‘அறம்’ குறித்து கமல் போட்ட பதிவு , காண்டாகி திட்டி தீர்க்கும் விக்ரமனின் ரசிகர்கள். அவர் எதுக்கு போட்டு இருக்கிறார் பாருங்க.

0
437
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 6ல் அசீம் பட்டத்தை வென்றது பலரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. விக்ரமன் தான் வெல்வார் என்று பலரும் எதிர்பார்த்துவந்தனர். இப்படி ஒரு நிலையில் அசீம் வென்றதை தொடர்ந்து ரசிகர்கள் பலரும் இந்த முடிவால் அதிருப்தி அடைந்து இருக்கின்றனர். அப்போ அடாவடியாக ஆடி, மற்றவர்களை இழிவுபடுத்தி விளையாடினால் பிக் பாஸில் வென்று விடலாமா என்று கேள்விகளை எழுப்பி வருகின்றனர். மேலும், விஜய் டிவிக்கு எதிராக Boycott விஜய் டிவி என்று ட்விட்டரில் ட்ரெண்ட் செய்து வரும் ரசிகர்கள் விக்ரமன் ஹேஷ் டேக்கையும் ட்ரெண்ட் செய்து வந்தனர்.

-விளம்பரம்-

அதே போல பொதுவாக வெற்றியாளரை தான் முதலில் பேச வைப்பார்கள். ஆனால், அஸீமிடன் கோப்பையை கொடுத்துவிட்டு கமல், விக்ரமனை தான் முதலில் பேச வைத்தார். இதையெல்லாம் காரணமாக சொல்லி நெட்டிசன்கள் பலரும் கமலுக்கே அசீம் வென்றது பிடிக்கவில்லை என்பது போல கூறி வருகின்றனர். இப்படி ஒரு நிலையில் கமல் போட்ட பதிவு விக்ரமன் ரசிகர்களை உசுப்பிவிட்டு இருக்கிறது.

- Advertisement -

சமீபத்தில் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை போட்டுள்ள கமல் ‘அறம் எங்கே செல்லுபடியாகும் என்று யோசித்து, இந்திய விடுதலைப் போரில் மறம் என்கிற ஆயுதத்தை ஏந்தி வீரம் காட்டியவர் நேதாஜி என உயர்ந்த சுபாஷ் சந்திரபோஸ் அவர்கள். அவரது 126 ஆவது பிறந்த நாளில் அவரது வீரத்தைப் போற்றுவோம்.’ என்று குறிப்பிட்டுள்ளார். கமல் போட்டு இருக்கும் இந்த பதிவியில் இருக்கும் ‘அறம்’ என்ற ஒற்றை சொல்லை வைத்து நெட்டிசன்கள் பலரும் விக்ரமனுடன் இந்த பதிவை ஒப்பிட்டு கமலை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

இந்த சீசன் ஆரம்பித்ததில் இருந்தே அசீம் மற்றும் விக்ரமனுக்கு தான் அடிக்கடி சண்டை வந்தது. அப்படி சண்டை வரும் போதெல்லாம் வார இறுதியில் பஞ்சாயத்து செய்யும் கமல், பெரும்பாலும் விக்ரமன் பக்கம் நின்று தான் நியாயம் பேசினார். விக்ரமன் ஒரு அரசியல் கட்சியை சேர்த்தவர் என்பதால் தான் விக்ரமனுக்கு கமல் ஆதரவாக பேசுகிறார் என்று அடிக்கடி அசீம் ரசிகர்கள் விமர்சனம் செய்து வன்தனர்.

-விளம்பரம்-

அசிம், விக்ரமன் ரசிகர்களின் சூடாக்கும் விமர்சனப் பதிவுகளுக்கிடையே, பிக் பாஸ் பைனலில் கமல்ஹாசன் அணிந்திருந்த காஸ்டியூமும் சமூக வலைதளங்களில் படு வைரலாகியது. `கறைபடிந்த தீர்ப்பை சொல்லப்போகிறோம் என்பதற்கான குறியீடுதான் இந்த ட்ரெஸ்’… ‘வின்னர் அசிம் என்பதைத்தான் ஆண்டவர் இப்படி சிம்பாளிக்கா உணர்த்துறார்’ என்றெல்லாம் கமலின் ஆடையை வைத்தே Decode செய்தனர்.

பலரும் விக்ரமன் தான் வெற்றிபெறுவார் என்று எதிர்பார்த்த நிலையில் அசீம் வெற்றி பெற்றது பெருத்த அதிர்ச்சியை கொடுத்து இருந்தது. அதே போல பிக் பாஸ் கோப்பையை கமல், விக்ரமனை வைத்து தான் அஸீமிற்கு கொடுக்க வைத்தார். கோப்பையை வாங்கியதும் அசீம் கொண்டாட்டத்தில் ஆராவாரம் செய்ய அஸீமிடம் இருந்து ஒதுங்கி நின்ற கமல், விக்ரமன் அருகில் சென்று அவரை ஆஸ்வாசப்படுத்தினார்.

அதே போல என்னதான் அசீம் பட்டத்தை வென்றாலும் கடந்த இரண்டு தினங்களாக விக்ரமன் தோற்றத்தை பற்றி தான் சமூக வலைதளத்தில் பேசி வருகின்றனர். இப்படி ஒரு நிலையில் கமல் போட்டு இருக்கும் இந்த பதிவியில் இருக்கும் ‘அறம்’ என்ற ஒற்றை சொல்லை வைத்து நெட்டிசன்கள் பலரும் விக்ரமனுடன் இந்த பதிவை ஒப்பிட்டு கமலை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

Advertisement