நேர்மை அரசியலுக்கு கொடை கொடுங்கள் என்று ஊரறிய,உலகறிய கமல் நிதி கேட்டு அறிக்கை – சம்பாதிச்ச பணம் எல்லாம் ?

0
487
kamal
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் என்றென்றும் உலக நாயகனாக கலக்கிக் கொண்டிருப்பவர் கமலஹாசன். இவர் நடிகர் மட்டுமில்லாமல் தயாரிப்பாளர், தொகுப்பாளர், அரசியல்வாதி என பன்முகம் கொண்டு விளங்குகிறார். அதோடு விஜய் டிவியில் வெற்றிகரமாக ஐந்து ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சியை கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்கி வருகிறார். தற்போது பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி டிஸ்னி ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகி வருகிறது. இதனிடையே கமல் அவர்கள் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் விக்ரம் என்ற படத்தில் நடித்து இருக்கிறார்.

-விளம்பரம்-

இந்த படம் கூடிய விரைவில் வெளியாக இருக்கிறது. இந்த படத்தின் ரிலீசுக்காக ரசிகர்கள் எல்லோரும் ஆவலுடன் காத்து கொண்டு இருக்கின்றனர். அதுமட்டும் இல்லாமல் மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவராகவும் கமல்ஹாசன் இருந்து வருகிறார். நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் மக்கள் நீதி மையம் கட்சி சார்பாக பல இடங்களில் போட்டிருந்தார்கள். ஆனால், பரிதாபமாக தோல்வியை சந்தித்து இருந்தார்கள். இருந்தும் கமலஹாசன் தன்னுடைய கட்சியை முன்னேற்ற விடாமல் போராடி வருகிறார்.

- Advertisement -

மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் கமலஹாசன் அறிக்கை:

இந்த நிலையில் மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் கமலஹாசன் அவர்கள் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில் அவர் கூறி இருப்பது, மதம் மற்றும் ஊழல் வெறி எல்லா பக்கமும் வாரிசுகளை வளர்த்து வருகிறது. அதோடு எல்லாத்தையும் வாரிச் சுருட்டும் வெறி என தமிழகம் சீரழிகிறது. விலைவாசியை கட்டுப்படுத்த தரமான கல்வி, சிறந்த மருத்துவம், அதிக வேலைவாய்ப்புகள், தொழில் செய்ய கடன் உதவிகள் கொடுத்திருந்தால் உங்கள் வாழ்க்கைக்கு எந்த இலவசங்களும் இல்லாமல் தானே மேலே வந்திருக்கும்.

பிற தொகுதி கட்சி பற்றி கூறியது:

இதையெல்லாம் செய்தார்களா இவர்கள்? மேலும், என் தொகுதி எம்எல்ஏ பரம அயோக்கியன், பத்து பைசா திருட மாட்டார்? என்று உங்களாலும் சொல்ல முடியாது. என்னாலும் சொல்ல முடியாது. இதுதான் நிதர்சனம். இதை மாற்ற வேண்டும். நான் வாழும் காலத்திலேயே தமிழகத்தில் மாற்றம் நிகழும். தமிழர்கள் வாழ்வு ஏற்றம் ஏற்படும். இது என் கனவு அல்ல. இது என் பிரயத்தனம். இதை நானும், என் சகாக்களும் நிச்சயம் நடத்தி காட்டுவோம். மக்களுக்கான அரசியலை செய்யும் இந்த போரில் பெட்டி பெட்டியாக (மன்னிக்கவும்) பணம் வைத்திருக்கக்கூடிய அசுர பலம் வாய்ந்த ஊழல்வாதிகளை எதிர்த்து களத்தில் நிற்கிறோம்.

-விளம்பரம்-

எங்கள் கட்சியின் தகுதி:

இவர்களை எதிர்த்து போராட எங்களிடம் துணிச்சல், திறமை, நேர்மை இருக்கிறது. ஆனால், போதிய பணம் இல்லை. என் தொழிலில் சம்பாதிக்கும் பணத்தில் முறையாக வரி செலுத்திய போக எஞ்சிய தொகையில் பெரும் தொகையை நான் மக்களுக்கான அரசியலுக்கு தான் செலவிடுகிறேன். என்னுடைய கட்சி ஸ்வீட் பாக்ஸ் கூட்டணிகளை அமைத்து அதிகாரத்தில் இடம் பிடித்து ஊழல் உறவுகள் செய்யவில்லை. ஜாதியை விசாரித்து, பணக்கார வேட்பாளரா என்று பார்த்து நான் சீட்டுக் கொடுத்து தேர்தலை எதிர்கொள்ள வில்லை. இவற்றை செய்யப் போவதுமில்லை. மக்களுக்கான அரசியலை செய்ய மக்களாகிய உங்களிடம் உரிமையுடன் கொடை கேட்கிறோம்.

நன்கொடை கொடுங்கள் என்று கமல் கூறியது:

நேர்மை அரசியலுக்கு நன்கொடை தாருங்கள் என்று ஊர் அறிய, உலகறிய கேட்கிறோம். இந்த பங்களிப்பு நீங்கள் நலமாக வாழ மட்டுமல்ல. உங்கள் தலமுறையும் நல்ல சூழலில் வாழ்வதற்கும் நீங்கள் விரும்புகிற நேர்மையான அரசும், நல்ல நிர்வாகம் அமைவதற்கும் செய்யும் முதலீடு. இங்கே விதைத்ததை நீங்களும் உங்கள் குடும்பமும் நிச்சயம் அறுவடை செய்யும். நன்கொடை தர www.maiam.com/donate என்ற இணையதள முகவரியை பயன்படுத்துவோம் என்று கமல் கூறியிருக்கிறார். இப்படி கமல் வெளியிட்டுள்ள அறிக்கை தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Advertisement