கமல்ஹாசனால் கடுப்பாகியுள்ள விஜய்சேதுபதி – உண்மையை போட்டு உடைத்த இயக்குனர் சீனு ராமசாமி.

0
631
seenu
- Advertisement -

கமல் படத்தின் ரிலீசால் விஜய் சேதுபதி கடுப்பாகி இருந்த சுவாரசியமான தகவலை சீனுராமசாமி முதன் முறையாக பகிர்ந்து இருக்கும் பேட்டி தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனராக திகழ்ந்து கொண்டு இருப்பவர் லோகேஷ் கனகராஜ். இவர் இயக்கிய மாநகரம், கைதி, மாஸ்டர் போன்ற படங்கள் எல்லாம் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்து இருக்கிறது. தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளிவந்து இருக்கும் படம் விக்ரம். இந்த படத்தை கமலின் ராஜ்கமல் இண்டர்நேஷனல் நிறுவனம் உடன் இணைந்து உதயநிதி ஸ்டாலின் தயாரித்து இருக்கிறது.

-விளம்பரம்-
விக்ரம் படத்தில் விஜய் சேதுபதி | Vijay Sethupathi In Vikram

இந்த படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில், காளிதாஸ் ஜெயராம், ஷிவானி, மைனா நந்தினி உட்பட பல நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள். இந்த படத்தைப் பொருத்தவரை நடித்து பழிவாங்கல் கதை என்றாலும் இயக்குனர் அதை சொல்லிய விதமும், படமாக்கிய விதமும் பாராட்டுகளை குவித்து இருக்கிறது.விக்ரம் திரைப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் மாஸாக இருக்கிறது. பிரபலங்கள் பலரும் விக்ரம் படத்தை பார்த்து பாராட்டி வருகின்றனர்.

- Advertisement -

கமல் கொடுத்த பரிசு:

மேலும், விக்ரம் படத்தின் வெற்றியை தொடர்ந்து கமல் பல பரிசுகளை கொடுத்து இருந்தார். லோகேஷ் கனகராஜுக்கு புதிய சொகுசு கார் ஒன்றை பரிசளித்தார். அதுமட்டுமல்லாது விக்ரம் படத்தில் பணியாற்றிய 13 உதவி இயக்குனர்களுக்கும் புதிய பைக் ஒன்றையும் வாங்கி கொடுத்து இருக்கிறார் கமல். பின் சூர்யாவிற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக Rolex கை கடிகாரம் ஒன்றை பரிசாக வழங்கி இருந்தார் கமல். Rolex Day – Date Wrist Watch 128238A K18 என்ற அந்த மாடல் வாச்சின் விலை 54902 அமெரிக்க டாலர் ஆகும்.

விக்ரம் படத்தின் சாதனை:

அதுமட்டும் இல்லாமல் இந்தப் படம் பாக்ஸ் ஆபீஸில் வரலாறு காணாத வெற்றியை பெற்றிருக்கிறது. தமிழ் திரைப்பட உலகில் இதுவரை இல்லாத அளவுக்கு கலெக்ஷன் செய்த திரைப்படம் என்ற சாதனையும் விக்ரம் படம் படைத்திருக்கிறது. இதனால் படத்தை தயாரித்த கமலஹாசனும், இயக்குனர் லோகேஷ் கனகராஜூம் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கின்றனர். விக்ரம் படத்திற்கான வசூல் கமலுக்கு மட்டுமில்லாமல் தியேட்டர் உரிமையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் உள்ளிட்டோருக்கும் பெரும் மகிழ்ச்சியை கொடுத்திருக்கிறது.

-விளம்பரம்-

இயக்குனர் சீனு ராமசாமி அளித்த பேட்டி:

அண்மை காலமாக வெளியான பெரிய படங்கள் எதிர்பார்த்த லாபங்களை கொடுக்காததால் அவர்களும் மனக்குமுறலில் இருந்தார்கள். அதற்கெல்லாம் ஈடுகொடுக்கும் வகையில் இந்த படம் அமைந்துவிட்டது. இந்த நிலையில் விக்ரம் படம் குறித்து இயக்குனர் சீனு ராமசாமி அவர்கள் சில சுவாரசியமான விஷயங்களை பகிர்ந்திருக்கிறார். அதில் அவர் கூறியிருந்தது, கமல்ஹாசனின் மன்மதன் அம்பு படமும் நான் இயக்கிய விஜய் சேதுபதியின் தென்மேற்கு பருவகாற்று படமும் ஒரே நாளில் ரிலீஸ் ஆகி இருந்தது.

கமலால் விஜய் சேதுபதி கடுப்பான காரணம்:

அப்போது உதயம் தியேட்டருக்கு பைக்கில் சென்ற நானும், விஜய் சேதுபதியும் தங்களின் படங்களுக்கு ரசிகர்கள் செல்கிறார்களா? என்று பார்த்தோம். அதில், 2 பேர் மட்டுமே தென்மேற்கு பருவக்காற்று படத்திற்கு டிக்கெட் எடுத்திருந்தார்கள். பெரும்பாலான மக்கள் கமலின் மன்மதன் அம்பு படத்திற்கு சென்றிருந்தார்கள். இதனால் அப்போது விஜய் சேதுபதி பயங்கர கடுப்பானார். ஆனால், தற்போது தன்னுடைய கடும் உழைப்பால் கமலஹாசனுக்கு வில்லனாக நடிக்கும் அளவிற்கு விஜய் சேதுபதி உயர்ந்திருப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது என்று கூறியிருக்கிறார்.

Advertisement