படங்களில் கூட நடிப்பதில் இருந்து விலகி இருந்தார். மேலும், எந்த கட்சியும் தேவையில்லை சுயேச்சை என்று சொல்லி கொண்டிருந்த கமலஹாசன் திமுக, காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணியில் சேர்ந்தார். அதுமட்டுமில்லாமல் திராவிடம் மாற்று கருத்து என்று கூறியிருந்த இவரே திராவிடம் குறித்து பேச தொடங்கினார். இதனால் பலருமே கமலஹாசனின் அரசியல் எம்பி வரை தான் என்று கூறியிருந்தார்கள்.
பேட்டியில் கமல் சொன்னது:
இதனை அறிந்து கொண்ட கமலஹாசனும் சமீப காலமாகவே படங்களிலும், நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதிலும் கவனம் செலுத்தி வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் கமலஹாசன் அவர்கள் ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு பேட்டி ஒன்று அளித்து இருக்கிறார். அதில் அவரிடம் தொகுப்பாளர், தமிழ்நாட்டின் திராவிடமாக இருந்த நீங்கள் தற்போது தென்னிந்தியாவின் திராவிடமாக திகழ்கிறீர்கள் என்று கூறியதற்கு கமலஹாசன் குறுக்கிட்டு திராவிடம் என்பது தமிழ்நாட்டிற்கு மட்டும் இல்லை.
அய்யோ அது பிக்பாஸ் செட் இல்ல ஆண்டவரே 😂😂😂 pic.twitter.com/2qgTYKsszF
— Nethish 🚩🛕 (@nethishkarthik) June 5, 2023
கிண்டல் செய்யும் ரசிகர்கள்:
இந்தியாவிற்கு பொதுவான ஒன்று என்று கூறி பார்வையாளர்களை உருவத்தை தூக்கிப் பார்த்திருக்கிறார். ஆனால், அங்கிருந்த ஒருவர் மட்டும் தான் கமல்ஹாசன் பேசியதற்கு கைதட்டி இருக்கிறார். தற்போது இந்த வீடியோ தான் இணையதளத்தில் வைரல் ஆகி வருகிறது. இதை பார்த்த ரசிகர்கள் பலரும் பங்கமாக கலாய்த்து வருகிறார். அதிலும் சிலர், இது ஒன்னும் பிக்பாஸ் நிகழ்ச்சி இல்லை. நீங்கள் நுழைந்த உடனே கைதட்டுவதற்கும், பேசும்போதெல்லாம் கைதட்டுவதற்கும் என்றெல்லாம் கலாய்த்து வருகிறார்கள்.
கமல்ஹாசன் திரைப்பயணம்:
தமிழ் சினிமா உலகில் தன்னுடைய நடிப்பின் மூலம் புகழின் உச்சத்திற்கு சென்றவர் உலக நாயகன் கமலஹாசன். இவர் தமிழ் சினிமா உலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது உலக நாயகனாக அவதாரம் எடுத்து உள்ளார். சினிமா திரை உலகில் தன்னுடைய கடுமையான உழைப்பாலும், முயற்சியாலும் இந்த அளவுக்கு விஸ்வரூபம் எடுத்து இருக்கிறார் கமலஹாசன். இவர் சினிமா துறையில் நுழைந்து 60 ஆண்டுகள் ஆகியது.
ஆண்டவரே
— Dr.Ravi (@imravee) June 5, 2023
இது National Media
நீங்க திரும்பி பார்த்ததும் கைத்தட்ட
Bigg Boss stage ல இருக்கும் setup audience கிடையாது
🤣🤣#PoliticalComedian pic.twitter.com/kl9rrA1od7
கமல் நடித்த படங்கள்:
இவர் சினிமா துறையில் பல சாதனைகளை புரிந்தவர். எந்த கதாப்பாத்திரமாக இருந்தாலும் அதில் தன்னை ஆட்படுத்திக் கொண்டு அதை போலவே செய்வதும், சண்டைக்காட்சிகள், சாகச காட்சிகள் என எதுவாக இருந்தாலும் டூப் போடமால் நடிப்பார். இவர் இந்தியத் திரைப்பட நடிகர், திரைக்கதையாசிரியர், பாடலாசிரியர், பின்னனிப் பாடகர், நடன அமைப்பாளர், இயக்குனர், தயாரிப்பாளர், எழுத்தாளர், அரசியல்வாதி என பல முகங்களை கொண்டவர்.